திருத்தப்படும் ரியல் எஸ்டேட் துறை
2006, 2008 ஆண்டுகளில் தமிழகத்தில் ரியல் எஸ்டேட் அபார வளர்ச்சியில் இருந்தது எங்கு பார்த்தாலும் சைக்கிள் பஞ்சர் ஒட்டுபவர் முதல் இளநீர் கடைகாரர் வரை ரியல் எஸ்டேட் செய்து கொண்டு இருந்த நிலைமை அப்போது இருந்தது, தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்லா பகுதிகளிலும் .டி பார்க், சிப்காட், சிறப்பு பொருளாதார மண்டலங்கள் பல வித அறிவிப்புகள் வெளியாகி இருந்தன அவையெல்லாம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் அதிகப்படியான வீடுகள் மற்றும் வீட்டுமனை தேவைகள் இருக்கும் என்பதன் அடிப்படையில் பல பெரிய, சிறிய, பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் களம் அமைத்து எல்லா பக்கங்களிலும் வேகமாக செயல்பட்டு வந்தனர் அதனால் எங்கு பார்த்தாலும் ரியல் எஸ்டேட் போர்டு விளம்பரங்கள், ஆன்லைன் விளம்பரங்கள், டி.வி, ரேடியோ விளம்பரங்கள் என எங்கு பார்த்தாலும் ரியல் எஸ்டேட் மயமாகவே காட்சியளித்த காலம் உண்டு அடிப்படை உள்கட்ட அமைப்பு தமிழகத்தில் இல்லாமல் அதாவது நல்ல சாலைகள், குடிநீர், மின்சாரம் போன்றவை இல்லாமல் சிப்காட், SEZ, .டி பார்க் போன்ற திட்டங்களுக்கு புதிய நிறுவனங்கள் வர முடியாமல் போன காரணங்களால் எதிர்பார்த்த அளவிற்கு ரியல் எஸ்டேட்டிற்கான தேவை ஏற்படவில்லை. அதனால் கோடிக்கனக்கான பணங்கள் முடங்கி ரியல் எஸ்டேட் ஒரு தேக்க நிலையை சந்தித்தது. அப்போதிலிருந்து ரியல் எஸ்டேட்டில் பணத்தை முதலீடு செய்தால் மிக சீக்கிரமாக முதலீடு இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கை பொய்த்து கொண்டிருந்தது.
   ரியல் எஸ்டேட் முதலீடும் மற்ற முதலீடுகளை போல பலன்தரும் என்ற எதார்த்த நிலைக்கு மற்றவர்கள் வந்து கொண்டிருந்தனர். பெரிய ரியல் எஸ்டேட் முதலாளிகள், பெரிய அரசியல் வாதிகள் மற்றும் அதிகாரிகளுடன் கை கோர்த்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவதால் அதிகபடியான விதி மீறல்கள் சுற்றுசூழல் பாதுகாப்பிற்கு எதிரான கேடுகள் குறித்த புகார்கள் மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது சென்னை, போரூர் அருகிலுள்ள மௌளிவாக்கம் பலமாடி கட்டிடம் தானாகவே இடிந்து விழுந்த சம்பவம் இன்றும் மக்கள் மனதை விட்டு அகலாமல் உள்ளது. தற்போது அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை திருத்தப்பட்டு கொண்டிருப்பதை உணர முடிகிறது.
GST தற்போது நடைமுறைக்கு வந்த ரியல் எஸ்டேட் மசோதா சட்டம் பினாமி சட்டம் ரூ.1000, 500 நோட்டுக்கள் தடை போன்ற சட்ட திருத்தங்கள் ரியல் எஸ்டேட்டில் தவறான முதலீடுகளை சரிபடுத்துவதோடு வாடிக்கையாளருக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல நல்ல அம்சங்களை கொண்டுள்ளது. தற்போது அங்கீகாரம் இல்லாத மனைகள் பத்திரப்பதிவு ஒழுக்குபடுத்தப்பட போவதாலும் பொதுமக்கள் அதிக அளவில் பயனடைவர்.
தற்போதைய சூழலில் நடுத்தர மற்றும் கடைநிலை ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் தொலைநோக்கு அடிப்படையில் ரியல் எஸ்டேட் துறை திருத்தமடைவதை கண்டு தங்களை அதற்கேற்றார்போல் தகவமைத்து கொள்வதின் மூலமும் அதிகப்படியான உழைப்பையும், நேர்மையையும் முதலீடாக வைத்து ஒரு CORPORATE கட்டமைப்புக்குள், ரியல் எஸ்டேட் நடத்துவதன் மூலமும் இனி எதிர்வருங்காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் நிலை நிறுத்த முடியும்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
மேனேஜிங் டைரக்டர்

பிராப்தம் ரியல்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்.


 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற ரியல் எஸ்டேட் சூப்பர் ஸ்டார் சா.மு.பரஞ்சோதி பாண்டியன் அவர்களின் பிராப்தம் ரியல் எஸ்டேட் கிளினிக் நெ.14, வெங்கடேஸ்வரா நகர், அறிஞர் அண்ணா பஸ்டாண்டு, மதுராந்தகம் -603306. ஆலோசனை நேரம் திங்கள் முதல் சனி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை. அணுகலாம். தொடர்புக்கு : நீலவேணி 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
 
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#இனாம்கள் #மானியம்# உயில் #ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா#கடன் #அடமானம் #mortage#கடலூர்#கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம்#குத்தகை #வாடகை #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம்#சான்றிதழ்#சிட்டா #அடங்கல் #புலப்படம் #நிலஅளவை #சர்வே#ஜப்தி #நத்தம் #மானாவாரி #நன்செய் #புன்செய்#நிலத்தின் #குரல்#பசலி #ஜமாபந்தி #வட்டாடசியர்#பஞ்சம நிலம் #பூமிதான நிலம் #அனாதீன நிலம்#பத்திரபதிவு#பத்திரபதிவு #online#பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை #எதிர்மறைசுவாதீனம்#பிராமணர்கள் #மானிய #நிலங்களை #அதிகம் #அனுபவித்த#மதிப்பிடுதல் #valuation #valdation#மரக்கட்டை#வட்ட #கணக்குகள்#வட்டார #வழக்கில் #ரியல் #எஸ்டேட் #பதங்கள்#வருவாய் #துறை #ஆவணங்கள் #legal #documents #rights#வாரிசு #online #பத்திர #பதிவுதுறைResources #agricultureland
#செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம் #பாகபிரிவினை #உயில் 

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்