தவறான பத்திரங்கள்,பிழையுள்ள பத்திரங்கள் சட்ட குழப்பமுள்ள பத்திரங்களை மற்றும் போலி பத்திரங்கள் உருவாகாமல் இருக்க தமிழக அரசு பிரெஞ்சு பதிவு சட்டத்தின் கீழ் பாண்டிசேரியில் நடைமுறையில்இருந்த நொத்தேர்(Notaire) லைசென்சு அமைப்பு முறையை கொண்டு வர வேண்டும்!!


 தமிழகத்தில் தற்பொழுது அதிக அளவில் போலி பத்திரங்கள் தவறான பத்திரங்கள் பிழையான பத்திரங்கள் சட்ட குழப்பத்தை ஏற்படுத்தும் பத்திரங்கள் இரண்டு முறைகளுல் தான் உருவாகின்றன

ஒன்று வருவாய் துறை ஆவணங்களான எஸ் எல் ஆர்,யூடிஆர் போன்றவற்றின் நிலையான பதிவேடுகளையும் நத்தம் நிலவரி திட்ட நிலையான பதிவேடுகளையும் பட்டா,சிட்டா,அடங்கல், நத்தம் பட்டா போன்றவற்றை சர்வே எண்கள் பரப்பு போன்றவற்றை திருத்தியோ வேறு நபர் சேர்த்தோ அல்லது அதில் உள்ள ஒரு நபரின் பெயரை நீக்கியோ வேறு பெயர் சார்பதிவகத்தில் பதிவிற்கானஆவணங்களாக தாக்கல் செய்து மேற்படிபத்திரங்களை உருவாக்கிவிடுகின்றனர்

இரண்டாவதாக பதிவு துறை சார்பதிவகத்தில் தவறான வாக்குமூலம் அளித்தல் முன் பத்திரத்தில் திருத்தி அதனடிப்படையில் புதிய பத்திரங்கள் பதிவுசெய்தல் பதிவுசெய்யபடாத போலியான கூரசீட்டு வழியுரிமை பொதுசுவர பொது வழி ஒப்பந்தங்களை புதிய பத்திரத்தில் சேரத்துவிடல் copy of the document போட்டு அதன்படி போஙி பத்திரங்கள் உருவாக்குதல் ,ஆள்மாறாட்ட செய்தல் போன்றவற்றின் மூலமாக போலி பத்திரங்கள் முதற்கொண்டு பிழையான தவறான சட்ட குழப்பம் உள்ள பத்திரங்களை உருவாகிவிடுகின்றனர்

 சரி இவற்றை எல்லாம் எப்படி தடுப்பது எப்படி குறைப்பது என்பதை வரிசையாக பார்ப்போம்.

1)பதிவுத்துறை ஊழியர்களைப் பொறுத்தவரை வருவாய்துறை ஆவணங்களின் அடிப்படையில்தாக்கல் செய்யும் பத்திரங்களில் இருக்கும் குழப்படிகள் குளறுபடிகளை பற்றி அதிக தெளிவுகள் (clarity)இல்லாதவர்களாக இருக்கிறார்கள் சாரபதிவக ஊழியர்களுக்கு சரவே மற்றும் வருவாய்துறை நில உரிமைகள் பற்றி விழிப்புணரவு கள் பயிற்சிக்ள் ஏற்படுத்தி தரவேண்டும் அப்படி செய்வதன் மூலம் போலி பத்திரங்கள் உருவாக்கும் நபர்கள் தாக்கல் செய்யும் வருவாய்துறை ஆவணங்களை பொறுத்தவரை எளிதில் மனநிறைவு அடையாதவராய் சார்பதிவாளர் இருப்பார் அதன் மூலம் பல தவறான பத்திரங்கள் பதிவாவது தவிர்க்கபடும்

2)மேலும் சார் பதிவகத்தில் அதிக அளவு கூட்டம் ,பணிச்சுமை,அவசரம்,  நெருக்கடிகள் போன்ற காரணங்களால் பதிவுக்கு வருகின்ற பத்திரங்களை நிதானமாக கூராய்வு செய்து சோதனையிட்டு பார்க்கக்கூடிய அளவிற்கு நேரமின்மையாலும் பதட்டாத்தாலும் அதிக அளவு தவறான ,சட்டக் குழப்பம் உள்ள .பிழையான ,போலி பத்திரங்கள் உருவாகின்றன அதனால் சொத்துரிமை மாறும் பதிவுகளுக்கு அதிக கூராய்வு செய்ய வேண்டும்

3)பதிவின் போது சார் பதிவாளர் நில உரிமை உள்ளதா என்று ஆய்வு செய்ய அதிக அக்கறை எடுக்க கூடாது பதிவின் நோக்கம் நிறைவேறும் சான்று மட்டும் இருந்தால் போதும் என்ற ஜமீன் இனாமதாரார  நில உடைமையாளர்களுக்கு சாதகமான அந்த காலத்து சட்டம் இப்பொழுது பொருந்தாது இப்பொழுது மக்கள் அனைவரும் கஷடபட்டு சொத்து வாங்குகிறார்கள் சொத்து விற்கிறார்கள் எனவே பதிவின் போது எழுதி கொடுப்பவரிக்கு நில உரிமை பற்றிய கூராய்வை  சார்பதிவாளர் செய்ய வேண்டும் என்று சட்டம் மாற்றபட வேண்டும்

4)மேலும் சாரபதிவகத்தில் பிறப்பு இறப்பு பதிவு ,விவாகரத்து பதிவு, திருமணப்பதிவு ,ஜீவனாம்ச பதிவு, தத்தெடுத்தல் பதிவு, உயில் பதிவு, வீட்டிற்குச் சென்று உயில் பதிவு,உயில் பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கும் பதிவு,தொழில் நிறுவனங்கள் பதிவுகள் மற்றும் சொத்துக்கள் கை மாறாத பதிவுகள் எல்லாவற்றையும் தனியாக ஒரு இரண்டாம் நிலை சார்பதிவாளாரலும்  சொத்து கைமாறும் பதிவுகளை முதல் நிலை சார்பதிவாளரும் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அப்படி சார் பதிவுக  வேலைகள் இரண்டாக பிரிக்கப்பட்டு இருந்தால் பதிவு வேலைகள் அவசரகோலத்தில் நடக்கும் வாய்ப்புகள் இல்லாமல் பிழையில்லாமல் நடக்க வாய்ப்பிருக்கிறது

5)பொதுமக்களே பத்திரங்களை வரைவு செய்து ஆவணங்களை தயார் செய்து சார்பதிவகத்தில் தாக்கல் செய்யலாம்  தேவைபட்டால் இணையதளத்தில் பதிவுத்துறை  கொடுத்திருக்கின்றன வரைவு (Draft)பார்த்து பொதுமக்களே பத்திரங்களை எழுதலாம் என்று பதிவு துறை இடைதரகரை ஒழிக்கின்ற நல்ல நோக்கத்தில் பொதுமக்களை ஊக்கப்படுத்துகிறது. ஆனால் மக்களின் நாடி பிடித்து பார்க்காமல் அரசு அதிகாரிகள் டேபிளில் உட்காரந்து கொண்டு ரமணா படத்தில் சமோசா சாப்பிட்டு கொண்டு முடிவு எடுப்பாரகளே அப்படிதான் இந்த முடிவை எடுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்

6)பட்டா சிட்டா நில உரிமைகள் பள்ளிகூட கல்வியில் இதுவரை பாடதிட்ட்தில் இல்லை (பாட திட்டத்தில் வைத்தால் மக்கள் விழித்தால் மக்களின் கேள்விகளுக்கு ரெவின்யூ துறை ஆட்டம் கண்டு விடும் அதனாலேயே பாடமாக்காமல் இருக்கிறதுஅதனை தனிகட்டுரையில் எழுதுகிறேன்)நில உச்சவரம்பு நில எடுப்பு ஜமீன் ஒழிப்புஇனாம் ஒழிப்பு போன்றவற்றை பற்றி உயர்கல்வி கற்றவருக்கே தெரியாது
மேலும் சொத்துரிமை மாற்றுசட்டம்,முத்திரைதாள் சட்டம் உட்பட் பல சட்டங்கள அடிப்படையில் தான் ஆவணங்கள்Instrument) உருவாக்கபடுகின்றன

7).இப்படி முறையான ஒரு சட்ட ஆவணத்தை சாதாரண பொதுமக்கள் இணையதளத்தில் இருக்கும் மாதிரியை (படித்து தெரிந்து கொள்ளுங்கள என்று சொல்லாம்)பாரத்து எழுதி தாக்கல் செய்யலாம் என்று அதற்கு சட்ட அந்தஸ்தை விவரம் அறியாத மக்களுக்கு கொடுப்பது சரியானதாக இருக்காது.மருத்துவ துறையிலும் இதே போல் மாதிரிகள் பாரத்து மருத்துவம் பாரத்து கொள்ளுங்கள் என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தமோ அவ்வளவு அபத்தம் இந்த நடைமுறை.
மேலும் களநிலவரத்தில் இடைதரகர்கள் ஆவண எழுத்தரகளை நாடிதான் படித்த மக்களும் படிக்காத மக்களும் சென்று தங்கள் ஆவண உருவாக்கல் வேலையை செய்து கொள்கின்றனர்மேலும். ஆவணங்களை இடைதரகர்கள் உருவாக்கிவிட்டு மக்கள் தயாரித்ததாக தான் கையெழுத்திட்டு தாக்கல் செய்ய சொல்கின்றனர்


8)ஆவணங்கள்(Instrument) ஒரு சட்ட ஆவணம் அதுவும் கிரயம் போன்ற ஆவணங்கள் மிகுந்த மதிப்புடைய ஆவணம் அதனை பள்ளிகூட விடுமுறைகடிதம் மாதிரியை பாரத்து எழுதும் முறை போன்ற சாதாரண ஆவணம் போல நினைத்தல் கூடாதுஎனவே எந்தவிதமான சட்ட அறிவும் பதிவுத்துறை விதிகள் தெரியாத அனுபவமும் போதுமானதாக இல்லாத பொதுமக்களை பத்திரங்கள் தயார் செய்து கொள்ளலாம்  என்று ஊக்குவிப்பது என்பது எதிர்காலத்தில் அதிக பிழை திருத்தல் பத்திரங்களையும் தவறான பத்திரங்களையும் அதனடிப்படையில் போலி பத்திரங்களையும் உருவாகுவதற்கு வழிவகுக்கும்

9)அடுத்ததாக அனுபவமில்லாத அல்லது போதிய அறிவு இல்லாத ஆவண எழுத்தர்கள் முறையான பயிற்சியும் அனுபவமும் இல்லாத லைசென்ஸ் இல்லாத ஆவண எழுத்தர்கள,லைசென்ஸ்  புதுப்பிக்க படாத ஆவண எழுத்தர்கள் என்று பலர் ஆவணங்களை பொது மக்களுக்காக செய்து கொடுக்கும் தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள்இவர்களை பத்திரப்பதிவுத்துறை சீர் படுத்தாமல் வரன்முறை படுத்தாமல் ஒழுங்கு படுத்தாமல் அவர்களுக்கு முறையான பாடத்திட்டமும் பயிற்சியும் அளிக்காமல் புதிய ஆவண எழுத்தர் லைசென்ஸ் கொடுக்காமல் ஏற்கெனவே கொடுத்து இருக்கிற லைசென்ஸுதார்ருக்கு மீண்டும் தேரவு வைக்காமல் காலம் தாழ்த்தி கொண்டே போவதாலும் பொதுமக்களின் பத்திரங்களில் அதிக தவறுகளும்  சட்ட குழப்பங்களும் நடக்கின்றன .பொதுமக்களின் பத்திரங்களில் எதிர்காலத்தில் பல திருத்த பத்திரங்களும் அதன்மூலம் போலிப் பத்திரங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன.

10)மேலும் பத்திரப்பதிவு ஆவணங்களை வரைவதற்கும் உருவாக்குவதற்கும் அதனை தாக்கல் செய்வதற்கும் சட்டம் பயின்ற வழக்கறிஞர்களுக்கு உரிமை இருக்கிறது ஆனால் பல சார் பதிகங்களில் வழக்கறிஞர்களின் சீல்கள் (ரப்பர்ஸடாம்பகள்) மட்டும் பயன்படுத்தப்பட்டு லைசென்சு இல்லாத ஆவண எழுத்தர்களால் ஆவணங்கள் உருவாக்கப்படுகின்றன.இப்படி ஆவண உருவாக்கும் முறைகளில் ஒரு தரம் இல்லாத நடைமுறை நிலவுகிறது. பதிவதுறை தன்னுடைய நிரவாகத்தை சார்பதிவகத்திற்குள் தாக்கல் ஆகும் ஆவணங்களில் இருந்து ஆரம்பிக்கிறது.
ஆனால் ஆவணங்கள் பொதுமக்களுக்காக உருவாக்கப்படும் இடத்தில் இருந்தே பதிவு துறை கவனம் செலுத்த வேண்டும். அவரகளால் அவரகள் துறையே நிரவாகம் செய்ய முடியாத பட்சத்தில் ஆவண எழுத்தருக்கான ஒருங்கிணைப்பு பணியும் அப்படியே தேங்கி நிற்கிறது.அதனால் பதிவு துறை தன்னுடைய நிர்வாகத்தையும் ஆவண எழுத்தருக்கான சட்டத்தை முறையாக திடமாக அமுல்படுத்த வேண்டும்

11)பொதுமக்களுக்கும் பதிவுத் துறைக்கும் நடுவில் ஆவணங்கள் உருவாக்கல் பத்திரப்பதிவு உருவாக்கல் ஆவணங்கள் வரைதல் போன்ற ஒரு பெரிய சேவை தோழில் அவசிய தேவையாய் இருக்கிறது, பொதுமக்களுக்கும் சாரபதிவகத்திற்கும்
இணைப்பு பாலமாக இருக்கின்ற ஒரு தொழிலுக்கே ஒரு முறையான அங்கீகாரமும் வழிகாட்டுதல் நெறிப்படுத்துதல் இல்லாமலிருப்பது எதிர்காலத்தில்அரசுக்கும் பொதுமக்களுக்கும் அதிக அளவு தலைவலியை ஏற்படுத்தும்

12)மேற்சொன்ன காரணங்கள்களான சார் பதிவாளருக்கு வருவாய் துறை ஆவணங்கள் பற்றி தெளிவு பெறுதல், தாக்கல் செய்கின்ற பத்திரங்களை நிதானமாக படித்து கூர் ஆய்வு செய்கின்ற முறைகள் ,சொத்து பரிமாற்றம் இல்லாத மீதி பத்திரப் பதிவுகள்  தனியாக செய்தல் முறையான ஆவண எழுத்தர்கள் ரப்பர ஸ்டாம்ப வழக்கறிஞர்கள் குழப்படிக்ள இல்லாத பத்திரங்களை உருவாக்குவதற்கு மிகச்சிறந்த வழி இருக்கிறது என்னவென்றால் தமிழகத்தில் நாம் ஆங்கிலோ இந்திய பதிவு சட்டத்தை பயன்படுத்துகிறோம் ஆனால் கடந்த 300 ஆண்டுகளாக பாண்டிச்சேரியில் இருந்த ஃப்ரெஞ்சு பதிவு சட்டத்தில் நொத்தேர் (Notaire) என்ற அமைப்பு முறை
இருந்தது அதில் நொத்தேர் என்பவர்என்னடா பத்திரங்களை உருவாக்குவதும் வரைவதும் அவற்றை நேரடியாக ஆவணக் காப்பகங்களில் பதிவு செய்து முத்திரையிட்டு பாதுகாப்பாக வைப்பதற்கும் உரிமை பெற்றவர்கள் அதற்கு முதன்மையான் சட்ட அந்தஸ்து கிடைத்தது

13)  மேற்படி நோத்தேர்கள்களுக்கு பிரெஞ்சு சட்ட அறிவும் நில உரிமை (land tenure) பற்றிய அறிவும் கள நிலவரத்தில் என்ன குழப்படிகள் இருக்கிறது என்பது பற்றிய அறிவும் எதிர்காலத்தில் என்ன சட்ட சிக்கல்கள் வரும் என்ற தெளிவும் அவர்களுக்கு இருப்பதனால் அவர்களால் பதிவுசெய்யப்பட்ட உருவாக்கப்பட்ட ஆவணங்களுக்கு பிரெஞ்சு அரசாங்கத்தில் மிகச்சிறந்த மதிப்பும் அந்த ஆவணத்திற்கு சட்ட உரிமையும்இருந்தது இப்போழுது நாம் பயன்படுத்தும் ஆங்கிலோ இந்திய சட்டத்தில் இருக்கின்ற நோட்டரி பப்ளிக் (Notaray Public)போன்று அல்ல இவர்கள் .நமது நோட்டரி பப்ளிக்குகள் ஆவணங்களை உண்மை என்று சான்று செய்வதற்கு மட்டும்தான் இருக்கிறார்கள் நிறைய பேர்
நொத்தேர்களை நோட்டரி ப்ப்ளிக் ஒடு குழ்ப்பி கொண்டுதான் இருகரகறார்கள


14)ஆனால் பிரெஞ்சு அரசாங்கத்தில் சான்று செய்வதும் மட்டும் அல்லாமல் ஆவணங்களை வரைதல் ஆவணங்களை உருவாக்குதல் சொத்து பரிமாற்றம் இல்லாத பிற ஆவணங்களை அதாவது பிறப்பு இறப்பு திருமணம் விவாகரத்து உயில் தத்து தொழில் கூட்டமைப்பு மற்றும் சொத்து மாற்றமில்லாத பதிவுகளை எல்லாம் அவர்கள் ஆவணங்களை உருவாக்கி அவர்களே சான்றிட்டு நேரடியாக ஆவண காப்பகத்தில் பதிவு செய்து பாதுகாப்பாக வைக்கின்ற முறையிலும் ஆவணங்களை நகல் போட்டு கொடுக்கின்ற முறையும் அவர்களிடம் இருந்தது மேலும் சொத்து பறிமாற்ற ஆவணங்களை அவர்கள் உருவாக்கி சார்பதிவகத்தில் வழக்கறிஞருக்கு இணையாக தாக்கல் செய்கின்ற முறையும் இருந்தது அதன்படி அவர்கள் தற்போது தமிழநாட்டில் இருக்கின்ற ஆவண எழுத்தர் களுக்கு மேலான அந்தஸ்திலும் வழக்கறிஞர்களுக்கு சற்று குறைவான அந்தஸ்திலும் இருந்தனர்


15)அது போல நமது தமிழ்நாட்டிலும் நொத்தேர் அல்லது அதற்கு இணையான் ஒரு சேவை பணியை சட்ட ரீதியிலான அந்தஸ்தில் உருவாக்கி அவர்களுக்கு பதிவு சட்டம் நில உரிமை பற்றிய சட்டங்கள சொல்லிகொடுத்து ஆவண வரைதலை உருவாக்குதலை பயிற்சி கொடுத்து சொத்து பரிமாற்றம் அல்லாத ஆவணங்களை அவரகளே பதியவும் சொத்து கிரய ஆவணங்களை தயாரித்து கொடுக்கவும் பொதுமக்கள் கொண்டு வருகின்ற ஆவணங்கள அவர்களே சான்றிடவும் உரிமை கொடுத்து இப்பொழுது இருக்கிற ஆவண எழுத்தர சட்டத்தை எடுத்து விட்டு நொத்தேர்
சட்டத்தை உருவாக்கி அதற்கென்று டிப்ளமோ கல்வியை சட்டகல்லூரியில் வழங்குமாறு நபது அரசு முயற்சி மேற்கொண்டால்.எதிரகால பத்திர பதிவுகளில் தவறான மற்றும் பிழையான பத்திரங்களும் போலி பத்திரங்களும் நடக்காமல் இருப்பதற்கும்.ஆவணம் உருவாக்கல் துறை ஒரு சிறப்பான நிரவாகத்திற்கு வரும்.இந்த கட்டுரையை படிக்கும் பதிவுதுறை வருவாய்துறை நீதிதுறை சாரந்தவர்கள் இதனை பரிசீலிப்பீரகளாக!!!

இப்படிக்ககு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழத்தாளர்/ரியல் எஸ்டேட் பயிற்சியாளர்/ தொழில் முனைவர்


 ( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெறஅணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#எஸ்எல்ஆர் #யூடிஆர் #நிலவரி #பட்டா #சிட்டா #அடங்கல்  #நத்தம் #பட்டா #போலிபத்திரம் #பதிவு #உயில் #notaire #நோட்டரி #land-tenure #ஆவணகாப்பகம் #சட்டகல்லூரி #நொத்தேர் #SLR #UDR   #Chitta #include #Natam  #Photographed # Registration #Oil Archives

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்