நீங்கள் வாங்க போகும் சொத்து நீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதை எப்படி தெரிந்துகொள்வது!!


1)ஒரு சொத்து நீதிமன்ற வழக்கில் இருப்பதை தெரியாமல் வாங்குவோர் பலர் இருக்கிறாரகள்.வாங்கி முடித்துவிட்டு கோர்ட்டுக்கும் வக்கீல் ஆபிஸுக்கும் அலைந்து சம்பாதித்த பணத்தை வீணாக்கி கொண்டு இருப்பதை பாரத்து இருக்கிறேன்.

2) சொத்தை வாங்குவதற்கு முன்கூட்டியே நீதிமன்ற வழக்குகள் இருக்கிறதா என்று முன்கூட்டியே கொஞ்சம் அலசி ஆராய்நதால் எதிர்கால சிக்கல்களை வராமல் தவிர்க்கலாம்.


3) நிறைய சொத்துக்கள் அண்ணன் தம்பி பிரச்சினை அக்காவுக்கு தங்கைக்கு பங்கு கொடுக்கவில்லை என்று பாகபிரிவினை வழக்குகள் நடக்கும் பெரும்பாலும் இவை பூர்வீக அல்லது தந்நை வழி தாய் வழி சொத்தானால் வாரிசுரிமை சொத்தாக இருக்கும்.

4)அப்படி இருக்கும்படசத்தில் விற்பவரிடம்(seller) நீங்கள் முதல் கட்ட சந்திப்பிலேயே வாயை திறந்து கேட்டுவிடவேண்டும்.சகோதர சகோதரிகள் வழக்கு ஏதாவது போட்டு இருக்கிறார்களா? என்று அதற்கு விற்பவர் வழக்கு உண்டு இல்லை என்று நேரடியாகவும் சொல்லுவார்.அல்லது பதிலில் கொஞ்சம் பிசிரடிக்கும் அதனை வைத்தே ஒரளவு நாம் புரிந்து கொள்ள முடியும்.

5)சில இடங்களில் விற்பவர் காரியகாரராக இருப்பதை உணர்ந்தால் விற்பவரின் துணைவியாரிடம் சாதுரியமாக பேச்சு கொடுத்து தகவல்களை பெறலாம்.பெரும்பாலும் பெண்கள் சொத்து பிரச்சினையை எமோஷ்னலாக அணுகுவார்கள்.தன் கணவரின் அக்கா தங்கை மற்றும் சகோதரிகளை பிரித்து எடுத்து விடுவார்கள்.

6)டபுள் டாகுமெண்டு போலி ஆவணம் போன்றவற்றின் மூலமாக நீதிமன்றத்தில் விளம்புகை பரிகார வழக்குகள் பதிவாகி இருந்தால் இடத்தில் பெயர்பலகை வழக்கு இருக்கிறது என்று எழுதி நடபட்டு இருக்கும்.
7)அல்லது வேலி போடுதல் வேலி அகற்றுதல் குடிசை போடுதல் அகற்றுதல் என்று தொடர் சச்சரவால் அக்கம் பக்கம எல்லாம் அந்த இடம் வழக்கு உள்ள இடம் என்று பிரபலயமாகி விட்டு இருக்கும்.

8)வழிதகராறு,வேலிதகறாறு பக்கத்து நிலத்துகாரர் ஆக்கிரமிப்பு போன்ற சொத்து தாவா வழக்குகள் இருந்தால் விற்பனை செய்யும் இடத்திற்கு சென்றாலே பக்கத்தில் நிலசிக்கலை ஏற்படுத்திய எதிர்தரப்பு கண்டிப்பாக உங்களை சந்தித்து சொத்தில் நீதிமன்ற வழக்கு இருக்கிறது என்று சொல்லிவிடுவர்.

9)அல்லது அதே ஊரில் பெரிய மனுஷன் என்று இரண்டு மூன்று பேர் சுற்றி கொண்டு இருப்பாரக்ள் .அவரகளுடைய ஆளுமையை நிலை நாட்ட நிலம் வாங்கும் உங்களை Connect செய்து கொள்வதற்காக வாங்கபோகும் சொத்தில் வழக்கு இருக்கிறது என்று சொல்லிவிடுவர்.

10)சொத்தைவிற்பவர் மனைவி இல்லாமல் பிரந்து இருக்கிறார்கள் அல்லது விவாகரத்து வழக்கு இருக்கிறது என்று நீங்கள் பிறர் மூலமோ அல்லது விற்பவர் மூலமோ தெரிந்து கொண்டால் ஜீவனாம்ச உரிமைக்காக சொத்து நீதிமன்றத்தில் அட்டாச் செய்யபட்டுள்ளதா என்று விசாரிக்கவேண்டும். பல இடங்களில் ஜீவனாம்சமாக சொத்து போக்கூடாது என்பதறகாக சொத்துக்கள் விற்பனைக்கு வருகிறது.

11)பல ஜீவனாம்ச வழக்குகளில் சொத்து அட்டாச் ஆகாமல் இருக்கலாம் ஆனால் கணவனின் சொத்தை நீதிமன்ற்ததில் அட்டாச் செய்ய சொத்துவிவரத்தை சொத்து சம்பந்தபட்ட ஆவணத்தை விவாகரத்து கேட்கும் பெண்கள் தேடி கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

12)நானே பலருக்கு இந்த வேலையை செய்து கொடுத்து இருக்கிறேன்.வெறும் வீட்டு முகவரியை வைத்து வேறு எந்த துப்பும் இல்லாமல் சொத்தினுடைய ஆவணத்தின் நகலை சவாலாக எடுத்து கொடுத்து இருக்கிறேன். எனவே விற்பவர் விவாகரத்து சிக்கலில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால் ஜீவனாம்சம்த்தில் சொத்து அட்டாச் செய்தாலும் அட்டாச் செய்யாமல் இருந்தாலும் கவனாமாக இருப்பது நல்லது.

13)மேற்படி நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளை அதன் நீதிமன்ற உத்தரவுகளை சார்பதிவகத்தில் 1வது புத்தகம் மக்களே தானாக முனவந்து பதிய வேண்டும்.தற்பொழுது அந்த விழிப்புணரவு அதிகாமாகி இருக்கிறது.ஆனால் இதற்கு முன்னால் நிறைய பேர் தானாக முன்வந்து பதியாத்தால் ஈசி பார்த்துவிட்டு சொத்து வாங்குவோர் வில்லங்கம் எதுவும் இல்லை என்று சொத்தை வாங்கி பின்பு பதங்குலைகின்றனர்.

14)எனவே இப்பொழுது சொத்தை வாங்கும் போது நீதிமன்ற சம்மந்தமாக ஏதாவது பதிந்து இருப்கிறார்களா ஈசியில் வருகிறதா என்று உறுதி செய்து கொள்ளலாம்.மேலும் அடமான கடன் ,வங்கி கடன் போன்றவையும் அது சம்மந்தபட்ட வழக்குகளையும் ஈசியில் காட்டுவதால் நீதிமன்ற வழக்கு சொத்தில் இருக்கிறதா என்று ஆராய நல்ல ஆவணமாகும்.

15)விற்பனைக்கு வரும் சொத்து பத்திரங்களில் ஒரிஜினல் பிரதிய நன்கு ஆராய்நது பார்த்தால் நீதிமன்ற முத்திரை பத்திரதில் பதிந்து இருக்கும்.அதனை பார்த்தாலே பத்திரம் கொஞ்சநாள் கோர்ட்டுக்குள்ளே இருந்து இருக்கிறது என்ற உணர்ந்து கொண்டு அது சம்மந்தமாக விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.

16)சொத்து பத்திரத்தின் நகலை பார்த்து எப்பொழுதும் சொத்தை வாங்குகின்ற முடிவை எடுத்து விடாதீர்கள்.பத்திரத்தின் பின்பக்கம் பெரும்பாலும் ஜெராக்ஸ் எடுக்க மாட்டார்கள் அந்த பக்கத்தில் நீதிமன்ற முத்திரை இருந்தாலும் இருக்கும்.அல்லது நீதிமன்ற முத்திரையை மறைத்து நகலில் முத்திரை இல்லாமல் எடுத்துவிடுவார்கள்.

17)எனவே பத்திரங்களை நன்கு ஆராய்தல்,ஈசியை கூர்ந்து பரிசோதித்தல்,விற்பவரிடம் சாதுரியமாக விசாரித்தல் ,சொத்து இருக்கும் இடத்தில் கள ஆய்வு செய்தல் என்று செயல்பட்டு வாங்கபோகும் சொத்து நீதிமன்றத்தில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம்.


சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

 இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#ஆவணங்கள் #தாய்பத்திரம் #புறம்போக்கு #நிலம் #அனாதீனம் #நிலஉச்சவரம்பு #திட்டம் #ஜப்தி #சர்வே #நத்தம் #நீதிமன்றம் #ரெவின்யூ #செட்டில்மெண்டு #பட்டா #வருவாய்துறை  #பிரிட்டிஷ் #இந்தியா #ரெக்கார்டு #வாடகை #வரி #dcuments #amortization #land #orphanage #landslide #survey #nattam #court #revenue #settlement #patta  #British #India #record #rental #tax #deed #registeroffice #link #history #asset

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்