வெளிநாடுகளில் சம்பாதிக்கும் பால்புட்டி பசங்க சொத்து விஷயத்தில் ஜாக்கிரத்தை!!





நான் தொடர்ந்து சொல்லிவருவதுதான் சொத்து விஷயத்தில் உணர்வுகள் உணரச்சிகள் இல்லா மரகட்டையாக இருங்கள் என்று இந்த கட்டுரையில் தாய்பாசம் அதிகம் உள்ள மகன்கள் சொத்துக்களை எப்படி இழக்கிறார்கள் என்று கூறுகறேன்.

ஆண்களில்இப்படி ஒரு வகை இருக்கிறார்கள் ஒன்று எவ்வளவு வளர்ந்தாலும் தன் அம்மாவுக்கு எப்பொழுதும் குழந்தையாகவே இருப்பார்கள். பெரும்பாலும் இவர்கள் அதிககாலம் தாய்பால் குடித்தவர்களாகவும் அம்மா அடிக்கடி நான் எவ்ளோ கஷ்டபட்டு உன்னை வளரத்தேன் என்று சொல்லி மகனின் மனதில் நன்றியுணர்ச்சியை அதிகம் விதைத்துவிடுவார்கள்.

இப்படி இருக்கிற ஆண்களுக்கு பொண்டாட்டி வந்தாலும் பொண்டாட்டி பாடு திண்டாட்டம் தான்.தாய்க்கும் தாரத்திற்கும் நடுவுல பேலன்ஸ்டா போகனும் என்று நினைக்கமாட்டார்கள் இந்த ஆண்கள்.

எங்க அம்மாவையே இப்படி பேசுறியா ன்னு சண்டைக்கு வருவார்கள். இல்லை என்றால் அம்மா பேசுவதை கண்டுக்காத அட்ஜஸ்ட் செஞ்சிக்கோ என்று திரைமறைவில் மனைவியிடம் சொல்வார்கள். இது போன்ற நபர்களை நான் ஜெண்டில் மேன் அல்லாதவர்கள் எனபேன் செல்லாமக தாய்பால் மறக்காத பால்புட்டி பசங்க என்பேன்.

இப்படி இருப்பவர்கள். வெளிநாடுகளில் போய் வேலை செய்து சம்பாதிக்க  ஆரம்பித்தால் அவர்களின் முதல் சொத்து மனையோ தோட்டமோ வீடோ  வாங்கும்போது தன்னுடைய அம்மா பெயரில் வாங்குவார்கள்.
அடுத்ததாக பூர்வீக வீட்டில் இருந்தால் அதனை ஒட்டி விற்பனைக்கு வருகிற நிலத்தையும் அம்மா பெயரில் வாங்குவார்கள் பணம் Fixed deposit இல் போட்டு வைத்தால் அம்மா பெயரில் போட்டு வைத்து இருப்பார்கள்.
அம்மாவின் பெயரில் சொத்தை வாங்குவது  Fd யில் பணம் போடுவது எந்த தவறும் இல்லை.ஆனால் அதற்கு அந்த அம்மா நிலைகுலையா மனதினை உடைய ஜெண்டில் உமன்ஆக எல்லாருக்கும் பொதுவாக நடுநிலையாக இருந்தால் எந்த சிக்கலும் இல்லை.

பல அம்மாக்கள் உணர்வு ரீதியாக காயம்பட்ட பெண்களாகவே இருக்கிறார்கள். அதாவது பயம், நிச்சயமற்றதன்மை ,மனஅழுத்தம், கசப்புணர்வு, எதிர்கால கவலை ,கடந்த கால வலி என்று எதிர்மறை எண்ணங்கள் கொண்ட லூசுங்களாகவே பல அம்மாக்கள் இருக்கிறார்கள்.

அப்படிபட்டவர்கள் பெயரில் சொத்தை வாங்கும் போது எதிர்காலத்தில் அந்த சொத்து வாங்கும் பால்புட்டி பையன் அதிக பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இப்படி ஒருவர் தன் அம்மா பெயரில் தன்வீட்டுக்கு பக்கத்து இடத்தை வாங்க அந்த இடத்தை அம்மாவை கூட்டிகொண்டு போய் உள்ளூரில் இருக்கும் இன்னொரு பிள்ளைக்கு செட்டில் மெண்டு செய்துவிட்டார்கள்.

சில அம்மாக்களுக்கு தன் பெண்பிள்ளைகள் மேலதான் அதிக ஒட்டுதல் இருக்கும் பையன் வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்பி வாங்கிய சொத்துக்களை தன் மகள்களுக்கு எழுதி வைத்த கதைகள் நிறைய பார்த்து இருக்கிறேன் மேலும் சொத்தை வைத்து அருக்கும் தாய்மார்கள் திடீரென்று இறந்து விட வாரிசுரிமைபடி இறந்து விட்ட அம்மாவின் மகன்கள் மகள்கள் அந்த ஒரு சொத்துக்கு அடித்து கொள்வதை நாம் பார்த்து இருக்கிறேன்.

நீங்கள் வெளிநாட்டில் இருக்கிறீர்கள் சொத்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்றால் எப்பொழுது தாய்நாட்டிற்கு வருகிறீர்களோ அப்பொழுது வந்து உங்கள் பேரில் சொத்து வாங்குவது நல்லது அம்மா பெயரில் சொத்து வாங்கி வைத்துவட்டு நீங்கள் வரும்போது அதை உங்கள் பெயரில் மாற்றலாம் என்றால் அது இரட்டை செலவு அதுமட்டும் இல்லாமல் ஏக்கம் மிகுந்த அம்மாக்கள் சொத்துகைவிட்டு போகுதே என்ற feeling அம்மாவுக்கு ஏதவது செய்யவேண்டும் என்றால் அதிகபடியாக செய்யுங்கள் நான் வேண்டாம் என்று சொல்லவில்லை.

சொத்தை எழுதி கோடுக்கும் பொழுது மட்டுமம் அதிக கவனம் எடுத்துகொள்ளுங்கள் அம்மாவிடம் மகனாகவும் மற்றவர்களுக்கு ஜெண்டில் மேன் ஆகவும் இருப்பதுதான் தான் சொத்தை பொறுத்தவரை நல்ல நடைமுறை.

எனவே வெளிநாடுகளில் சம்பாதிக்கும் இளைஞர்கள் சொத்துக்களை வாங்கும் போது அதிக கவனம் எடுத்து bipolar பண்பு இல்லாமல் நடுநிலைமையாய் நின்று சொத்துகள் வாங்குங்கள்.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில் முனைவர்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#bipolar  #Fixed #deposit  #உணர்வுகள் #உணரச்சிகள் #வெளிநாடு #சொத்த #Feelings #Feelings #Abroad #Property

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்