உங்கள் வீட்டுமனை பார்க் ஒதுக்கபட்ட இடத்தில் வருகிறது என்ற குழப்பமா?




1) ஒராண்டாக பஞ்சாயத்து அப்ரூவ்டு மனைகளை டிடிசிபி அப்ரூவ்டு மனைகளாக வரன்முறைபடுத்துதல் செய்ய அரசு உத்தரவிட்டு இருந்தது.அந்த வரன்முறைபடுத்துதலுக்கு பொதுமக்கள் செல்லும் பொழுதுதான் பலருக்கு இந்த பார்க் சிக்கல் குழப்பம் தெரிந்தது.

2)  பலருடைய வீட்டுமனைகள் உங்கள் இடம்  பூங்காவில் அதாவது பார்க்குக்கு ஒதுக்கபட்ட இடத்தில் வருகிறது. அதனால் டிடிசிபி வரன்முறைபடுத்துதல் செய்ய முடியாது என்று அங்கீகாரம் கேட்ட மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யபட்டன.

3) தனது சேமிப்பை போட்டு மனையை வாங்கிய மக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கும் டிடிசிபி ஆபிஸ்கிற்கும் நடந்து கொண்டு இருக்கிறார்கள்.அரசு நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் இதற்கு மாற்று என்ன செய்வது என்று தெரியாமல் சென்னை டிடிசிபி அலுவலகத்திற்கு சென்று சரி செய்துகொள்ள சொல்லி திருப்பி அனுப்பி கொண்டு இருக்கிறார்கள்.

4) மேலும் வீட்டுமனைகளை வாங்கி போட்டுவிட்டு பல வருடங்கள் கழித்து இப்பொழுது அதில் வீடு கட்ட வேண்டும் என்று நினைத்து அதற்கு கட்டிட அனுமதி (Building Plan)வேண்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட டிடிசிபி அலுவலகத்தில் அணுகும் போதும் கட்டிட அனுமதி கிடைக்காது உங்கள் இடம் பார்க்கில் வருகிறது என்று திருப்பி அனுப்பிவிடுகின்றனர்.
5)பார்க் சிக்கல் விஷயம் என் புரிதல் படி இரண்டு வகையாக இருக்கிறது.
  1. a) உண்மையகவே வரைபடபடியும் அனுபவபடியும் பாரக்கிற்கு ஒதுக்கபட்ட இடங்கள்
b)அனுபவத்தில் ஒதுக்காமல் வரைபடத்தில் மட்டும் ஒதுக்கிய பார்க்

6) டிடிசிபி அங்கீகார பெற்ற வீட்டுமனை பிரிவில் பெரும்பாலும் 1980-1990 ஆண்டுகளில் பெறபட்ட மனைபிரிவுகளில் ஒதுக்கபட்ட பார்க்கிற்கான இடங்களை 2000 -2010 ஆண்டுகளில் மனையின் விலை கூடிய வுடன் மனைபிரிவின் உரிமையாளர் அங்கிருக்கும் பாரக்கையும் மனைகளாக பிரித்து அதற்கு புதிய மனை எண்களைகொடுத்து புதிய வரைபடத்தை தயாரித்து இவையெல்லாம் விற்காத மனைகள் என்று அப்பாவி வாடிக்கையாளர்களுக்கு விற்று விடுவர்.

7) விற்கும் போது சார்பதிவக அலுவலகத்தில் டிடிசிபி யில் இது பார்க்கிற்காக ஒதுக்கபட்ட இடம் என்றெல்லாம் எடுத்து சொல்ல சார்பதிவகத்தில் தரவுகள் இல்லை.தேவைபட்டால் மனைபிரவின் புதிதாக தயாரிக்கபட்ட வரைபடத்தை பார்வையிட்டு பத்திரபதிவுக்கு அனுமதி அளித்து விடுகின்றன சார்பதிவகம். பெரும்பாலும் பத்திரபதிவின் போது சார்பதிவகம் இதனை பற்றி எல்லாம் கவலைபடுவதில்லை.அவர்களுக்கு முத்திரை தாள்தாளும் காந்தி படம் போட்ட தாளும்தான் கணக்கு அது சரியாக இருந்தால் பத்திரத்தை பதிவு செய்து கொடுத்துவிடுவார்கள்.

8) இப்படி வாங்கிய அப்பாவி வாடிக்கையாளர் பட்டா பெயர் மாற்றம் செய்ய போகும் போதோ மின் இணைப்ப எடுக்க போகும்பொழுதோ பில்டிங் பிளான் வாங்க போகும்போதோ மேற்படி மனை டிடிசிபி வரைபடத்தின் படியும் டிடிசிபி ஆவணங்கள் படியும் பார்க் இதற்கு எதற்கும் அனுமதி அளிக்க முடியாது என்று அப்பாவி வாடிக்கையாளரின் மனை தள்ளுபடி செய்யபட்டு அவர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

10) சென்னை கூடுவாஞ்சேரியில் இப்படி ஒரு மனைபிரிவில் பார்க் ஒதுக்கபட்ட இடத்தில் இடம் வாங்கிவிட்டு பில்டிங் பிளான் மின்சாரம் எதுவும் இல்லாமல் பஞ்சாயத்து காலி செய்ய சொல்லியும் கிரயபத்திரம் மட்டும் வைத்துகொண்டு பிடிவாதமாக ஒரு கூரை வீடு கட்டி பத்தாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.  இவர் அந்த பாரக் இடத்தை அவருக்கே ஒப்படைக்கும்படி தொடர்மனு போராட்டங்களை நடத்தி கொண்டு இருக்கிறார்.

11) அடுத்ததாக வரைபடத்தில் மட்டும் பாரக் என்ற சிக்கல்களை பார்ப்போம். இந்த சிக்கல் எப்படி உருவாகி இருக்கும் என்றால் அப்பொழுதெல்லாம் மனைபரிவு  டிடிசிபி அப்ரூவல்ல  வாங்க கட்டாயம் சாலை வசதிகள் ,பூங்காக்கள் போன்ற பொது இடங்கள் விட வேண்டும் என்ற விதிகள் இறுக்காமாக (Tight) இருக்காது. எல்லாம் இப்பொழுது தான் இறுக்கி பிடிக்கறார்கள்.

12) கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு இவையெல்லாம் மிகப்பெரிய அளவில் இருக்கமான ஆக்கப்படவில்லை அதனால் தான் இன்று இந்த பார்க் சிக்கலில் மக்கள் உழல்கின்றனர்.

13) முதலில் டிடிசிபி மனைபிரிவு போடலாம் என்று ஒரு ரியல் எஸ்டேட் தொழில் முனைவர் முயன்று இடம் வாங்கி இடத்தை நல்லபடியாக பிரித்து ,சாலைகள் விட்டு பொது பயனுக்காக பூங்கா பள்ளிக்கூட இடம் போன்ற பொது இடங்கள் எல்லாம் விட்டு விட்டு மனைப்பிரிவு உருவாக்குவதற்கு வரைபடத்தை தயாரித்து விடுவார்கள் .

14) பிறகு டிடிசிபி அலுவலகம் சென்றால் அங்கு பலவிதமான நோ அப்ஜெக்ஷன் சான்றிதழ்கள் அதாவது பொறம்போக்கு நிலம் இல்லை நில உச்சவரம்பு இடமில்லை அரசின் நில ஆர்ஜித திட்டம் வரவில்லை பிற துறைகளில் நிலம் எடுக்கப்படவில்லை இடுகாடு அருகில் இல்லை போன்றவற்றிற்கெல்லாம் தடையின்மை சான்றிதழ் வாங்கி

15) பஞ்சாயத்து தலைவர் துணை தாசில்தார் தாசில்தார் விவசாய அதிகாரி மாவட்ட விவசாய அதிகாரி டிடிசிபி அதிகாரி போன்றவர்களிடம் எல்லாம் சென்று டிடிசிபி அப்ரூவல் வாங்குவதற்கு பைலை நகர்த்த வேகமாக நடந்தால் 7 மாதத்திலும் தாமதமாக நடந்தால் ஒன்றை ஆண்டுகளிலும் மனைபிரிவு அங்கீகாரம் வாங்கி விடலாம் ஆனாலும் அரசு எந்திரதின் தாமத்த்தையும் கள நிலவர தாமதங்களையும் பொறுத்துகொள்ள முடியாமல் அடுத்து என்ன செய்வது என்று முடிவு எடுக்க முடியாமல் தவித்துகொண்டு நிற்பர் மனைபிரிவு உரிமையாளர்.
16) அந்த நேரத்தில்பக்கத்தில் இருக்கும் வேறு மனைபிரிவு உரிமையாளர் உடனடியாக பஞ்சாயத்து அப்ரூவடு மனைகள்போட்டு விற்று விட்டு போவதை பாரத்து காண்டாகியும் பஞ்சாயத்து அப்ரூவலாக இருந்தால்  குறைவான விலையாக இருக்கும் மனைபரிவு உரிமையாளரை அவசரபடுத்தும் வாடிக்கையாளர்களும் சில ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளும் வீடு தேடி வந்து மனைக்கு முன்பணம் கட்டிவிட்டு செலவார்கள் இதனால் எல்லாம் முடுக்கமாகி

17) பொறுக்கமுடியாமல் தான் போட்ட முதல் உடனடியாக எடுக்க வேண்டும் என்ற அவசரத்திலும் மற்றவர்களை போல் பாதியிலே சமைக்கும் உணவை பரிமாறுவது போல டிடிசிபி அப்ரூவல் பாதியிலே இருக்கும்பொதே அப்ரூவ்டு வாங்காமலேயே அப்படியே பஞ்சாயத்து அங்கீகாரம் மனைகளாக மாற்றி கிரையம் செய்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து கொடுத்துவிடுகிறார்கள் .

18) ஒரு மனைப்பிரிவில் நூறு மனைகள் இருக்கிறது என்றால் அதனுடன்  ஒரு பூங்காவும் ஒரு பள்ளிக்கூடமும் பொது இடங்களும் டிடிசிபி அங்கீகார விதிப்படி ஒதுக்கப்பட்டு இருக்கும்.அதவது மனைபிரிவு தரம் டிடிசிபிபடி உருவாக்கப்பட்டு ஆனால் பஞ்சாயத்து அங்கீகாரபடி விற்பனை செய்யபடும்.மேலும் ஒன்று இரண்டு ஆண்டுகளில் அனைத்து மனைகளும் விற்பனை ஆகிவிட்டு இருக்கும்.

19) அதற்குப் பிறகும் அந்த மனைபிரிவிற்கு டிமாண்ட் வேறு அதிகமாக இருக்கிறது என்றால்  அந்த மனைபிரிவு உரிமையாளரின் காதுகளில் காசு பணம் துட்டு மணி மணி என்ற பாட்டு ரீங்காரமிட ஆரம்பிக்கும் அவ்ளோதான் மனுஷன் பார்க் பள்ளிகூடம் என்று  ஒதுக்கப்பட்ட இடங்களை மனைகளாக பிரித்து புதிய மனை எண்கள் கொடுத்து புதிய வாடிக்கையாளர்களுக்கு விற்று விடுவார்கள்.

20) அந்த புதிய வாடிக்கையாளருக்கு பழைய வரைபடத்தை காட்டமாட்டார்கள் அவர்களுக்கு என்று புதியதாக பூங்காக்கள் இல்லாத பள்ளிக்கூடங்கள் இல்லாத ஒரு மனைப்பிரிவு வரைபடத்தை கணிணி வரைகலையாளர்கள் அழகாக எந்தவித சந்தேகமும் இல்லாமல் வரைந்து கொடுத்துவிடுவார்கள்.
21) இதற்கு முன் பக்கத்து மனைகளை வாங்கியவர்கள் எல்லாம் பார்க் பள்ளிகூடம் இருக்கின்ற வரைபடத்தை வைத்திருப்பார்கள்  புதிதாக வாங்கியவர் புதிய வெர்சன் படத்தை வைத்து இருப்பார்கள்.

22) மேலும் மனைபிரிவு உரிமையாளர்கள் அடிக்கடி மனைபிரிவுக்கு வந்து போவதால் அங்கு ஏற்கனவே மனை வாங்கி வீடு கட்டி குடியிருக்கிற வாடிக்கையாளருக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டு விடும்.அதனால் பார்க்கை வேறு நபர்களுக்கு விற்கும் பொழுது எந்தவித செய்யாமல் இருந்து விடுகிறார்கள்.மேலும் சில மனைபிரிவுகளில் முன்கூட்டியே மனை வாங்கி போட்டவர்கள் மீண்டும் மனைபிரிவை வந்து எட்டிபார்க்க கூட நேரம் இருக்காது.

24)அதனால் மனைபிரிவில் பார்க் மனைகாளாக மாறிவிட்டதை பற்றி எல்லாம் கவலைபட வாய்ப்புஇல்லை.அதனால் யாரும் ஆட்சேபனை செய்ய வாய்ப்பு இல்லை என்று அறிந்த பொழுது மனைபிரிவு உரிமையாளர் கொஞ்சம் தைரியமாக பார்க் சைட்டை விற்க ஆரம்பித்துவிடுவார்.

25) அதை தாண்டி யாரவது கேள்வி எழுப்பினால் அந்தப் பார்க் வரைபடத்தில் தான் இருக்கிறது அரசிற்கு தானமாக எழுதிக் கொடுத்தால் தான் அது பூங்காவாகும் அல்லது பொது இடமாகவோ இருக்கும் ஆனால் நான் அரசுக்கு எழுதி ஒப்படைக்கவில்லை என்று மனைபிரிவு உரிமையாளர் சட்டம் பேசி சமாளித்து புதிய நபர்களுக்கு பார்க் சைட்டை விற்றுவிடுவார்.

26) ஆனால் கொஞ்சகாலம் கழித்து வரைபடத்தில் பாரக் இருக்கும் சைட்டை வாங்கியவர்கள் கட்டிட அனுமதிக்கப் போகும்போது பஞ்சாயத்து போர்டில் உள்ள வரைபடத்தில் இவை பார்க் என்று குறிக்கபட்டு இருப்பதை காரணம் சொல்லி பில்டிங் பிளான் மறுக்கபடும் பொழுது மனை வாங்கியவர் பல இலட்சம் போட்டு வாங்கிய மனை இப்படி பாரக் என்று சொல்கிறார்களே என்று பதறி போகிறார்.

27) இவை மட்டும் இல்லாமல் மனைபிரிவுகள் அனைத்தும் வீடுகள் ஆகிவிட்டால் பாரக் இருக்கிற வரைபடம் ஒருவருக்கும் பாரக் இல்லாத வரைபடம் ஒருவருக்கும் இருக்கும் இதனால் இன்னும் பல புதிய குழப்பங்கள் உருவாகும்.

28) வரைபடத்தில் பார்க் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் மனை வாங்கிய நபரின் கிரய பந்திரத்தில் நான்கு மாலில் ஏதாவது ஒரு திசையில் பார்க் என்று குறிப்பிடபட்டு இருக்கும் இப்படி ஒரு நபர் தன் வீட்டின் கழிவு நீரை பார்க் என்று வரைபடத்தில் காட்டிய இடத்தில் விட்டுகொண்டு இருந்தார்.அதில் இடம் வாங்கிய புதிய நபரிடம் இது பாரக் நான் கழிவு நீர் விடுவேன் என்று தொந்தரவு கொடுத்துகொண்டே இருக்கிறார்.பல பஞ்சாயத்துகள் நடந்தும் சச்சரவுகள் முடிந்த பாடு இல்லை.

29) அதே போல வரைபடத்தில் பார்க் சைட் என்று குறிப்பிட்ட இடத்தை வாங்கியவர் அங்கு வீடு கட்ட பூமி பூஜை போட போன பொழுது பக்கத்து மனைகாரர் பார்க்கை ஆக்கிரமிக்கிறார்கள் என்று தன் பத்திரத்தின் நான்கு மால் எல்லை இருக்கும் தாளையும் பார்க் உள்ள வரைபடத்தையும் வைத்து காவல் துறையில் புகார் கொடுத்து கலாட்டா செய்ய ஆரம்பித்து விட்டார்.

30) இப்படி வரைபடத்தில் மட்டும் பூங்கா என்று குறிப்பிட்டு இருக்கும் மனையை தெரியாமல் வாங்கியவர்களுக்கு அரசு நிர்வாகத்திலும் பக்கத்து மனைகாரர்களாலும் பலவிதமான் அசௌகரியங்கள் தொந்தரவுகள் எனவே இப்படி வரைபடத்தில் மட்டும் பூங்கா என்று குறிக்கப்பட்டு மேற்படி பூங்காவிற்கு ஆன இடத்தை உள்ளாட்சி துறைக்கு தானம் எழுதி கொடுக்காமலேயே இருந்தால் ஆனால் தெரிந்தோ தெரியாமலோ மனைபிரிவு உருவாக்கியவர் வரைபடத்தில் மட்டும் அப்படி குறிப்பிடப்பட்டிருந்தால் அவற்றை பார்க் சைட் என்று ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் அல்ல

31) உண்மையாகவே அனுபவத்திலும் பாரக் இடத்தை வாங்கியவர்கள் தெரிந்து வாங்கினாலும் தெரியாமல் வாங்கினாலும் அது சம்மந்தமாக  நீதிமன்றம் முடிவு எடுக்கட்டும்.

32) ஆனால் வரைபடத்தில் மட்டும் பார்க் என்று குறிப்பிட்ட மனைகளை வாங்கியவர்களுக்கு உள்ளாட்சி நிர்வாகமும் டிடிசிபி நிர்வாகமும் இது சம்பந்தமாக ஒரு சுற்றறிக்கையை மாவட்டதோறும் அனுப்பி வரைபடத்தில் மட்டும் பார்க் குறிப்பிட்டு தான பத்திரம் அளிக்காத இடங்களை மேற்கண்ட இடம் பார்க் இல்லை என்று சான்றிதழ் வழங்கி அவர்கள் வயிற்றில் பாலை வார்க்கலாம் .

அதற்கு ஏதாவது கட்டணம் கட்ட வேண்டும் என்றாலோ கட்ட சொல்லலாம்.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

குறிப்பு :
சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#பஞ்சாயத்து  #மனை #டிடிசிபி #பூங்கா #பார்க்  #அங்கீகாரம்  #மனு  #தள்ளுபடி #ரியல்எஸ்டேட் #ஏஜெண்டு #தாசில்தார் #building  #வீட்டுமனை #வரன்முறைபடுத்துதல் #land #plot #park #commission #dtcp #approved #document #realestate #ajent #asset #drawving

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்