காமராஜரும் நில சீர்திருத்தமும்..!!!



நிலத்தை பங்கிடுவதிலும் நில உரிமைகளை அனைத்து தரப்பு மக்களுக்கு பகிர்வதிலுமான வேலையை தமிழகத்தில் அய்யா கர்மவீரர் காமராஜர் தொடங்கி வைத்தார் என்றும் அதனை கலைஞர் கருணாநிதி அவர்கள் முடித்து வைத்தார் என்றுதான் நாம் சொல்லலாம்.

காமராஜர் ஆட்சிக்கு வந்த இரண்டாவது மாதத்தில் நிலசீர்திருத்தத்திற்கான வேலைகளை ஆரம்பித்து விட்டார்.குத்தகைதாரrகளுடைய உரிமைக்கு பாதுகாப்பு வழங்குதல்,நியாயமான குத்தகையை நிர்ணயித்தல் நிலுடைமையின் உச்சவரம்பை நிர்ணயித்தல் போன்றவற்றில்  கவனம் செலுத்த ஆரம்பித்து அதற்கான கமிட்டிகளை அமைத்தார்.
தமிழகத்தின் பலவேறு பகுதிகளில்  நிலங்களின் தரநிலையை அறிந்து  நில வருமானம் பண்ணை வருமானம்  பற்றிய புள்ளிவிவரங்களை தொகுப்பை முதலில் காமராஜர் அவர்கள் ஆட்சியில்தான் திரட்டபட்டது.

1945 ஜமீனதாரி ஒழிப்பு சட்டம் 1945 ல் போட்டு தூங்கி கொண்டு இருந்தது. இவர் வந்தவுடன் வேகமாக அமுல்படுத்தபட்டு ஜமீனதாரிகளுக்கு இழப்பீடு கொடுக்கபட்டு நிலங்கள் கையகபடுத்துதல் தொடங்கியது 1960 களில் தான் அதனை ரயத்துவாரி பட்டாவாக மாற்றி 10936 சதுர மைல்கள்  உழவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் கொடுத்தது. ஆக நிலம் சாதாரண மக்களுக்கும் பகிர ஆரம்பித்தது 1960 ஆண்டு என்று கொள்ளலாம்.

தஞ்சாவூரில் நிலகிழார்களுக்கும் பண்ணையாட்களுக்கும் இடையில் அமைதியின்மை எப்போழுதுமே இருந்தது 1952 ல் தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்பு சட்டம இராஜாஜியால் போடபட்டு பண்ணையாளுக்கு பாதுகாப்பு அளித்து இருந்தது ஆனாலும் அவை போதுமானதாக இல்லை!!

தஞ்சாவூர் நில உடைமையாளர்கள் தங்களது நிலங்களை தங்களது சொந்த சாகுபடி கீழ் கொண்டு வந்து சாகுபடி செய்த குத்தகைதாரர்களை வெளியேற்றுவதற்கான வேலைகளை செய்தனர். இதனால் அதிக அளவில் நில உரிமை பிரச்சினைகளும் குழப்பங்களும் உருவாகின அதனை தடுக்க காமராஜர் அவர்கள் நியாமற்ற முறையில் குத்தகைதாரர்களை வெளியேற்றுவதில் இருந்து பாதுகாப்பதற்காக தனி சட்டம் கர்ம வீரர் கொண்டு வந்தார்.

காமராஜர் சென்னை மாகாண சாகுபடியாளர் குத்தகைதாரர் சட்டம் 1956 இயற்றி குத்தகைதாரர் அல்லது பண்ணையாளருக்கு நன்செய் என்றால் 40% இறவை நீர்பாசனம் கொண்ட நன்செய் என்றால் 35% மீதி எல்லா வகை நிலத்திற்கும் 3ல் 1 பங்கு பணமாகவோ பண்டமாகவோ பிரத்து கொடுக்க வேண்டும் என்று விதிமுறையை வகுத்தார்.

வேளாண்மைக்குரிய நிலுஉடைமை திருத்த சட்டம் 1962 அமுல்படுத்தி ஒரு குடும்பம் 5standard acre நிலம் வைத்து கொள்ளலாம் என்று நடைமுறைபடுத்தினார். இதன் மூலம் நிலகிழார்களிடம் இருந்து அரசாங்கம் கைபற்றிய நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை ரொக்கமாகவோ கடன் பத்திரமாகவோ வழங்கபட்டு நிலங்கள் அரசு வசம் வந்தது.
1955 இல் விவசாயம் சார்ந்த வருமானவரிசட்டத்தை அமுல்படுத்தி காபி இரப்பர் ஏலக்காய தேயிலை போன்ற பண்ணை பயிர்களுக்கு விவசாய வரி விதிக்கபட்டது.

இப்படி நிலம் சம்மந்தபட்ட சீர்திருத்தம் செய்து தமிழகத்தின் விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் நிலங்கள் கிடைக்க பாட்டையை உருவாக்கியவர் அய்யா காமராஜர் அவர்கள் என்றால் மிகையாகாது.
சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#கர்மவீரர் #காமராஜர் #கருணாநிதி #நிலசீர்திருத்தம் #குத்தகை #கமிட்டி #புள்ளிவிவரம் #சாகுபடியாளர் #நிலகிழார்கள் #உடைமை  #சட்டம் #randlord #revenue #leasing #committee #statistics #rent #act #kamarajar #karunanithy

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்