பதிவு செய்யபடாத உயிலை கையில் வைத்து இருக்கிறீர்களா?




பதிவு செய்யாத ஒரு உயிலை உயில் எழுதியவர் இறந்த உடன் அதனை நடைமுறைக்கு கொண்டு வர பாடாய் பட வேண்டி இருக்கிறது.

உயில் எழுதியவர் இறந்த உடன் உயிலை எடுத்து கொண்டு கிராம நிர்வாக அதிகாரியை சந்தித்து  பட்டா மாற்ற சென்றுவிடுவார்கள்.

வி அதனை பார்த்துவிட்டு உயில்  பதிவு செய்யவில்லை இந்த உயில் செல்லாது என்று அவருக்கு தெரிந்ததை சொல்லி உயிலின் பயனாளியை பயமுறுத்தி விட்டுவிடுவார்கள்.
உயில் எழுதுபவர் உயிரோடு இருக்கும் போதே சார்பதிவகத்தில் தோன்றி எழுதி கொடுக்கிற உயில்தான் சட்ட அந்தஸ்து பெற்றது. பதிவு செய்யாத உயிலை நம்பகதன்மை அற்றது என்று நம்பிக்கை வருவாய்துறை மற்றும் சார்பதிவக அதிகாரிகளிடம் நிலவுகிறது.

ஆனால்எனக்கு தெரிந்து பல பதிவு செய்யபட்ட உயில்களே போலியாக தான் இருக்கிறது.மருத்துவமனையில் இறக்கும் தருவாயில் உயில் பத்திரத்தில் சொத்து வைத்து இருக்கும் நபரின் கையெழுத்தை வாங்கி விடுகின்றனர் .பிறகு பதிவு அலுவலகத்தில் வேறு ஒரு நபரை வைத்து அவரின் கைரேகை வைத்து பதிந்து விடுகின்றனர்.பத்திரத்தில்  போட்டோ ஒட்டுறதுக்கு முன்னாடி ஆதார் கார்டு வருவதற்கு முன்னாடி இப்படி பல உயில்கள் உலவிகொண்டு இருந்தது.

சரி சார்பதிவகத்தில் அந்த உயிலை உயிலின் பயனாளி எடுத்து சென்றால் அதனை தீட்டுகாகிதம் தொடுவது போல அதனை முழுவதுமாக பாரக்காமலேயே நீதிமன்றத்திற்கு போகசொல்லி திருப்பி அனுப்பிவிடுவார்கள்.

பதிவு செய்யாத உயிலை எடுத்து சென்றால் உண்மையில் சார்பதிவாளர்  என்ன செய்ய வேண்டும் என்றால் பின்வருமாறு :

உயிலின் பயனாளியோ அல்லது உயிலை நிறைவேற்றுபவர் என்று உயிலில் குறிப்பட்டு இருந்தால் அவர் சார்பதிவகதில் பதிவு செய்யாத உயிலை உயில் எழுதியவர் இறந்து நான்கு மாத காலத்திற்குள் சார்பதிவகத்தில் பதிவுக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
மேற்படி உயிலின் மேல் சார்பதிவாளர் மன நிறைவு அடைவாரானால் அவர் அதனை பதிந்து கொள்ளல் வேண்டும்.அதில் சந்தேகம் ஏதாகினும் எழும் பட்சத்தில் உயில் சம்மந்தபட்ட குடும்பத்தினர் சாட்சிகள் அனைவருக்கும் அழைப்பாணை அனுப்பி நேரடியாக விசாரணை நடத்தலாம்.

விசாரணை அடிப்படையில் பதியலாம் என்று முடிவு எடுத்தால் பதிய வேண்டும். விசாரணை முடிவில் பதியகூடாது என்று முடிவு எடுத்தால் பதிய மறுத்து தாக்கலை திருப்ப வேண்டும்.பதிய மறுத்தற்கான காரணத்தை உடனடியாக சார்பதிவகத்தில் புத்தகம் 2ல் சார்பதிவாளர் எழுத வேண்டும்.

ஒருவர் ஒரு உயில் எழுதி அதனை சார்பதிவத்திலேயே வைப்பீட்டில் வைத்துவிட்டார் என்றால் அது பதிவு செய்ததற்கு ஈடாகுமா என்றால் அதுவும் ஈடாகாது.
உயில் எழுதி வைப்பீட்டில் வைத்த நபர் இறந்த செய்திதெரிந்த உடன் சார்பதிவாளர் மனநிறைவு கொண்டார் என்றால் பதிவு செய்யலாம் இல்லை என்றால் விசாரணை நடத்தி பதிவு செய்யலாம் அல்லது பதிவு மறுக்கலாம்.

இறந்தவுடன் உயிலை கொண்டு செல்ல வேண்டும் உயில் எழுதி வைத்ததே தெரியலை ஒரு வருஷம் கழித்துதான் பழைய அலமாரி சுத்தம் செய்யும்போதுதான் கிடைத்தது. உயிலை எங்க குடும்பத்திற்குள்ளே மறைச்சுவைச்சிட்டாங்க  இரண்டு வருஷம் கழித்துதான் கிடைத்து என்று எல்லாம்  சொல்வீர்கள் என்றால் அந்த பதிவு செய்யாத உயில் வீணதான் என்று முடிவு எடுத்துகொள்ளுங்கள்.

ஆக பதிவு செய்யாத உயிலை வைத்து இருப்பவர் அக்கம் பக்கம் இருக்கும் நபர்களை கேட்டு குழம்பிகொண்டு இருக்காமல் உடனடியாக சார்பதிவகம் சென்று பதிந்து கொடுக்க முதலில் சொல்லுங்கள்.
 
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!
இப்படிக்கு
 சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )   


#உயில் #கிராமம் #நிர்வாகம்  #பட்டா  #விஏஒ #சட்டம் #அந்தஸ்து #வருவாய்துறை  #சார்பதிவகம் #கையெழுத்தை #கைரேகை #குடும்பத்தினர் #சாட்சிகள் #village #administration #deed #VAO #act #revenue #relatives #signature #fingerprint #family

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்