பத்திரத்தில் நடக்க கூடிய தவறுகளும் வாங்குபவர் செய்ய வேண்டிய உபாயங்களும்!

    
             
ஒரு விடுதலை பத்திரத்தில் ஒரு சகோதரி தன் அண்ணணுக்கு விடுதலை பத்திரம்  எழுதி கொடுக்கிறார் அதில் சொத்து விவரங்களே இல்லை. எனக்கான சொத்துக்கள் என்றுதான் பொதுவாக எழுதி இருக்கிறார்கள் .
அந்த பதிவு செல்லும் அவை சாதாரண தவறுதான்.இது போல அனைத்து பத்திரங்களிலும் சொத்து விவரம் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அந்த பதிவு செல்லும்.

மேலும் சொத்து விவரத்தை முழுமையாக குறிப்பிடப்படபடாமல் எதாவது ஒரு விவரம் விடுபட்டு இருந்தாலும் அந்த பத்திரம் செல்லும் .
ஆனால் மேற்படி சொத்தை நீங்கள் வாங்கும் பட்சத்தில் சொத்துவிவரத்தை காட்டாததற்கு காரணம் இயல்பான பிழையா கான்ஸியஸான தவறா என்று பார்க்க வேண்டும்.இயல்பான பிழை என்றால் எந்தவித சிக்கலும் இல்லை!

சில நேரத்தில் பத்திரம் எழுதி கொடுப்பவருக்கு எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது என்று தெரியாமல் இருப்பதற்கு மறைக்கபட்டு இருக்கிறதா? எழுதி கொடுத்தபிறகு எழுதி கொடுத்தவர் நீதிமன்றதில் எழுதிகொடுத்ந பத்திரத்திற்கு எதிராக வழக்கு ஏதாவது தாக்கல் செய்து இருக்கிறாரா என்று பார்க்க வேண்டும்.

இது நிறைய பார்த்து இருக்கிறேன் கூட்டு சொத்து அல்லது வாரிசுரிமை சொத்து அதில் மைனருக்கு 17 வயது ஆனால் 19 வயது என்று பத்திரத்தில் குறிப்பிட்டு பத்திரம் போட்டு விடுகின்றனர்.அப்படி என்றாலும் பதிவு செல்லும்
ஆனால் நீங்கள் அந்த சொத்தை வாங்கவேண்டும் என்று முடிவு செய்தால் மேற்படி மைனர் 21 வயதுக்குள் மேற்படி பத்திரத்தை எந்த ஆட்சேபனையும் செய்யாமல் இருக்க வேண்டும்.

ஐந்து பேர்  இருக்கும்  கூட்டு சொத்து அதில் நான்கு பேர் மட்டும் கிரயபத்திரத்தில் அல்லது வேறு பத்திரத்தில் கையெழுத்து போட்டுவிட்டு அந்த பத்திரம் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்றால் அந்த பதிவும் பத்திரமும் செல்லும் .

ஆனால் நீங்கள் அந்த சொத்தை வாங்கும் போது கையெழுத்து போடாத ஒரு நபரின் உரிமை உங்களுக்கு தடையாக இருக்கும்.எனவே அந்த நபரிடம் சொத்தில் இருந்து அவரின் உரிமை பங்கை வெளியேற்றுவதற்கு விடுதலை பத்திரம் எழுதி வாங்க வேண்டும்.

நீங்கள் வாங்கும் பத்திரங்கள் சார்பதிவகத்தில் உள்ள தவறான புத்தகத்தில் பதிவு ஆவணப்படுத்தப்பட்டது. உதாரணமாக புத்தகம் 1ல் பதிந்து இருக்க வேண்டிய செட்டில்மெண்டு பத்திரத்தை புத்தகம் 4 ல் பதிவு செய்து விட்டார்கள் என்றால் பத்திரம் செல்லும் ஆனால் நீங்கள் சொத்தை வாங்கும் போது மாவட்ட பதிவாளரிடம் மனு செய்து புத்தகத்தை திருத்தம் செய்ய சொல்லலாம்.

பத்திரத்தில் பதிவுதுறை  முத்திரையை  பதிக்கவில்லை  பக்க எண்ணிக்கைகான சீல்கள் இல்லை  என்றாலும் பத்திரபதிவு செல்லும் ஆனால் நீங்கள் வாங்கும்போது அதனால் எந்த வில்லங்கமும் இல்லை என்று பதிவுதுறையில் விசாரித்து கொள்ள வேண்டும்.சொத்தை வாங்குபவரிடம் உறுதிமொழியும் வாங்கி இருக்க வேண்டும்.

 குறைவான முத்திரைத்தாள் கொண்டு பத்திரம் செய்து இருந்தால் பதிவும் பத்திரமும் செல்லும் நீங்கள் வாங்கும் போது முத்திரை தாள் சிக்கல் காரணமாக பத்திரம் சார்பதிவகத்தலேயே நிலுவையில் இருக்கிறதா அல்லது பத்திரம் எழுதி கொடுப்பவர் கையில் இருக்கிறது ஆனால் முத்திரைதாள் நிலுவை கட்ட சொல்லி அறிவிப்பு  இருக்கின்றதா என்று பாரத்துவிட்டு சொத்தை வாங்க வேண்டும்.

இப்படிக்கு
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில் முனைவர்
தொடர்புக்கு : 9841665836

( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற  அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட “நிலம் உங்கள் எதிர்காலம்” புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#பத்திரம் #bond #deed #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அடுக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம் #பாகபிரிவினை #உயில்  #பத்திரபதிவு

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்