காலாவதியாகிப் போன நகல் எழுத்தர்கள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்..!!


கணினி பயன்பாடும் கம்ப்யூட்டரின் வேகமும் இணையதளத்தின் வளர்ச்சியும் இன்று அசுர வேகத்தில் வந்துவிட்டதால் ஒழிக்கபட்ட வேலைவாய்ப்புகளில் ஒன்றுதான் இந்த நகல் எழுத்தர் பணி.

பத்திர அலுவலகத்திற்கு வெளியே ஆவண எழுத்தருக்கு பக்கத்தில் நகல் எழுத்தரும் அமர்ந்திருப்பதை பழைய ரியல் எஸ்டேட் ஏஎஜண்டுகள் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பார்த்து இருப்பார்கள்.

அந்தகாலத்தில் கிரைய பத்திரங்களை முத்து முத்தான அழகான கையெழுத்துகளில் கிரைய சரத்துக்களை ஆவண எழுத்தர்களை போலவே இவர்களும் எழுதுவார்கள். ஆனால் இவர்களுக்கு ஆவண எழுத்தருக்கான சட்டநுணுக்க தகுதிகள் அவ்வளவு தேவைபடாது.

நகல் எழுத்துகளுக்கும் ஆவண எழுத்துக்களைப் போலவே தேர்வுகள் எல்லாம் நடத்தி நகல் எழுத்தர் லைசென்சு கொடுப்பார்கள்.எல்லாம் சரி நகல் எழுத்தருக்கு என்னதான் பணி என்றால்

கணினி பயன்பாடு இல்லாததற்கு முன்பு கிரைய பத்திரம் ஆவண எழுத்தர் மூலம் முத்திரை தாளில் டைப் செய்து அல்லது எழுதி விடுவார்கள் அந்த கிரயபத்திரத்தின் இன்னொரு பிரதி சார்பதிவக ஆவணத்தில் filing Copy ஆக பாதுகாத்து வைப்பதற்கு அதனை அப்படியே ஒரு நகல் பார்த்து எழுதி அதனை சார்பதிவகத்தல் வைப்பது  தான் நகல் எழுத்தரின் வேலை
பெரிய லெட்ஜர் சைஸில் நகல் சீட்டு என்று ஒன்று சார்பதிவகத்திற்கு வெளியே விற்பனைக்கு இருக்கும் அந்ந நகல் சீட்டு A3 சைசில் இரண்டு தாள்களாக இருக்கும் சிறிய அட்டைபோல் கெட்டியாக இருக்கும் சாதாரண தாள் போல இருக்காது அதில் வரி வரியாக கோடு போட்டு இருக்கும்.

இப்படிபட்ட  நகல் சீட்டில் கிரைய பத்திரத்தில் என்னவெல்லாம் எழுதி இருக்கிறதோ அதனை ஒரு வரி விடாமல் நகலில் எழுதிய அதனை கிரைய பத்திரம் பதிவுக்கு தாக்கல் செய்யும்போது இந்த நகல் சீட்டையும் சேர்த்து அந்தகாலத்தில் பத்திரம் செய்பவர்கள் தாக்கல் செய்வார்கள்.
இந்த நகல் சீட்டுகளை எல்லாம் ஒன்றின் மேல ஒன்று அடுக்கி பெரிய புத்தகமாக தைத்து விடுவார்கள் அந்த புத்தகங்களில் இருந்து தான் எதிர்காலத்தில் ஆவணங்களின் நகல் தேவைபட்டால் அதில் இருந்து  பார்த்து எழுதி (xerox machine வருவதற்கு முன்) கொடுப்பார்கள்.

இன்றும் பழைய கிரயபத்திரங்களின் நகலை கேட்டு Copy of the Document நீங்கள் சார்பதிவகத்தில் போட்டால் நகலை நான் முன் சொன்ன நகல்ஷீட்டுகளினால் ஆன புத்தகத்தில் இருந்து Xerox எடுத்து கொடுப்பார்கள். அதில் பழைய நகல் எழுத்தர்களின் கையெழுத்துகளை நீங்கள் பார்க்கலாம்.

இப்பொழுது computer scanning வந்த பிறகு நகல் எழுத்தர் என்னாலே யார் என்று தெரியாத அடுத்த தலைமுறை வந்துவிட்டது.நான் தொழில் ஆரம்பித்த காலங்களில் கணிணி மயமே ஆகாத Rural சார்பதிவகத்தில் திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைபட்டியில் சார்பதிவகத்தில் copy of the document க்கிற்காக ஒரு நகல் எழுத்த்ர் xerox போடாமால் நகல் எழுதி கொடுத்தார்.

அதுதான் நான் பாரத்த கடைசி நகல் எழுத்தர்.

ஆக சார்பதிவக ஆவணகாப்பகத்தில் மக்களுடைய  கிரயபத்திரங்களை நகல் எழுதி உள்ளே வைக்கவும் எதிர்காலத்தில் சார்பதிவகத்தில் இருந்து பிரதி எடுக்கவும் செய்கின்ற முக்கிய வேலையை நகல் எழுத்தர்கள் செய்து இருந்தார்கள் என்பதை நினைவில் கொண்டால் போதுமானது அவர்களுடைய ஆவணங்கள் எப்படி இருக்கும் என்ற புரிதல் இருந்தால் நிலம் வாங்குபவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



சொத்துக்கள் சேரட்டும்!ஐஸ்வர்யம் பெருகட்டும்!!

இப்படிக்கு

 சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

தொடர்புக்கு : 9841665836



( குறிப்பு ); சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )  



இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3


#கணினி #இணையதளம் #பத்திரம் #அலுவலகம் #நகல் #சட்டநுணுக்கம் #ரியல் #எஸ்டேட் #எஜெண்டுகள் #லைசென்சு #கிரையபத்திரம் #சார்பதிவகம் #xerox-machine  copy-of-the-document #scanning #தொழில் #நிலம் #ஆவணங்கள் #computer #website #licensing #office #copy #attorney #realestate #agents #license #copyright #dependency #xerox-machine #copy-of-the-document #scanning

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்