சம்மத பத்திரம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

            
1) சம்மத பத்திரத்தை ஒப்புதல் பத்திரம் என்றும் ஆங்கிலத்தில் concern deed என்றும் Ratification Deed என்றும் சொல்வார்கள்.

2) ஒரு பங்கு பிரிக்கபடாத கூட்டு சொத்தை வாரிசுதாரர்கள் அனைவரும் சேர்ந்து விற்பனை செய்து விடுகின்றனர்.அப்பொழுது ஒரு வாரிசுதார் மட்டும் கையெழுத்து போடாமல் விடுபட்டு விட்டது.

3) உதாரணமாக  பெண் வாரிசுகளிலோ ஒருவர் சிறு வயதிலேயே குடும்பத்திற்கு பிடிக்காதவர்களிடம் அல்லது சாதி மாறியோ திருமணம் செய்து கொண்டு வேறு ஊரில் செட்டில் ஆகிவிடுவர்.

4) சில வாரிசுகள் சின்ன வயதிலேயே ஊரை விட்டு வீட்டை விட்டு ஒடி விடுவார்கள் சிலர் காணாமல் போய்விடுவார்கள்.அல்லது சில வாரிசுகள் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவராக இருந்து முதல் மனைவி மக்களோடு ஒட்டாமலே இருப்பவர்களும் இருப்பார்கள்.

5) ஈகோ வினால் சண்டையிட்டு கொண்டு பங்கு கிடைக்க கூடாது என்று தனக்கு பிடிக்காத வாரிசுகளை மறைப்பவர்களும் உண்டு. இப்படி பல வகையில் விலகிபோனவர்கள் விலக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு சொத்தில் உரிமை கூறு உரிமைபங்கு அல்லது ஏதாவது வழி,நீர்பாய்ச்சல்,போன்ற பாத்தியதை இருந்தால் அவரிடம் வாங்க வேண்டிய பத்திரம் சம்மந்த பத்திரம்.

6) பத்திரத்தில் என்ன ஷரத்து இருக்கும் என்றால் சம்மத பத்திரம் எழுதி வாங்கும் நபர் ஏறகனவே சொத்துவிவரத்தில் உள்ள இந்த வருடம் இந்த மாதம் இந்த தேதி கிரயம் பெற்றுள்ளார் அதனுடைய ஆவண எண் இது.

7) இந்த ஆவணத்தில் உள்ள சொத்து விவரத்தில் எனக்கு பாத்தியதை இருக்கிறது அன்று தேதியில் நடந்த  கிரயத்தின் போது நான் கையெழுத்து போடவில்லை.அதனால் இன்று அந்த கிரயத்தை ஒப்புகொள்கிறேன்.
என்று சம்மதம் கொடுப்பதே சம்மத பத்திரத்தின் தன்மை ஆகும்.

8) கூட்டு சொத்தோ நிறைய வாரிசுகள் இருக்கும் சொத்தோ எது நீங்கள் வாங்க வேண்டும் என்றாலும் எதிர்காலத்தில் சம்மதபத்திரம் போட கூடாது.அது நமக்கு தேவையற்ற செலவு அலைச்சல் என்று உணரந்து சொத்தின் வாரிசுகளை ஆராய்தல் வேண்டும்.

9) ஆங்கிலத்தில் Ratification Deed என்று சம்மத பத்திரத்தை சொலவார்கள் திருத்த பத்திரத்தை Rectification Deed என்று சொல்வார்கள் என்னை போல ஆளுங்களுக்கு Rectification க்கும் Ratification க்கும் வித்தயாசம் கொஞ்சம் லேட்டாகாதான் புரியும்.

இதனை படிக்கும் நம்ம  அலைவரிசை ஆட்கள் எல்லாம் rectification க்கும் ratification க்கும் அர்த்தம் புரிந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு:
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் பயிற்சியாளர்
தொழில்முனைவர்.
9841665836.

(குறிப்பு) :சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு :  9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )

இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்டநிலம் உங்கள் எதிர்காலம்புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3

#ஒப்பந்தம் #பத்திரம் #பதிவு #முத்திரைதாள் #பட்டா#கடன் #அடமானம் #mortage #பத்திரம்பதிவு #கிரயம் #பவர் #செட்டில்மெண்ட் #தானம் #கூர்சீட்டு #வெண்ணிலாபத்திரம் #அக்ரிமெண்ட் #அக்குவிடுதலை #அடமானம் #சுவாதீனம் #பாகபிரிவினை #உயில் #வாரிசுரிமை #சொத்துரிமை

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்