ஏன்? ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் சைரா’(SIRAAA) வில் இணைய வேண்டும் !

                      
பகுதி நேரமாக அல்லது  முழு நேரமாக  ரியல் எஸ்டேட் தொழிலை தமிழகம் முழுதும் பலர் செய்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் இத்தனை பேர் இந்த தொழில் செய்கிறார்கள் என்ற பட்டியல் இல்லை.சங்கத்தில் இணைவதின் மூலம் ஒரு முகவர் பட்டியலை தயாரிக்க முடியும்.

அடிதட்டில் ரியல் எஸ்டேட் செய்யும் தரகர்களுக்கு அணுகும்படியான எளிமையான சங்க தலைமையாக இருக்கிறது.

ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகளுக்கு வணிகத்தின் போது கமிசன் கொடுப்பதில் வேண்டா வெறுப்பு வெகுஜன மக்களால் காட்டபடுகிறது.அந்த நேரங்களில் சங்க பின்ணணி உதவிகரமாக இருக்கும்.

வெளிபார்வையில்  ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள் டாம்பீகமாக இருப்பது போல தெரியும் ஆனால் அவர்கள் மன அழுத்தமும் உள்ள உளைச்சலும் அவர்களுக்கு மட்டும்தான் தெரியும். நிரந்தர மாத வருமானம் இல்லாத பாதுகாப்பின்மை சூழல்எப்பொழுதும் ஏஜெண்டுகள் வாழ்வில் நிலவி கொண்டு இருக்கிறது. இதனை எல்லாம் அரசுக்கு வெளிபடுத்த சைரா தேவை!!

சங்கத்தினால் அதிக நெட்வரக் மற்றும் தொடர்புகள்  விஸ்தரிக்கும்.
அரசின் புதிய புதிய விதிகள் மாற்றங்கள் பற்றி கல்வி கொடுக்க பயிற்றுவிக்க சங்கம் போன்ற ஒரு அமைப்பு தேவை!

ரியல் எஸ்டேட் தரகு தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு நல வாரியம் இல்லை அதனை பெறுவதற்கு சங்கம் தேவை!

ரியல் எஸ்டேட் தொழில் பற்றி எதிர்மறையான எண்ணங்களே எதிர்மறை செய்திகளே மக்களிடம் நிலவுகிறது. அதனை மாற்றுவதற்கும் சங்கம் தேவை!
சங்கத்தில் இணைந்து இருப்பதன் மூலம் நமக்கு மக்கள் மத்தியில் நம்பகதன்மையை அதிக படுத்தி கொள்ள முடியும்.

இது ஒரு தொழில் என்று இன்னும் மனதார யாரும் ஏற்றுகொள்ளவில்லை. ஆனால் ரியல் எஸ்டேட் ஏஜெண்டு இல்லாமல் ஒரு சொத்தையும் வாங்க முடியாது. நில மற்றும் சொத்து வியாபாரத்தில் தவிர்க்க முடியாத  சக்தியாக முகவர்கள் இருக்கிறார்கள். சங்கத்தின் மூலமாகதான் இதனை தொழில் என்று அரசை ஏற்றுகொள்ள வைக்க முடியும்.

தங்கம் சாதிக்காததை சங்கம் சாதிக்கும் நமது ரியல் எஸ்டேட் துறையில் உள்ள ஓட்டைகளை நாமே அடைக்க முடியும்!

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்/ரியல்எஸ்டேட் தொழில் முனைவர்
9841665836

குறிப்பு: ரியல் எஸ்டேட் சங்கத்தில் இணைத்துகொள்ள விரும்புபவர்கள்.தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: SIRAAA* தென்னிந்திய  மனைவணிகர்கள் மற்றும் முகவர்கள் சங்கம். தலைமையிடம்: 883, சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை,பாடி.சென்னை. 600050. செல் :7200779966

                      

உறுப்பினர் கட்டணம் ரூபாய் 300 மட்டுமே அந்த கட்டணத்திலேயே அடையாள அட்டை வழங்கபடுகிறது. (அரசின் சங்க விதிகளில் இல்லாத pride membership 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று மெம்பர்ஷிப் விற்பனை செய்யாத சங்கம்).

#housing-socity #siraa #ரியல் #எஸ்டேட் #மெம்பர்ஷிப் #pride #membership #மனைவணிகர்கள் # சங்கம் #சைரா #Paranjothi_Pandian #public #interest #information #entrepreneur #realestate #Realestate_consultant #Realestate_analyst #plotpromoters #builders #land_Identification #Landacquisitionissues #landvaluation #land_registration

Comments

Post a Comment

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்