சமத்துவத்திற்கு எதிரான கிராமங்கள் ஒழிக்கபட வேண்டியவையே!!

 சமத்துவத்திற்கு எதிரான கிராமங்கள் ஒழிக்கபட வேண்டியவையே!!



விவசாயம் தான் நாட்டின் வருவாய் என்று இருந்த பொழுது எல்லா கிராமங்கள் மிகவும் முக்கிய பங்காற்றின. ஒவ்வொரு கிராமமும் ஒரு தனி தனி விவசாய உற்பத்தி தொழிற்சாலையாக இயங்கின.
அந்த கிராம நொழிற்சாலையில் அந்த அந்த சாதிக்கு ஏற்றவாறு வேலைகள் பிரித்துக் கொடுக்கப்பட்டு பரம்பரை பரம்பரையாக அடிமைகள் ,வேளாளர்கள்,வியாபாரிகள்,பிராமணர்கள் போன்ற சமுதாய கட்டமைப்புகளை உருவாக்கி நிலையான விவசாய உற்பத்தி நடந்து உள்ளது
மேற்படி கிராமங்கள் மற்றும கிராம மக்கள் விளைச்சலில் இருந்து தங்கள் வாழ்கையை பொருளாதார ரீதியாக உயர்த்தி கொண்டனர் அரசு உத்தியோகமோ வங்கி உத்தியோகமோ கிராம மக்கள் அப்பொழு பெருமளவில் கிடையாது. அந்த காலத்தில் அரசிற்கு வேலை பார்த்தால் கூட அதற்கு விவசாய நிலங்கள் ஒதுக்கபட்டு அதில் இருந்து வரும் விளைச்சலைதான் ஊதியமாக வைத்து கொள்ள வேண்டும்
உண்மையில் காடு விளைந்தால் தான் எல்லாருக்கும் சம்பளம் வாழ்க்கை ஏன் அரசர்கே வருமானம். அதனால்தான் அனைத்து நிர்வாகமும் கிராமத்தின் மீதே கட்டபட்டு இருந்தது.
பீர்க்கா, தாசில், அமுல்தார், பர்கான சௌபா போன்ற அனைத்தும் கிரமங்களின் மேல் கட்டப்படுகின்றது.
மேற்படி கிராமங்களில் இப்பொழுது ஆட்கள் இல்லை! 100 வீடு இருந்த கிராமத்தில் 20 வீடுகள் தான் இருக்கிறது. மீதி வீடுகள் எல்லாம் ஆட்கள் இல்லாமல் அனாதையாக இருக்கிறது அனைவரும் நகரங்களை நோக்கி நகர்ந்நுவிட்டனர்
கிராமங்கள் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி நிற்கிறது. இன்னும் ஐம்பது ஆண்டுகள் சென்றால் கிராமங்களே உருமாறிவிடும். நிலத்தை ஆள பயன்பட்டு வந்த சாதி இன்னும் கிராமங்களில் தான் அதன் உயிரை வைத்து இருக்கிறது.ஆனால் கிராமங்கள் மரிக்கும்பொழுது சாதி அபிப்பிராயங்களும் முற்றிலும் மறைந்து இருக்கும்
பசுமை,இயற்கை விவசாயம் கிராம முன்னேற்றம் என்று எல்லாம் கிராமங்களை புணர்வாழ்வு செய்ய முயலுகின்றனர். கிராமங்கள் அன்பின் இருப்பிடங்களாக நிலைநிறுத்த முயலுகின்றனர். என் பார்வையில் கிராமங்கள் சாதிய திமிரின் அடையாளம்.மனிதர்களை மனிதர் பிரிக்கின்ற சைக்கோக்கள் வாழவிடங்கள்
எனவே கிராமங்கள் விரைவில் ஒழிந்து போனால் சிறப்பானது தான்
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்