மனிதர்கள் நிற்கின்ற கூண்டுக்கு கிளிகூடு என்று பெயராம்!!!

  மனிதர்கள் நிற்கின்ற கூண்டுக்கு கிளிகூடு என்று பெயராம்!!!



அதோ அதற்கு பெயர் கிளிகூடு, சுவர்களால் ஒரு கூண்டு போல் கட்டி இருப்பார்கள். ஒரே ஒரு ஆள் மட்டும் நுழையும் படி ஒரு வழி விட்டு இருப்பார்கள். இரண்டு அடிக்கு இரண்டு அடி தான் இருக்கும் அதனுள் இருந்து ஒரே ஒரு துளையை போட்டு எதிரியை குண்டு மூலம் தாக்குவார்கள்
அந்த கால கோட்டைகளில் கோட்டை மதில் சுவர்களுக்கு மேல் கோட்டையை சுற்றிலும் இந்த கிளி கூடு என்ற செங்கல் சுவரால் ஆன கூடு அமைக்கபட்டு இருக்கும்.
எதிரி நாட்டு வீர்ர்கள் கோட்டையை முற்றுகை இடும் பொழுது காவல்காடு என்ற கருவேலம் மூங்கில் இலந்தை போன்ற முள்மரங்கள் காரைசூரை முட் செடிகள் ,அச்சங்கொடி போன்ற இன்னும் முள் நிறைந்த கொடிகளை படரவிட்டு எதிரிகளை வேகாமாக முன்னேற விடாமல் அவர்கள் அதில் பார்த்து பார்த்து வரும்பொழுது இந்த கிளி கூண்டில் இருக்கின்ற நபர்கள் தங்கள் குண்டுகளை இதனுள் இருந்து சுட ஆரம்பித்து எதிரி படைகளை தாக்குவார்கள்
இதற்கு பிறகு முதலைகள் நிறைந்த அகழிகள் இருக்கும் அதில் வரும் பொழுது கோட்டை மதில் சுவர் வெளிபுறத்தில் ஒட்டியவாறு புறா கூடு இருக்கும் அதில் இருந்து தாக்குவார்கள்.
ரியல்எஸ்டேட் களபணிக்காக திண்டுகல் சென்ற பொழுது ஆன் தி வேயில் இந்த திண்டுகல் கோட்டையையும் பார்த்தாயிற்று
அதில் தான் இந்த கிளிகூடு படத்தை எடுத்தேன். இங்கு புறாகூடை காணோம்!!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்