மறந்து விட்ட தளவாய்அரிய நாயக முதலியார் வரலாறு!!!

 மறந்து விட்ட தளவாய்அரிய நாயக முதலியார் வரலாறு!!!



மதுரைக்கு களபணி சென்று இருந்த பொழுது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நானும் நண்பர் அடோன் அவர்களும் சென்றோம்.
ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொரான விளைவால் பார்வைக்கு அனுமதி மறுத்து விட்டனர்.
அந்த ஆயிரங்கால் மண்டபத்தை கட்டியது தளவாய் அரிய நாயக முதலியார் அவர்கள் தான் அவரின் சிலை ஒன்று குதிரை மீதேறி தாடி வைத்தவாறு நின்று இருப்பார் .

அந்த சிலை அரியநாயக முதலியார் உடையது என்று பழைய நூல்களில் படித்து இருக்கிறேன். அவர் சிலை கீழ் போட்டோ எடுக்கலாம் என்றால் போன் எல்லாம் பிடுங்கி விட்டு தான் அனுப்புகிறார்கள்.

கிருஷண தேவராயரின் ஆட்சியை மதுரையில் பிரசவித்த விசுவநாத நாயக்கருக்கு மிகவும் பக்கபலமாக உறுதுணையாக இருந்தவர் அதன் பிறகு விசுவநாத நாயக்கர் மகன் கிருஷ்ணப்பாவிற்கு இராஜ குருவாக வழி நடத்தியவர் தான் இந்த தமிழ் முதலியார்.

பாமினி சுல்தான்களால் கிருஷண தேவராயர் வீழ்ச்சி விஜயநகர போரில் வீழ்ச்சி அடைந்தார்கள் அந்த போரிலும் அரிய நாயக முதலியார் கலந்து கொண்டு சுல்தான்களிடம் தோல்வி அடைந்தாலும் விஜய நகர பேரரசை பெனுகொண்டா சின்னப்பராயர் சீரங்கபட்டினத்திற்கு திருமலைராயர் சென்னபட்டினத்தற்கு செங்க தேவராயர், செஞ்சிக்கு கிருஷணப்பராயர், தஞ்சாவூர் அச்சுதப்பநாயர் மதுரைக்கு குமார கிருஷணப்ப நாயக்கர் என்று தனி தனி முடியாட்சியாக ஆக்க வழி காட்டி மேற்சொன்ன அரசர்களுக்கு எல்லாம் குருவாக இருந்திருக்கிறார்.

இப்படிபட்டவர் காஞ்சிபுரம் பூர்வீகம், மதுரை சோழவந்தானில் முதலியார் கோட்டை வாழ்ந்து அவரின் வாரிசுகள் தென்னாட்டு பாளையகாரர்களிடம் வரிக்கு வசூலிக்கும் மிகபெரிய குத்தகை தாரராக திருநெல்வேலியில் செட்டில் ஆகிவிட்டார்கள்.

வீர ராகவ முதலியார் சத்திரம் என்ற ஊர் பெயரும் நெல்லையப்பர் கோவில் அருகில் இருக்கின்ற அரண்மனை வீடும் அரிய நாயக முதலியார் அவர்களின் வம்சாவழியனரே

தமிழகத்தில் தெலுங்கு பேரரசை நிலை நிறுத்திய மாவீரர் ஆயிரங்கால் மண்டபம் கட்டியவர் ஆனால் இன்று வரலாறு இன்றி நிற்கிறார்.

இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்

#thousandshall #thelungu #kanjipuram #madurai #senji #tirunelveli #palayakarar #leasing #field #meenakshi_temple #ruler #veera_ragav #mudaliyar #sulthar #krishna_thevarayar #thanjavur #krishnapparayar #history

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்