சேலம் சாலைகளில் வெள்ளை துரைமார் பெயர்கள் !!!

  சேலம் சாலைகளில் வெள்ளை துரைமார் பெயர்கள் !!!



கலெக்டராக இருந்த ஹேரி அகஸ்டஸ் பிரட்ஸ் [Harry Augustus Bretts] நினைவாக கலெக்டர் ஆபீஸ் முதல் முள்ளுவாடி கேட் வரையிலான சாலைக்கு பிரட்ஸ் ரோடு என்று இருக்கறது.கலெக்டர் C .T .லாங்லி (C.T.LONGLY) நினைவாக செவ்வாய்பேட்டை மார்க்கெட் பகுதி சாலைக்கு லாங்லி ரோடு என்று இருக்கறது.1914 முதல் 1919 வரை கலெக்டராக இருந்த லீ ( Leigh) , தனியாக ஒரு மார்கெட் பகுதியை உருவாக்கினார். அதற்கு அவர் பெயரே லீ பஜார் ஆகும்.
1857 முதல் 1866 வரை சேலம் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் ஜே.டபுள்யூ.செரி (J.W.Cherry) . நீதி துறைக்கென சேலம் மாவட்டம் முழுவதும் கட்டிடங்கள் கட்டினார் . சிறப்பாக பணியாற்றிய அவரின் நினைவாக சேலம் அஸ்தம்பட்டி முதல் வள்ளுவர் சிலை வரை உள்ள சாலைக்கு செரி ரோடு (Cherry Road) என பெயரிடப்பட்டு இருக்கிறது.
இவை மற்றும் அன்றி இன்று உள்ள ஜான்சன் குடியிருப்பு லைன் ரோடு , பென்சன் லைன் , மிலிட்டரி ரோடு , ஜட்ஜ் ரோடு , பேர்லேண்ட்ஸ், கன் பயரிங் ஸ்ட்ரீட் (குண்டு போடும் தெரு) போன்ற பல பெயர்களை வெள்ளைதுரைமார் சேலம் புகுதிகளுக்கு வைத்துள்ளனர்.
இப்படிக்கு,
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தளர் -தொழில் முனைவர்
9841665836 / 9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்