ஒரு தாசியின் தலைமுறை தாண்டிய பங்களிப்பு!

  ஒரு தாசியின் தலைமுறை தாண்டிய பங்களிப்பு!



கிருஷ்ண தேவராயார் அப்பாஜி என்ற பிராமண மந்திரியுடன் தன் நாட்டில் நகர் வலம் வந்து கொண்டு இருந்த பொழுது அழகான பெரிய பங்களா ஒன்றை பார்த்து விட்டு அதில் இருந்து வரும் நறுமண வீசத்தை உணர்ந்து கோவில் என்று இராயரும் மந்திரியும் வணங்க உள்ளே சென்ற பிறகு தான் அது ஒரு பிரபல தாசியின் வீடு என்று தெரிந்து இராயரும் மந்திரியும்வருத்தமுற்றதாக கோபமுற்றதாக சொல்கிறார்கள் (நான் நம்ப வில்லை இரண்டு பேரும் தாசி என்று தெரிந்து தான் போய் இருப்பார்கள்) பிறகு ஏதோ சச்சரவு ஏற்பட்டு அந்த வீட்டில் இருந்த தாசியையும் அவள் வீட்டையும் இடித்து விட வேண்டும் என்றும் அதற்கு பதிலாக அங்கு கிணறும் தண்ணீர் பந்தலும் கட்ட வேண்டும் என்று அங்கு இருந்த அரச பிரதி நிதிகளிடம் இராயர் சொல்லி இருக்கிறார்கள். அதற்கு அந்த தாசி இந்த வீட்டை இடிக்க வேண்டாம் நானே என் சொந்த செலவில் இந்த பகுதியில் குளமும் கிணறும் வெட்டி மக்களுக்கு அர்ப்ணிக்கிறேன் என்று கூறி இருக்கிறாள். அதன் பிறகு அவளும் அதேபோல சிறப்பான குளத்தை வெட்டி வைத்தாள் என்று வரலாறு சொல்கிறது. இந்த கதையெல்லாம் கிபி 1500 களில் நடந்தது. ஆனால் 1800 களில் பிரெஞ்சுகாரர்கள் தங்கள் இந்தியாவில் தங்கிய செட்டில்மெண்டு பகுதிகளில் நல்ல குடிநீர் வசதி இல்லாமல் தவித்ததால் பிரான்சில் இருந்து வந்த ஒரு என்ஜினியர் லாமரைஸ் இந்த குளத்தில் வற்றாமல் தண்ணீர் இருப்பதையும் இது மொத்த பிரெஞ்சு செட்டில்மெண்டு பகுதிகளையும் தாகத்தை தீர்க்கும் என்றும் கணக்கிட்டு குழாய் பதித்து இந்த தண்ணீரை பிரெஞ்சு மக்களுக்கு கொண்டு வந்தார்
இப்படி அனைத்து பிரெஞ்சு மக்களின் தாகம் தீர்த்த குளத்தை வெட்டிய அந்த தாசிக்கு நன்றி செலுத்தும் விதமாக ஒரு வெள்ளை நிற மண்டபத்தையும் கட்டினார்கள். அந்த மண்டபத்தை அந்த தாசியின் பெயரான ஆயி என்ற பெயரிலேயே ஆயி மண்டபம் என்று பெயரிட்டனர். அது தான் இன்றும் பாண்டிசேரியின் அரசு சின்னமாக இருக்கிறது. நான் நிற்பது ஆயி என்ற தாசி வெட்டிய குளத்தருகில் தான். அதனை இன்று கனகனேரி என்று சொல்கிறார்கள். இந்த ஏரியல் பாதியை மடக்கி அரசு மருந்துவமனை கட்டியுள்ளது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்