NAHAI க்கே எது ஜமீன் கிராமம், எது இனாம் கிராமம் என்று தெரியாமல் 200 கோடியை கோட்டை விட்டது!!

 NAHAI க்கே எது ஜமீன் கிராமம், எது இனாம் கிராமம் என்று தெரியாமல் 200 கோடியை கோட்டை விட்டது!!



ஒரு கிராமத்தில் பெரிய பரப்பில் அனாதீனம் என்று நிலம் இருந்தாலே ஐம்பது வருடத்திற்கு முன்பு அது என்ன வகையான கிராமம் என்று பார்க்க வேண்டும். ஜமீனா? இனாமா? ஸ்தோத்திரியமா? ஜாகிரா? என்று பார்த்தால் தான் அந்த கிராமத்தின் பழைய land tenure புரியும். அதன்பிறகு உச்சவரம்பு அனாதீனாமா என்ற பக்குவம் புரியும்! எந்த வித அறிதலும் புரிதலும் இல்லாமல் யுடிஆரில் இருந்து நிலங்களை பரிசோதித்து விட்டு நிலங்கள் வாங்குவது அறிவு பிழை!
செங்கல்பட்டு ஒருங்கிணைந்த பழைய காஞ்சிபரம் மாவட்டத்தில் திரும்பெரும்புதூர், செய்யூர் இந்த தாலுக்காக்களில் நிறைய ஜமீன் கிராமங்கள் உள்ளன. அதனை கூராயாமல் அதில் இருக்கின்ற அனாதீன நிலங்களை போலி பட்டா போட்டு அப்பாவி பொது மக்களுக்கு விற்றுவிடுகின்றனர். அனாதீன நிலங்களுக்கு பட்டா கொடுக்க நில சீர்திருத்த துறைக்கு இரண்டு வாய்ப்புகள் தான் செக்சன் 37 இன் கீழ் தொண்டு நிறுவனங்களுக்கு பட்டா கொடுக்கலாம், நலிந்த பிரிவினருக்கு F பட்டா கொடுக்கலாம்.
மீதி முறையில் மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் என்று யார் பணம் பெற்று கொண்டு பட்டா கொடுத்தாலும் கிராம கணக்கில் ஏற்றபட்டாலும் அது செல்லாது. அந்த பட்டா கொடுத்த அதிகாரியை தண்டிக்க முடியுமா என்றால் ஆன் லைன் பட்டாவில் பெயர் பிழை தொழில் நுட்ப கோளாறு தவறு என்று சொல்லி விட்டு போய்விடுவார்கள்
இப்படி பட்டா பெற்று இருந்தால் அதற்கென்று அரசாணை போடபட்டு இருக்கும் அதற்கென்று கெசட்டியர் இருக்கும் இப்படிபட்ட அனாதீன நிலங்களை வருவாய்துறை பட்டா கொடுத்து இருக்கிறது என்றால் அரசாணை இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் ,வெறும் பட்டா மட்டும் போதாது
NAHAI நெடுஞ்சாலை துறை பொதுபணத்தை 200 கோடி இழந்து விட்டது். அங்கு நிறைய அப்பாவிகளும்
வீடுகளும் நிலங்களும் வாங்கி இருக்கிறார்கள் அவர்கள் நிலமை பரிதாபம். இன்னும் பலர் சென்னையை சுற்றி உள்ள பல அனாதீன நிலத்திற்கு பட்டா வாங்க போகிறேன் என்று சேப்பாக்கத்தில் அலைந்து கொண்டு இருப்பதை கேள்வி பட்டுக் கொண்டு இருக்கிறேன்
NAHAI நிறுவனமே இது போன்ற வேலைகளுக்கு எல்லலாம் எங்களை கூப்பிடுங்க அய்யா! அரசிடமே நிலதரதின் expert கள் இல்லை!! எனபது தான் இந்த விஷயத்திலிருந்து தெரிகிறது.
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்