எட்டுவழி சாலைதான் வேண்டாம்பா நான்குவழி சாலை போடுங்கப்பா?

  எட்டுவழி சாலைதான் வேண்டாம்பா நான்குவழி சாலை போடுங்கப்பா?



திருவண்ணாமலை டூ அரூர் சாலையில் சாத்தனூர் பெரிய டேமில் இருந்து வரும் தண்ணீருக்காக ஒரு பிக் அப் டேம் இருக்கிறது! இந்த டேமிற்கு பள்ளி மாணவர்கள் school tour இன் பொழுதும் கல்லூரி காதலர்கள் ! ஞாயிற்றுகிழமை குடும்பஸ்தர்கள் எல்லாம் வந்து போவார்கள். குட்டி சுற்றுலா தளம் சிறிது நேரம் ஓய்வெடுத்தோம்.
இந்த பகுதியில் கொஞ்சம் நிலங்கள் என் நிறுவனத்தில் இருக்கிறது! ரொம்ப நாள் கழித்து அதனை பார்க்க நானும் என் பார்ட்னர் இரவீந்திரனும் சென்று இருந்தோம் பக்கத்து ஊரான தண்டராம்பட்டு கொஞ்சம் மாற்றம் தெரிந்து இருக்கிறது !சில கல்லூரி விழுந்து இருக்கிறது. இந்த சாலையை தான் எட்டு வழி சாலை ஆக்க திட்டமிட்டு இருந்தார்கள்! அந்த எட்டு வழி சாலை அரசியல் காரணங்களால் வரவில்லை! சாலை போடுவதில் கூட நாட்டில் அரசியல் இருக்கிறது !பல பகுதிகளில் பயணிக்கும் பொழுது ஊர் தெரு வில் மேலமட்டு மக்கள் இருக்கின்ற தெருவை பஸ் போகும் அளவுக்கு பெரிய சாலை ஆக்கி அதில் பஸ் விட்டு ரியல்எஸ்டேட் மதிப்பை ஏற்றிவடுவார்கள். அது சேரியாக நலிந்த பரிவினர் பாய்மார்கள் வசிக்கும் கிராமங்களில் சாலையை கிராமத்திற்கு வெளியே போடுவார்கள்! அந்த அரசியலை தெரிந்து கொள்ள கூட நலிந்த பிரிவனருக்கு நேரமல்லை!தானிபாடி,அரூர்.பொம்மிடி,பாப்பிரெட்டிபட்டி காரங்க எல்லாம் தமிழ்நாட்டின் நலிந்த பிரிவனர் இப்படிதான் திருவண்ணாமலை வரவேண்டும்! திருவண்ணாமலையில் இருந்து சென்னை பாண்டிசேரிக்கு நல்ல இணைப்பை உருவாக்கி சென்னை வரலாம் !.இவர்களுக்கு எட்டு வழி சாலை வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை ஆனால் கண்டிப்பாக நான்கு வழி சாலை வேண்டும்.மேலே சொன்ன ஊரில் இருந்து வருகிறவர்கள் எல்லாம் சிறிய பாம்பு வளைவுகளில் மேட்டில் இருந்து பள்ளம் நோக்கி போவது போல் இறக்கமாகதான் இருக்கிறது.ஒரு முறை பொம்மிடி டூ திருவண்ணாமலை பைக் பயணத்தில் பாடாய் பட்டேன்!
நல்ல சாலை போடும் திட்டம் வந்தால்தான் இங்கு இருக்கும் சொத்தை விற்கலாம் இல்லை அதுவரை போட்டு வைக்கலாம் பார்ட்னர் என்று சொல்லிகொண்டு வந்தோம்!
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர்-தொழில் முனைவர்
9841665836/9962265834

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்