புதிய நிலநிர்வாகத்தை புதிய செட்டில்மெண்டை தமிழக அரசு கொண்டுவரவேண்டும்!

புதிய நிலநிர்வாகத்தை புதிய செட்டில்மெண்டை தமிழக அரசு கொண்டுவரவேண்டும்! 

தமிழ்நாட்டின் பழைய செட்டில்மெண்டு கணக்குபடி நீலகிரி ஆகிய மாவட்டங்களை தவிர மீதி மாவட்டங்களை கணக்கிட்டு பார்த்தால் சராசரி 2கோடி 60 இலட்சம் ஏக்கர் சாகுபடி நிலம் உள்ள்து. சுமார் சாகுபடிக்கு லாய்க்கான 5இலட்சம் ஏக்கர் தரிசு உள்ளது. ஆனால் அடிதட்டு நடுத்தர மக்களான SC,ST,MBC,மக்களுக்கு BC,FC யில் கடைநிலை ஏழைகளுக்கு நிலம் இறங்கவே இல்லை! ST யில் நீலகிரியில் கோத்தருக்கும் தோடருக்கும் வெள்ளைகாரன் செட்டில்மெண்டு கொடுத்ததால் அவர்களுக்கு நிலம் இறங்கி இருக்கிறது. ஆனால் அதனையும் பிற சமூகத்தினர் அனுபவிக்கிறார்கள்.தேவேந்திர குலத்தார்களும், வன்னியர்களும் பிராமணர்களின் இனாம் கிராமங்களில் பிராமண மிராசுகளின் கீழ் உழவு,நடுவு,அறுவடை போன்ற உழைப்புகளை கொடுத்து கொண்டு இருந்து கொண்டு இருந்தார்கள். 1960 களில் பிராமண எதிர்ப்பு பிரசாரத்தால் கிராமங்களை விட்டு மும்பை சென்னை போன்ற நகரங்களுக்கு நகர்ந்துவிட்டதால் செட்டில்மெண்டு கணக்கில் வன்னியர்கள் தேவேந்திரர்களுக்கு நிலங்கள் இறங்கி இருக்கிறது. ஆக பிராமண இனாம் கிராமம் தவிர்த்து மீதி கிராமங்களில் வன்னியர்களுக்கும் தேவேந்திரர்களுக்கும் நிலம் இறங்கவே இல்லை! பறையர்களுக்கு பஞ்சம நிலங்கள் என்றும் தரிசுகளை அசைமெண்டுநிலங்கள் என்றும் இறங்கிய கண்டிசன் நிலங்கள் எதுவும் தற்பொழுது அவர்களிடம் இல்லை. அருந்ததியர்கள் நிலத்தை இன்னும் ஆளுகையே செய்யவில்லை! செட்டில்மெண்டில் நிலம் பெற்ற சமுகத்தினர்கள் 1990 ற்கு பிறகு உலகமயமாக்கலுக்கு நிலத்தின் விலை உயர்வை என்ஜாய் செய்து கொண்டு இருக்கிறார்கள். இராஜவாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் ஆனால் அடிதட்டு நடுத்தர மக்களோ இந்த காட்சியை கண்களில் வெறுமையோடும் ஏக்கத்தோடும் பார்த்துகொண்டு இருக்கிறார்கள். இந்தநிலையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலத்தை கொடுக்கின்ற பணிகள் நடைபெறுகிறது. அரசும் புறம்போக்கை தனக்கானாதாகவும் தரிசை தனக்கானதாகவும் வேலியிட,வழிகாட்டிமதிப்பில் பூஜ்யமதிப்பிட என்று தனது சொத்தாக பாவிக்க ஆரம்பித்துவிட்டது. அறமற்ற இந்துஅறநிலையதுறை, குரானுக்கு எதிராக தஜ்ஜல் போர்டாகி வரும் வக்கப் போர்டு! 27 இலட்சம் ஏக்கர் நிலங்களை கடைசி மனிதனுக்கு கொண்டு சேர்க்காத பூதான போர்டு எல்லாம் இலாபவெறி மட்டுமே நோக்கமாக கொண்ட கம்பெனிகளாக மாறிவிட்டது. அடிதட்டு நடுத்தர மக்களும் நிலத்தையும் நீரையும் தவிர மீதி பிரச்சினைகளில் கவனத்தை செலுத்தி உலர்ந்து போய்விட்டனர். மக்கள் இயக்கங்கள் எல்லாம் ஆட்டு தலையை விட்டுவிட்டு வாலின் நுனியை பிடித்து இயக்கம் நடத்திகொண்டு இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் நன்றாக இருக்க அரசு நினைத்தால் மீண்டும் ஒரு புதிய நிலசெட்டில்மெண்டை அமுல்படுத்த வேண்டும் .அதில் பஞ்சம நிலம், வக்கப் நிலம், பூமிதான நிலம், அறநிலையதுறைநிலம், அனாதீன நிலம் போன்றவற்றிற்கு எல்லாம் முடிவு கட்ட வேண்டும். நில சிக்கலுக்காக தாலுகா,கோர்ட்டு என்று அடிதட்டு நடுத்தர மக்கள் அலைகிழிக்கபடுவது நிறுத்த வேண்டும். நிலசீர்திருத்தம் என்று ஒரு துறையை வைத்து கொண்டு கிழிந்த துணியை எத்தனை ஒட்டு போட்டு கொண்டு இருப்பீர்கள். நில நிர்வாகம் அடிதட்டு நடுத்தர மக்களுக்கு ஏற்றதாய் மாற்றி(Optimized)செய்ய புதிய செட்டில்மெண்ட் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். அன்றைய கால செட்டில்மெண்டுள் நடக்கும் பொழுது அடிதட்டு நடுத்தர மக்கள் கல்வி இல்லாமல் இருந்ததால் கோட்டை விட்டுவிட்டனர். இனி ஒரு செட்டில்மெண்டு நடந்தால் அது மக்கள் செட்டில்மெண்டாக இருக்கும்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதிபாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவர்

9841665836

 

#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #newland #administration #newsettlement #nilgiri #இனாம்கிராமம் #panjamiland #வக்கப்நிலம் # பூமிதான நிலம் #அறநிலையதுறைநிலம் #அனாதீன நிலம் #landreform


Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்