அறமற்ற இந்து அறநிலையதுறையையும் தஜ்ஜல் போர்டாக மாறிவரும் வக்கப் போர்டையும் கலைத்துவிட வேண்டும்.அதன் இரண்டு சட்டங்களையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

அறமற்ற இந்து அறநிலையதுறையையும் தஜ்ஜல் போர்டாக மாறிவரும் வக்கப் போர்டையும் கலைத்துவிட வேண்டும். அதன் இரண்டு சட்டங்களையும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும். அதன் சொத்துகளை வருவாய் கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.கோவிலுக்கு ஒரு தாசில்தார் பொறுப்பாக்க லேண்டும். கோயிலை சுற்றி கற்பூரம் விற்கிறவர்கள் ,பூவிக்கிறவர்கள், தேங்காய் பழம் விற்கிற சிறு கடைகளை காலி செய்ய அச்சுறுத்தும் நவீன வழிபறி கொள்ளையர்கள் பணம் பறித்து கொண்டு இருக்கிறார்கள். வாடகை கட்டி குடியிருப்பவர்களை வாடகை கட்டவில்லை என்றால் அதற்காக நோட்டீஸ் கொடுத்து அழைத்து பேசாமல் ஆக்கிரமிப்பு என்று நோட்டீஸ் கொடுத்து கிரிமினல் குற்றம் போல் விசாரிப்பதும் குண்டாஸ் போடுவோம் என்று மிரட்டி கொண்டு இருக்கிறார்கள். நேரடியாக வீடு தோறும் வந்து விவரம் தெரியாத சம்சாரிகளை சட்டம் சட்டம் சட்டம் என்று பயமுறுத்துகிறார்கள்.எங்கு போனாலும் எங்களிடம்தான் வரவேண்டும் என்று நாங்க தான் இதற்கு கோர்ட்டு இதற்கு நீதிபதி என்று மிரட்டி சட்டம் படிக்காத மக்களிடம் கையெழுத்து வாங்குகிறார்கள். அறநிலைய துறை செய்கின்ற எல்லா வேலைகளையும் இந்த ஆட்சி வந்தவுடன் வக்கப்பும் செய்கிறது. நேற்று கோவில் மனையில் குடியிருக்கும் அடிதட்டு மற்றும் நடுத்தர மக்கள் ரோட்டிற்கு வந்து அரைநிர்வாண போராட்டம் நடத்தி இருக்கின்றனர் .மக்களா?சட்டமா? என்றால் மக்கள்தான் பிரதானம்,சட்டங்கள் திருத்தப்படவேண்டும் அல்லது செல்லாது ஆக்க வேண்டும். அரசின் காதுகளுக்கும் போய் சேர்ந்து இருக்கும். ஓட்டு போடாதவர்களும் இந்த ஆட்சியை நல்லாட்சி என்று சொல்லுவார்கள் என்று முதலமைச்சர் சொல்லி இருக்கிறார்.

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

 எழுத்தாளர்-தொழில்முனைவர்

9841665836

 

#paranjothipandian #realestate #realestateagent #training #consultancy #consultancyservices #booksale #tamilbooks #newland #administration #newsettlement #nilgiri #இனாம்கிராமம் #panjamiland # அறநிலையதுறைநிலம் # தஜ்ஜல் #வக்கப் #corporationofrevenu

 


Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்