கல்ராயன் மலையில் ஒரு பயணம்!

 கல்ராயன் மலையில் ஒரு பயணம்!


கல்ராயன் மலை, கல்வராயன்மலை என்று சேலம், கள்ளகுறிச்சி மாவட்டங்களில் 1000 சதுர கிலோமீட்டருக்கு மேல் பரந்து விரிந்து நிற்கிறது. கடல் மட்டத்திலிருந்து 1000 அடியில் இருந்து 3000 அடிவரை உயரத்தில் மலைகள் பள்ளமும், மேடும், சரிவும், சமதளமாக எங்கு பார்த்தாலும்  பச்சையாக மரமும், செடியும், புதரும், பயிரும் என்று இயற்கை செழிப்புடன் நிற்கிறது.


நீரோடை, கோமுகிஆறு, நீர் வழிகள், வளைந்து நெளிந்து போகும் தார்சாலைகள், பச்சை பேப்பரில் பழுப்பு வண்ணத்தில் அங்காங்கே கோடு கிழித்தது போல. மலை நடைபாதைகள் என்று இயற்கையின் கொடை கொட்டி கிடக்கின்ற மலை. ஆனால் ஊட்டி போல் ஏற்காடு போல் பொதுமக்களிடம் சந்தைபடுத்தபடாத மலை.


இந்த மொத்த நிலபரப்பும் இனாம் எஸ்டேட்டாக நவாப் நியமித்த ஜாகிர்களிடம் இருந்தது. அவர்கள் இந்த பகுதியை 500 ஆண்டு காலமாக ஆளுகை செலுத்தி வந்தார்கள். இங்கு வசிக்கின்ற மக்கள் மலையாளிகள் என்ற செட்யூல்டு டிரைப் மக்கள். ஆனால் அவர்கள் கவுண்டர் பட்டம் போட்டு அழைத்து கொள்கிறார்கள்.


எஸ்டேட் ஒழிப்பு சட்டத்தின் கீழ் இந்த பகுதிகள் முதன்முதலில் சர்வே செய்யப்பட்டது. இங்கு UDR (யுடிஆர்) இல்லை, OSLR (ஒஎஸ்எல்ஆர்) இல்லை, RSLR (ஆர்எஸ்எல்ஆர்) இல்லை ஏனென்றால் இவை எல்லாம் நடைபெறவில்லை.





இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Kalrayan #Hills #Kalrayanhills #salem #Kallakurichi #Hollow #hilly #sloping #flat #Nature #green_trees #plants #bushes #crops #beautiful #beauty #naturelover #nature #naturephotography #naturelover #udr #oslr #rslr

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

உயில் சொத்தா? கவனிக்க வேண்டிய 35 செய்திகள் ….