விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? -பாகம்-2

விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? -பாகம்-2 

அதன்பிறகு சாமானியன் கிரய பத்திரம் தயாரித்து அதனுடன் உட்பிரிவு அறிக்கை சாகுபடி அடங்கல் வைத்து ஒரு கடிதம் சார்பதிவாளருக்கு அய்யா என்னுடைய நிலம் சந்தை மதிப்பு வழிகாட்டி மனை மதிப்பாக இருக்கிறது. ஆனால் உண்மையில் எனது நிலம் விளை நிலம் ஆகும். அதற்கான உட்பிரிவு அறிக்கையும், சாகுபடி அடங்கலும் வைத்துள்ளேன். மேலும் மாநில பதிவுத்துறை தலைவர் ந.க.எண் 20458/எல்1/2013 நாள் 27-04-2013 என்ற சுற்றறிக்கையும் இதுபோன்ற நேர்வுகளில் அதாவது விளை நிலத்தை மனை மதிப்பாக முரண்பாடாக போட்டுவிட்டார்கள் என்றால் எப்படி நடந்துகொள்ள வேண்டும். என்று சொல்லி இருக்கிறார்கள், அதனையும் இணைத்து சார்பதிவாளர் அவர்களிடம் சமர்பிக்க வேண்டும்.

                 இதனை எல்லாம் கொடுத்தவுடன் சார்பதிவாளர் கண்டிப்பாக பதிந்துவிடுவார், அதன்பிறகு பதிவுசெய்யப்பட்ட சாமானியனின் விளை நிலத்தை நேரடியாக வந்து ஆய்வு செய்வார்கள். அதன்பிறகுதான் பத்திரம் திரும்ப அளிக்கப்படும். சில சார்பதிவாளர்கள் கண்டிப்பாக நான் மனை மதிப்பில்தான் பதிவேன் விளை நிலமாக பதிய மாட்டேன் என்று உங்களிடம் சொல்லலாம்! அல்லது நான் பதிந்து முத்திரை சட்டம் 47 (A)1 கீழ் மதிப்பு நிர்ணயம் செய்ய பரிந்துரை செய்வேன்! அதன்பிறகு பத்திரம் தனி துணை ஆட்சியர் (முத்திரை) அவர்களிடம் சென்று பத்திரம் திரும்ப பெற வேண்டும். அதற்கு கால தாமதம் ஆகும் என்று பூச்சாண்டி காட்டுவார்கள். அப்படி எது இருந்தாலும், மேற்படி மனுவை பதிவுத்துறை துணை தலைவர் சந்தித்து முறையிட வேண்டும்.

                சார்பதிவாளர் பதிவுத்துறை துணைத்தலைவரை பார்க்க பரிந்துரைக்க மாட்டார். மாவட்ட பதிவாளரை பார்க்கத்தான் சொல்வார்கள், நீங்களும் மாவட்ட பதிவாளரை பார்த்தால் சார்பதிவாளர் என்ன கதை சொன்னாரோ அதையே சொல்லுவார்கள். உடனே நீங்களும் மாவட்ட பதிவாளரே சொல்லிவிட்டார் என்று சொல்லு மனசோர்வுற்று மனைநிலமாகவே அதிக கட்டணம் கட்டி பதிய வேண்டும் என்று முடிவு  எடுத்து விடுவீர்கள்.

               சந்தை மதிப்பு வழிகாட்டி பொறுத்தவரை சார்பதிவாளாருக்கோ, மாவட்ட பதிவாளருக்கோ எந்தவிதமான அதிகாரமும் இல்லை! முழு முதல் அதிகாரமும் பதிவுத்துறை துணை தலைவரிடம்தான் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

              “எறும்பூர கல்லும் தேயுமாம்” அதுபோல விடா முயற்சியுடன் சாமானியன் காய் நகர்த்தினால், சந்தை மதிப்பு வழிகாட்டி முரண்பாடுக்காக உங்கள் சேமிப்பு பணத்தை இழக்க வேண்டாம். மேலும் இந்த புத்தகத்தின் இறுதியில் இந்த சுற்றறிக்கையை இணைத்துள்ளேன்! பயன்படுத்திக்கொள்ளுங்கள்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#guidelinevalue #marketvalue #land #plot #plotvalue #landvalue #price #determined #mvg #draft #agriculturalland #stampduty #revenuedepartment #map

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…