விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? பாகம்-1
விலை நிலத்தை மனை மதிப்பில் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயித்து இருந்தால் அதனை எப்படி சரி செய்வது? பாகம்-1
இதுவரை நாம் பார்த்தது சந்தை மதிப்பு வழிகாட்டியை (MVG) யை சீராய்வு செய்து (Revision) வரைவு (Draft) தயாரித்து குறிப்பிட்ட ஆண்டுகள் இடைவெளியில் அமுல்படுத்துவதை பார்த்தோம்!இனி இந்த MVG யில் எப்படி எல்லாம் சாமானியன் அல்லல் படுகிறான் அதிலிருந்து மனு போராட்டம் செய்து எப்படி மீளுவது என்பதை பற்றி கீழ்காணும் கட்டுரைகளில் காண்போம். சாமானியனின் நிலம் உண்மையில் விளைநிலமாக இருக்கிறது ஆனால் பக்கத்து புலம் மனையாக இருக்கிறது. இந்த நிலையில் சாமானியனின் நிலமும் மனை மதிப்பில் “சந்தை மதிப்பு வழிகாட்டி” நிர்ணயித்துவிட்டார்கள். இப்பொழுது விளைநிலத்தை சாமானியன்“பாரதீனம்” செய்ய போகும் பொழுது மதிப்பில் “சந்தை மதிப்பு வழிகாட்டி”ன்படி முத்திரை கட்டணம் அதிக அளவில் கட்ட வேண்டி இருக்கும். இதுபோன்ற நேரத்தில் சாமானியன் தன்னுடைய நிலத்தை மனைப்பிரிவோடு ஒட்டி இருந்தாலும், பூமியின் வரப்பு பிரித்து தனியாக இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும். அதேபோல் வருவாய்த்துறை புலப்படத்திலும் சாமானியனின் விளை நிலத்தையும் பக்கத்தில் இருக்கும் மனைப்பிரிவின் நிலத்தையும் வருவாய்துறையில் உட்பிரிவு செய்து உட்பிரிவு அறிக்கை (Sub division statement) யை பெற்றுக்கொள்ளவேண்டும். சாமானியன் ஏற்கனவே உட்பிரிவு செய்துவிட்டார் என்றால் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் வருவாய் துறை வட்டாட்சியர் அலுவலகத்தில் JK/8A/ பதிவேடு தகவலாக கேட்டால் அதில் சாமானியனின் விளை நிலத்திற்க்கான உட்பிரிவு அறிக்கை கிடைக்கும். மேலும் விளைநிலத்திற்காக கிராம நிர்வாக அலுவலரின் சாகுபடி அடங்கல் பதிவேட்டில் உள்ள தகவலையும் பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் பயிர்“நெல்” தர்பூசணி,எள்,கடலை அல்லது தரிசு என்று எழுதி வைத்து இருப்பார்கள்.அதனையும் மறக்காமல் வாங்கிக்கொள்ள வேண்டும்.
தொடரும்........
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதி பாண்டியன்
எழுத்தாளர், தொழில்முனைவர்
9841665836
www.paranjothipandian.com
#guidelinevalue #marketvalue #land #plot #plotvalue #landvalue #price #determined #mvg #draft #agriculturalland #stampduty #revenuedepartment #map
Comments
Post a Comment