DTCP அங்கீகாரத்திற்க்குள் வராதவீட்டுமனைகளுக்கு புதிய கொள்கைமுடிவு வருமா?

DTCP அங்கீகாரத்திற்க்குள் வராதவீட்டுமனைகளுக்கு புதிய கொள்கைமுடிவு வருமா?

1971 ம் ஆண்டு முதல் DTCP அங்கீகார அமைப்புதமிழகத்தில் அமைக்கப்பட்டதுஅதற்கு முன்பேபல வீட்டுமனைப்பிரிவுகள் தமிழகத்தில்உருவாகி இருந்ததுஅவற்றை அங்கீகார DTCP வரைமுறைக்குள் கொண்டுவர முடியாததால்அதனை அப்படியே ஏற்றுக்கொண்டன.சென்னையை சுற்றி இப்படி அலமேலுமங்காபுரம்கணபதி சிண்டிகேட் என்று பலமனைப்பிரிவுகள் 1960-களிலேயே உருவாகிஇருந்தனஅவற்றில் தற்பொழுதுகுடியிருப்புகளாக மாறி இருக்கிறதுஇவைஇல்லாமல் பழைய ஊர்களில் ஊர்களுக்குஅருகிலேயே எதிர்கால வீட்டுமனைதேவைகளுக்காக கிராம நத்தம் என்றுவகைப்படுத்தி நிலங்கள் ஒதுக்கப்பட்டுஇருந்தன அவற்றிற்கெல்லாம் இன்றுவரைகிராம நத்த தூய நிலவரி திட்டத்தின்அடிப்படையில் வருவாய் துறையில் பட்டாமுழுமையாக வழங்கபடாமல் இன்றுவரைஇருக்கின்றது.

கிராம நத்த நிலங்கள் கிராம மக்களின்பெருக்கத்திற்க்கு ஏற்றவாறு இன்று தமிழகம்முழுவதும் குடியிருப்புகளாக மாறிவிட்டன.அவை இன்று பலர் கைமாறி அதாவதுவிற்பனைகிரையம்தானம் செய்யப்பட்டுபத்திரங்கள் வைத்திருக்கின்றனர்இந்தகிராம நத்த இடங்களில் தூய நிலவரி திட்டபட்டாக்கள் இன்னும் பெரும்பான்மையாகமேனுவலாகவே இருக்கிறதுஇன்னும் சிலஇடங்களில் பட்டா என்ற ஆவணமே இல்லாமல்இருக்கின்றதுபழைய ஊர்கள்தாய்கிராமங்கள் ஆகியவற்றில் இருக்கும்குடியிருப்புகளுக்கு பட்டா இருக்கும், DTCP அங்கீகாரம் என்பதே இருக்காதுஅப்படிஏராளமான மனைகள் தமிழகத்தில்இருக்கின்றது.

தமிழகம் முழுவதிலும் பலவீட்டுமனைகளுக்கான இடங்களில் அரசுAssignment பட்டா (நில ஒப்படைஏழை எளியமக்களுக்கு வழங்கி இருக்கிறதுமத்தியஅரசின் இந்திரா வீட்டுவசதி திட்டம்தமிழகஅரசின் பசுமை வீட்டு திட்டம்போன்றவற்றிற்கெல்லாம் 2 செண்ட் 3.5செண்ட் வரை பட்டா மனை இருந்தால் மட்டுமேபோதும் என்றே அரசு உதவி செய்து பலகுடியிருப்புகளை உருவாக்கி இருக்கிறது.மேற்கண்ட இடங்களுக்கெல்லாம் அடிமனைDTCP –ல் மனைப்பிரிவு விதிமுறைக்குள்பொருந்தாமலேயே இருக்கின்றதுஆனால்மேற்கண்ட இடங்கள் பொதுமக்களின்கணிசமான வீட்டுமனை தேவையை நிறைவுசெய்து வருகிறதுமேலும் இந்தமனைப்பிரிவுகளுக்கெல்லாம் .டி.பி.ஐமற்றும் எல்..சி போன்ற தேசியமயமாக்கப்பட்ட நிறுவனங்கள் ரூரல் Housing –காக வீட்டுமனை கட்ட கடன்கொடுத்திருக்கிறதுமேலும் தொடக்கவேளாண்மை கூட்டுறவு வங்கிகள் கிராமவங்கிகள் மேற்கண்ட இட்த்திற்கெல்லாம் கடன்உதவி செய்து கொண்டிருக்கின்றன. DTCP அங்கீகாரத்திற்கு மட்டும் தான் கடன்கிடைக்கும் என்று ஒரு வதந்தி ரியல்எஸ்டேட்டில் இன்னும் நிலவி வருகிறதுஇனிDTCP இல்லாத அடிமனைகளுக்கு கடன்கள்கொடுக்க கூடாது என்று பாலிசி கொண்டுவரப்படுமா அல்லது தொடர்ந்துவழங்கப்படுமாயின் பேற்படி அங்கீகாரம்இல்லாத குடியிருப்புகள் வளர்ந்து கொண்டேதானே இருக்கும்


இப்படி மேலே சொன்ன இடங்களுக்கெல்லாம்தற்போதைய பத்திரப்பதிவு செய்யக்கூடாதுஎன்ற நீதிமன்ற தடை உத்தரவால் சொத்துபரிமாற்றங்கள் தற்போது தம்பித்துநிற்கின்றனஇனி DTCP மனைதான்பத்திரப்பதிவு செய்யவேண்டும் என்றால்மேற்கண்ட DTCP இல்லாத அடிமனைகுடியிருப்புகளுக்கெல்லாம் என்ன செய்யவேண்டும் என்ற கொள்கை முடிவினை யார்எடுப்பது ? எப்போது எடுப்பது ?..

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்