ரயத்துவாரி நிலவரிதிட்ட செய்த வேளாளர்களின் நாயகன் சர் தாமஸ் மன்றோ!!

ரயத்துவாரி நிலவரிதிட்ட செய்த வேளாளர்களின் நாயகன் சர் தாமஸ் மன்றோ!!



யாருப்பா இது சிலையாக கம்பீரமா குதிரை மேல் அமர்ந்து இருக்கிறார் என்று நினைத்துவிட்டு அடியில் இருக்கும் கல்வெட்டை படித்துவிட்டு சர் தாமஸ் மன்றோ என்ற பெயரை மட்டும் படித்து விட்டு நகரும் நண்பர்களுக்கு இந்த பதிவு!!

1800 களில் தற்போதைய சேலம் மாவட்டம் அப்போதைய பாராமஹால் ஜில்லா அதற்கு கலெக்டர் அதற்கு பிறகு பாராமஹாலுக்கு வடக்கே கன்னட ஜில்லாவுக்கு கலெக்டர் அதன்பிறகு ஹைதராபாத் நிஜாம் பாயிடம் இருந்து ஒப்படைக்கபட்ட கர்நூல் கடப்பா பெல்லாரி பகுதிகளை ஒப்புவிக்கபட்ட ஜில்லாக்களின் கலெக்டர் அதன்பிறகு மும்பை மாகாணத்தில் மராத்திய ஜில்லா கலெக்டர் இறுதியா மெட்ராஸ் ராஜஸ்தானியின் கவர்னர் என்று பிரிட்டிஷ் இந்தியாவை நிர்வாகம் செய்தவர். இந்த பெருமகன் தான் இந்தியாவிலேயே முதன் முதலில் ரயத்துவாரி சர்வே செய்து ஜமீன் பாளையகாரர்,ஜாகிர்தாரர்களின் எதிர்ப்புகள் கலவரங்கள் இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்படி நபர்களின் கட்டுபாட்டில் இருந்த பல கிராமங்களை குடியானவர்களுக்கு நிரந்தரமாக ஒப்படைத்தார்.

முதன்முதலில் இரயத்துவாரி பாராமஹால் மாவட்டத்திலும் அதன்பின அவர் எங்கெங்கெல்லாம் கலெக்டராக இருந்தாரோ அங்கெல்லாம் சர்வே செய்து ரயத்துகளுக்கு நிலங்களை நிரந்தரமாக செட்டில்மெண்டு மூலம் ஒப்படைத்தார். அப்பொழுது எல்லா பகுதிகளிலும் கிராமங்களிலும் நல்ல சாலை இல்லாததால் காரில் செல்ல முடியாது .இரயிலும் தண்டவாளமும் இல்லை.அதனால் குதிரை மீதேறியே கிராமங்கள் தோறும் சென்று விவசாய நிலங்களை செட்டில்மெண்டு செய்தார் .இவ்வாறு இவர் உழைத்ததால் பிரிட்டிஷாருக்கு வருமானமும் பாளையம் ஜமீனின் நில உரிமைகள் மக்களுக்கு பங்கிட படுவதால் அதிகார குவியல் தடுத்தலும் நடந்ததால் அமைதியான அரசியல் சூழல் நாட்டில் நடந்தது.இதனால் இவரை மாவட்டம் தோறும் மாற்றுனார்கள்

இவரும் கலெக்டராக சென்ற மாவட்டங்கள் முழுதும் பிறகு மெட்ராஸ் பிரசிடென்சி முழுதும் ரயத்துவாரி செட்டில் மெண்டு மொத்தமே ஆயிரம் ஜமீன் ஜாகிர் கட்டுபாட்டில் இருந்த கிராமங்களை இன்றைய உயர் சமூகங்களாக கருதபப்டும் மக்களுக்கு செட்டில்மெண்டு செய்தார்(அப்பொழுதெல்லாம் உயர் சமூகத்தினர் தான் குடியானவர்கள்)மீதி சமூகத்தினர் படியாள் பண்ணையாள் கொத்து அடிமை அடிமை என்ற working labour

1802 க்கு முன்பு வரை தமிழ்நாட்டில் யாருக்குமே நிலத்தின் மீது உரிமை கிடையாது.வெறும் குறுகிய கால குத்தகை உரிமை வைத்து விவசாயம் செய்யவேண்டும்.ஜமீன் பாளையம் ஜாகிர் கெடுபிடிகள் வரிவிதிப்புகள் அதிகமாக இருக்கும்.

இந்த தாமஸ் மன்றோவால் நிலங்கள் நிரந்தரமாக குடியானவர்களுக்கே செட்டில்மெண்டு ஆவதால் விவசாயிகள்மிகவும் சந்தோஷமாக விவசாயம் பார்த்தனர் நாட்டில் கலவரங்களும் குறைந்தன ஊரும் அமைதியாய் ஆயின இதனால் மக்களிடம் மிகவும் போற்றபடும் கவர்னர் ஆனார் சர் தாமஸ் மன்றோ மிகவும் போற்றபடும் கவர்னர் ஆனார் மக்களிடம். இந்த தாமஸ் மன்றோவால் தான் நிறைய வேளாளர்கள் நிரந்தர செட்டில்மெண்டு மூலம் நிலகிழார்கள் ஆனார்கள்.ஆற்காட்டு முதலியார்,ஆற்காட்டு வேளாளர்,அகமுடை முதலியார்,அகமுடை உடையார்,அகமுடை ரெட்டி போன்ற துளுவ வேளாளர்களும் கொண்டை கட்டி முதலியார் தொண்டைமண்டல முதலியார் என்ற தொண்டைநாட்டு வேளாளர்களும் பெரிய வேளாளர் சின்ன வேளாளர் என்ற இலங்கைநாட்டு வேளாளர்களுக்கும் திருநெல்வேலி கோட்டை பிள்ளைமார்களுக்கும் கொங்கு பகுதியில் இருக்கும் கொங்கு வெள்ளாள கவுண்டர்களுக்கும் ஒக்கலிகா கவுண்டர்களுக்கும் தஞ்சை பகுதியில் இருக்கும் சோழிய வெள்ளாளர்களுக்கும் தமிழகம் முழுதும் பரவலாக இருக்கும் கார்காத்தா வேளாளர்களுக்கும் திருச்சி நாமக்கல் பக்கம் இருக்கும் நாட்டு வேளாளர் என்ற ஆறுநாட்டு வேளாளர்களுக்கும் நிரந்தரமாக நிலங்கள் இறங்கியது இந்த தாமஸ் மன்றோவால்

இப்படி தமிழகம் முழுதும் குதிரையேறி இரயத்துவாரி பெர்மனன்ட் செட்டில் மெண்ட் வேளாளர்களுக்கு செய்து செய்தே தன் திருமணத்தையே மறந்து 52 வயதில் ஜேன் கேம்பல் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.திருநெல்வேலி டூ கடப்பா வரை கிராமந்தோறும் கவர்னாராக இருக்கும்போதே பயணித்து கடப்பாவில் களத்திலேயே நோய்வாய்பட்டு இறந்து போனார் .இந்த குதிரைவீர கவர்னர் இந்த மன்றோ சென்னையில் ஜார்ஜ்கோட்டையில் தான் புதைக்கபட்டு இருக்கிறார்

இந்திய நில நிர்வாக வரலாற்றில் சர் தாமஸ் மன்றோவின் உழைப்பு பெரும்தியாகம் மிக்கது கடும் உழைப்பாளி இன்று பெரும் தனவந்தராக தொழில் அதிபர்களாக இருக்கும் அனைத்து வெள்ளாளர்களின் மூதாதையர்களுக்கும் குதிரையிலேயே சென்று நிலங்களை நிரந்நரமாக செட்டில்மெண்டு பட்டா கொடுத்த பெருமகன் மன்றோ உண்மையில் வேளாளர்களின் நாயகன் மன்றோ! ஆனால் வேளாளர்களும் தனக்கு நிலம் வந்த வரலாறு தெரியாத மல் மன்றோ சிலையை கடந்த வண்ணம் இருக்கிறார்கள்!

குறிப்பு:படம் இரவில் எடுக்கபட்டதால் சிலை தெளிவாக தெரியவில்லை

இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்/தொழில் முனைவர்

www.paranjothipandian.in

9841665836,9841665837,9962265834

#மன்றோ #வெள்ளாளர் #வேளாளர் #முதலியார் #செட்டில்மெண்ட் #நிலம் #பட்டா #சர்_தாமஸ்

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்