ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 2

 ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 2


அதே போல் கீழ்வாரம் உரிமையை விற்கும் உரிமையும் ராயத்துகளுக்கு இந்த சட்டம் மூலமே கிடைத்தது இருந்தாலும் ஜமீன்கள் நம் தம் எஸ்டேட்டுகளின் ராஜாக்களாகவே ஜமீன்தார்கள் திகழ்ந்தனர் தங்களது நிலபிரபுவத்துவ சுரண்டலைத் தங்கு தடையின்றி நடத்த அவர்களுக்கு அதிகாரமும் செல்வாக்கும் இருந்தன. இந்த நிலையில் ரயத்துக்கள் மத்தியில் நஷ்டஈடின்றி ஜமீன் எஸ்டேட் ஒழிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தது 1930 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியும் 1936ம் ஆண்டு தோன்றிய அகில இந்திய கிசான் சபையும் காலம் காலமாக மரபு வழியாக இருக்கும் ஜமீன் உரிமையை ஒழிக்க கோஷம் போட்டது. 

1937–ம் ஆண்டு சென்னை மரகானத்தில் ஜமீன் முறையை ஒழிக்க பிரகாசம் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது அந்த குழுவாரியாக விசாரணை நடத்தி ஒரு அறிக்கை தயாரித்து அரசாங்கத்திடம் சமர்பித்தது 1942 ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு 1908 ம் ஆண்டின் எஸ்டேட் சட்டபடி எவையெல்லாம் எஸ்டேட்டுகள் என நிர்ணயிக்கப்பட்டதோ அவையெல்லாம், 1948 எஸ்டேட் ஒழிப்பு (ரயத்துவாரி முறைக்கு மாற்றம்) சட்டம் கொண்டு வரப்பட்டு ஜமீன் முறை ஒழிக்கப்பட்டது

அப்படி ஒழிக்கப்பட்ட பொழுது எஸ்டேட் கிராமங்களை அரசு எடுத்து கொண்டு அரசாங்கம் ஏற்றுக்கொண்ட பகுதிகளில் ரயத்துவாரி முறையை அமுலாக்க சட்டம் சொல்லியது எஸ்டேட் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட வேண்டும் அந்த நஷ்ட ஈடானது வருமானத்தை போல 121/2 மடங்கிலிருந்து 30 மடங்கு வரை இருக்கலாம் ஆனால் அதிகபட்சம் நஷ்டஈடு 15 லட்சம் என்று அந்த சட்டம் நிர்ணயித்தது. இப்படி எஸ்டேட் ஒலிக்கப்படும் நேரத்தில் எஸ்டேட்காரர்கள் தனக்கு இருவாரமும் உள்ள நிலம் என்று நிறைய நிலங்களை எடுத்துக்கொள்ள வேலை செய்தார்கள் அதே போல் கீழ்வார உரிமையில் இருந்த ராயத்துகளும் அப்பொழுது பட்டா பெற்றுக் கொள்ள விரும்பினார்கள் இதற்காகத்தான் செட்டில்மெண்ட் அலுவலர்களும் சர்வேயர்களும் நியமிக்கப்பட்டு எஸ்டேட் கிராமங்களை அரசுக்கு கீழே கொண்டு வந்து சர்வே நடத்தப்பட்டு செட்டில்மெண்டும் செய்யப்பட்டது.

தொடரும்.......






இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…