சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 3

சாமானியனின் நிலம் அரசின் பிற துறைகளால் நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது “சந்தை மதிப்பு வழிகாட்டியை” கண்கொத்தியாக கவனிக்கவேண்டியது சாமானியனின் கடமை! - பாகம் - 3


அதுதானே நியாயம், ஆனால் பதிவுத்துறை அப்படி செய்வது இல்லை.

          அச்சடிக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு உள்ள சார் பதிவேட்டில் உள்ள மதிப்பைதான் குறித்து கொடுக்கும், அப்படி தான் குறித்து கொடுக்க வேண்டும் என்று பதிவுத்துறை தலைவர் சார்பதிவாளருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். (சுற்றறிக்கை எண் 45351/L1/ 2012- நாள் - 24-01-2013) இதன்படி உள்ளாட்சி அமைப்புகள் இயக்குநர் – நகர்புற திட்டமிடல், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற அலுவலகங்களில் இருந்து வழிகாட்டி மதிப்பு விவரம் கேட்கப்படும் நிகழ்வுகளில் மாவட்ட வழிகாட்டி மதிப்பீட்டு குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டி மதிப்புகளை வழங்கினால் போதுமானது எனவும் ஆவண பதிவுகளில் ஏற்பட்டுள்ள உயர் மதிப்புகளை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை எனவும் அறிவுறுத்தப்படுகிறது என்று சொல்லி இருக்கிறார்.

           இதிலிருந்து என்ன தெரிகிறது, சாமானியன் பத்திர பதிவு செய்ய போனால் ஆவண பதிவுகளின் மூலம் ஏற்பட்டு இருக்கும் உயர் மதிப்புகளை பார்த்து முத்திரை கட்ட வேண்டும். அதுவே சாமானியன் நிலத்தை இழந்து நஷ்ட ஈடு பெறும்பொழுது நஷ்ட ஈட்டு தொகை நிர்ணயிக்க அரசின் பிற துறை வழிகாட்டி மதிப்பு என்னவென்று கேட்கும் நேர்வுகளில் ஆவண பதிவுகளின் மூலம் ஏற்பட்டுள்ள உயர் மதிப்பை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை! வழிகாட்டி மதிப்பீட்டு குழு ஒப்புதல் அளிக்கப்பட்ட அச்சடிக்கப்பட்ட மதிப்பையே குறிப்பிட வேண்டும் என்று சொல்வதன் மூலம் பதுவுத்துறை சாமானியன் சேமிப்பு பணத்தை அதிகமாக எடுத்துக்கொள்கிறது, அரசு சாமானியனுக்கு கொடுக்க வேண்டும் என்ற நேர்வு வரும் பொழுது குறைவாக கொடுக்க முற்படுகிறது அதற்கு ஏற்றாற்போல் பதிவுத்துறை வழிகாட்டி மதிப்பு மாறிக்கொள்கிறது என்று சாமானியர்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

          எனவே உங்கள் பகுதியில் அரசு நில ஆர்ஜிதம் செய்ய போவதாக அறிக்கை வெளியிட்டு L.A. தாசில்தார் (நில எடுப்பு தாசில்தார்) நிர்ணயிக்க போகிறார்கள் என்றால் உங்கள் பகுதியின் MVG மதிப்பை முதலில் RTI யில் கேட்டு எடுத்து வைத்துகொள்ள வேண்டும். மேலும் பென்சிலில் உயர் மதிப்பு இருந்தால் அதனையும் எடுத்து வைத்துகொள்ள வேண்டும்.

         பென்சிலில் மதிப்பு குறிக்கப்பட்டு அந்த மதிப்பிற்கு பத்திரம் பதிந்து இருந்தால் அதனை இசி போட்டு பார்த்தால்....


தொடரும்.....




இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

9841665836

www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…