முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 18-வது பாகம்)
அடித்தட்டு நடுத்தரமக்கள் சொத்துக்களை வைத்து ஐஸ்வர்யமாக வாழவேண்டும் என்று நினைக்கிற இளைஞர்கள், இளைஞிகள் அனைவரும் இந்த வழிகாட்டி மதிப்பு வரைவினை சரிபார்க்கும் வேலையை செய்ய வேண்டும். இல்லையென்றால் இதில் முரண்பாடுகள் இருந்தாலும் இது சட்டப்படியான மதிப்பாக மாறிவிடும் இதனால் கிராமத்திற்கு 10 சாமானியர்கள் கண்டிப்பாக பாதிக்கப்படுவார்கள்! அந்த முரண்பாடான MVG யை மாற்ற முடியாமல் சுணங்கி போவார்கள். அன்று தங்களுடைய கையிருப்பு பணத்தை எல்லாம் இழந்து அதிக முத்திரைக் கட்டணம் பதிவு கட்டண சுமையால் பாதிக்கப்படுவார்கள். அதனால் இப்பொழுதே உங்கள் நேரத்தை செலவழித்து ஒருகள ஆய்வு செய்து விட்டால் உங்களுடைய உழைப்பு யாரோ ஒரு சாமானியனுக்கு பயன்பட்டுப் போகும். எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்.
சந்தை மதிப்பு வழிகாட்டி என்பது நிலம் வைத்திருப்பவர்களுக்கோ ரியல் எஸ்டேட் வணிகர்களுக்கோ சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல அது ஒவ்வொரு சாமானியனின் வாழ்க்கைக்கும் சம்மந்தப்பட்டதாகும் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு முரன்பாடுகளுடன் வழிகாட்டி மதிப்பினை பதிவுத்துறை நிர்ணயித்தும், நடைமுறைப்படுத்தியும் வந்திருக்கிறது. எனவே நல்லாட்சி கொடுக்கின்ற அரசு சந்தை மதிப்பு வழிகாட்டியால் முரண்பாடுகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு சாமானியர்களும் உறுதுணையாக இருக்கும் செயல்பாடு வேண்டும். இதனை எல்லாம் செய்தால் தான் முரண்பாடுகள் இல்லாத வழிகாட்டி மதிப்பு சாமானியர்கள் இலட்சியம் என்ற கனவு நிறைவேறும்.
அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு!
விசாலப்பர்வையால் விழுங்கு மக்களை!
பாவேந்தர் பாரதிதாசன்
நாளை தொடரும்....
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com
Comments
Post a Comment