முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 26-வது பாகம்)
ஆனால் உயர்நீதி மன்றம் சென்ற பலர் இந்த 33% சதவீத உயர்வை ரத்து செய்ய வேண்டும் இது 47AA, 13 சட்ட பிரிவுகள் கீழ் உள்ள 7 விதி முறைகள் படி நடக்கவில்லை என்று வாதிட்டு 33% சதவீத உயர்வினை ரத்து செய்தது. (W.P.NO: 12649 OF 2023) அதனை எதிர்த்து பதிவுதுறை மேல்முறையீடு செய்து அங்கும் உயர்நீதிமன்றம் பதிவு துறைக்கு எதிராக தீர்ப்பு கொடுத்து, 2017 ஆம் ஆண்டு 33% குறைந்த MVG யை தான் நடைமுறைபடுத்த வேண்டும் அப்படி உயர்த்த வேண்டும் என்று நினைத்தால் 47AA, 3 சட்ட பிரிவுகள் 7 விதி முறைகள் படி புதியதாக MVG யை நிர்ணயித்து நடைமுறைபடுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டது அதன் பிறகு தான் பதிவு துறை மீண்டும் 47AA, சட்டத்தின் படியும் அதன் விதி முறைகள் படியும் சந்தை மதிப்பு வழிகாட்டியை நிர்ணயிக்க 26.04.2024 ல் பதிவு துறை தலைவர் மதிப்பீட்டு குழுவை உருவாக்கி, மாவட்ட குழுக்களுக்கு பரிந்துரைகள் கொடுத்துவிட்டார், அதன் படி புதிய MVG மதிப்புகள் இனி நடைமுறையில் இருக்கப் போகின்றன.
ஒவ்வொரு சாமானியனும் MVG யை கவனிக்க வேண்டியது, அவர்களுடய சமூக பொறுப்பு. மேற்படி பதிவு துறையின் மாவட்ட மதிப்பு குழு தயாரிக்கின்ற மதிப்பீட்டு வரைவை இணையதளத்திலும் அல்லது நேரடியாகவும் பெற்று பரிசீலிப்பது ஒவ்வொருவரின் கடமை. அதுமட்டுமில்லாமல் MVG யில் உள்ள 7 விதிகளில் 4-வது விதி பொதுமக்களுக்கு MVG யை 15 நாட்களுக்கு பார்வையில் வைக்க வேண்டும் ஒவ்வொரு சாமானியனும் SUGGESION AND OBJECTION கொடுக்க வேண்டும் என்று MVG விதி சொல்கிறது அதனால் சார்பதிவாளர் அலுவலகம் சென்று MVG வரைவை பெற்று அதனை
சரிபார்க்க வேண்டும்.
அண்ணா, நாங்கள் MVG வரைவை பார்க்க தவறிவிட்டோம். MVG யை பார்க்க வேண்டும் என்ற விவரமே எங்களுக்கு தெரியாது. அதனால் எங்கள் சொத்து MVG முரண்பாடாக உள்ளது. அதனால் அதிகம் பாதிக்கப்படுகிறேன் அதனை சரி செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் கவலைப்பட வேண்டம் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் அறக்கட்டளைக்கு அனைத்து விவரங்களுடன் ஆவணங்களை தபால் அனுப்பி தொடர்பு கொள்ளலாம் அவற்றை எல்லாம் உங்களுக்காக கோர்வை செய்து தர வாரியாக பிரித்து ஆண்டு தோறும் கூடும் மாநில மதிப்பீட்டுக் குழுவில் கொண்டுபோய் சேர்த்து அதற்கு தீர்வுகாண உதவி செய்கிறோம். நிலத்தின் பயன்கள் அனைத்து தரப்பு மக்கள் போய் சேர வேண்டும் என்று இலட்சியப் பயணத்தில் சா.மு. பரஞ்சோதி பாண்டியன்
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com
Comments
Post a Comment