முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்! 

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 24-வது பாகம்)

     இந்த சந்தை மதிப்பு வழிகாட்டிக்கு தான் முறையான சட்ட அந்தஸ்து இருக்கிறது இனி மதிப்பின் அடிப்படையில் பதிவுத்துறையில் பதிவு கட்டணம், முத்திரை கட்டணம், நீதி மன்றத்தில் வழக்கு கட்டணம், நில ஆர்ஜிதம் செய்யும் பொழுது, மற்றும் பல்வேறு நில நிர்வாக நடைமுறைக்கு நிலத்தின் மதிப்பு என்றால் இதனையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மதிப்பு தான் இனி சட்ட படி செல்லும் என்று வந்து விட்டது. நீதி மன்றங்கள் மூலமும், இந்த மதிப்பை நடைமுறைப்படுத்த சொல்ல முடியும் என்ற அளவுக்கு இந்த மதிப்பிற்கு சட்ட அந்தஸ்து உள்ளது.

     மேலும் இந்த சந்தை மதிப்பு வழிகாட்டியை நிர்ணயிக்கும் பொழுது அப்படி 2005 ஆம் ஆண்டு மாநில கமிட்டி, மாவட்ட கமிட்டி எல்லாம் போட்டு நிர்ணயித்தார்களோ அதே போல் இந்த 47AA சட்டபடி உள்ள MVGயை மாநில கமிட்டி மற்றும் மாவட்ட கமிட்டி போட்டு நிர்ணயிக்க வேண்டும் என்று சட்டமும், விதிகளையும் பதிவுத்துறை உருவாக்கியது.  அந்த சட்டம் இந்திய முத்திரை சட்டம் 1899 பதிவு 47A(1), 47A(2), 47A(3), என மூன்று உட்பிரிவுகள் உருவாக்கப்பட்டது ஆக மொத்தமே 3 பிரிவுகள் தான் இந்த சட்டம் இது  சம்மந்தமாக 7 விதிமுறைகளை உருவாக்கினார்கள். அந்த விதி முறைகளுக்கு TAMIL NADU STAMP CONSTRUCTION OF VALUATION COMMITTEE FOR VALUATION COMMITTEE FOR PUBLICATION & REVISON OF MARKET VALUE GUIDE LINE OF PROPERTY RULES – 2010 என்று உருவாக்கப்பட்டது.

     இப்படி உருவாக்கப்பட்ட சட்டத்தின் படி பதிவு துறை தலைவர் தலைமையில் 01.06.2010 தேதியின்று மைய மதிப்பீட்டு குழு அமைக்கப்பட்டது, மாவட்ட குழுவும் அமைக்கப்பட்டது (அரசாணை எண் 76 வணிகவரி பதிவுத்துறை (ஜே1) துறை நாள் 01.06.2010) மேற்படி குழுக்கள் 47AA, சட்டப்படியும் அதன் விதிகள் படியும், தமிழ் நாடு முழுவதும் சந்தை மதிப்பு வழிகாட்டி நிர்ணயிக்கும் பணிகள் நடந்து 01.04.2012 அன்று முதன் முதலில் சட்ட அந்தஸ்துடன் கூடிய சந்தை மதிப்பு வழிகாட்டியை நிர்ணயித்தார்கள்.

   

நாளை தொடரும்....



இப்படிக்கு, 

சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,

நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.

புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA

9841665836

www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…