முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 23-வது பாகம்)
அதனால் இந்த வழிகாட்டி மதிப்பை ஒரு “EXECUTIVE ORDER” அதாவது ஒரு நிர்வாக ஆணையாக நிர்வாக ஊழியர்கள் கீழ்படியலாம் சாதாரண பொது மக்கள் சட்ட அந்தஸ்து இல்லாத ஒன்றுக்கு கீழ்படிய அவசியம் இல்லை அதனால் பதிவு துறை நிர்ணயித்த வழிகாட்டி மதிப்பு தவறு என்று உணரும் பட்சத்தில் பொதுமக்கள் குறைவான முத்திரை தீர்வுடன் 47A யில் தாக்கல் செய்து விட்டு, நீதிமன்றம் போய் இது தான் மார்கெட் மதிப்பு என்று ஒரு மதிப்பை சொல்லி அதற்கான இசைவான ஆதாரங்களை சமர்பித்து வழிகாட்டி மதிப்பிற்கு முத்திரை சட்டப்படி செல்லாது சட்ட விரோதம் என்று சட்டத்தின் மார்க்கெட் மதிப்பு தான் இருக்கிறது வழிகாட்டி மதிப்பு என்பது இல்லை! அது நிர்வாக ரீதியான உத்தரவு என்று நீதிமன்றத்தில் வாதாடி நீதிப்பேராணை பெற்று 47A யின் கீழ் உள்ள பத்திரங்களை திரும்ப பெற்று சென்றனர்
இதனால் பதிவுதுறைக்கு நிறைய இழப்புகள் என்று நினைத்து வழிகாட்டி மதிப்பை சட்ட அந்தஸ்து கொண்டு வர வேண்டும் என்று நினைத்து ஏற்கனவே 1972 முதல் 1978 வரை சந்தை மதிப்பு என்ற வார்த்தைக்கு போராடி சட்ட அந்தஸ்து கொடுத்தது அதே போல இந்த வழிகாட்டி மதிப்பிற்கும் சட்ட அந்தஸ்து கொடுக்க வேண்டும் அதே போல் அதனை என்றும் செல்லாது என்று யாரும் சொல்ல கூடாது என்று நல்ல சட்டத்தையும் அதற்கான விதிகளையும் பதிவுத்துறை உருவாக்கியது. அந்த சட்டம் தான் முத்திரை சட்டம் 47AA இதன் படி வழிகாட்டி மதிப்பிற்கு சட்ட அந்தஸ்து கிடைத்துள்ளது.
ஆனால் கடந்த காலங்களில் மக்களின் மனதில் பதிந்த சொல்லாடல் 47AA ‘வழிகாட்டி மதிப்பு’ இந்த வழிகாட்டி மதிப்பு என்பதை 47AA யில் கொண்டு வர வில்லை அதற்கு பதிலாக சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பு என்ற சொல்லாடலை பதிவு துறை கொண்டு வந்தது இப்படிப்பட்ட சொல்லாடல் 2010 ஆம் ஆண்டு பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டன ஆனால் இன்று வரை “வழிகாட்டி மதிப்பு” என்று தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்
உண்மையில் 47A சட்ட பிரிவில் சந்தை மதிப்பு என்ற சொல்லாடல் வருகிறது அதில் பரிந்துறைக்கும், பொது ஜனங்களுக்கும் சர்ச்சைகள் வரும்பொழுது அதனை தீர்ப்பதற்கும், முடிவு எடுப்பதற்கும் “சந்தை மதிப்பு வழிகாட்டி “ என்று புதிய சொல்லாடல் அறிமுகப்படுத்தப்பட்டு அது இன்று வரை நடைமுறையில் இருக்கிறது.
நாளை தொடரும்....
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com
Comments
Post a Comment