தஞ்சாவூர் பள்ளத்தாக்கில் நில உச்சவரம்பு சட்டம் ஆரம்ப கால நிலை

  தஞ்சாவூர் பள்ளத்தாக்கில் நில உச்சவரம்பு சட்டம் ஆரம்ப கால நிலை



“கோள்நிலை திரிந்து கோடை நீடினும் தான் நிலை திரியாத் தண்டமிழ்ப் பாவை” என்று சான்றோர்களால் புகழ்ந்து பாடப்பட்ட ஆறு. “காவிரி ஆறு” அந்த ஆற்றின் புனலும் அதில் இருந்து இணைந்து செல்லும் வாய்க்கால்கள், சிறு சிறு குளங்கள் அதற்கிடையே பச்சை பசேல் நெற்பயிர்கள், பூத்து குலுங்கும் பலவகை மலர்கள், செடிகள் என்று கண்ணிற்கினிய எண்ணற்ற காட்சிகளை காணலாம்.

மேலும் தஞ்சை என்று இப்பொழுதுதான் பொதுவாக சொல்வது தற்போதைய தஞ்சை மாவட்டம், திருவாவூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை மாவட்டம், இன்னும் பிரிய போகும் கும்பகோணம் மாவட்டம் என அனைத்து ஒருங்கிணைந்த “தஞ்சை பள்ளத்தாக்கு” என்று சொல்கிறேன்.

இந்த பகுதியில்தான் அதிக அளவில் நிலங்களை கைப்பற்றிகொண்டு இருந்த மிராசுகளும், மிட்தாக்களும், சுரோத்திரியர்கள், ஜமீன்களும், நில சுவான்தார்களும் அதிகம். அந்த பகுதியில் நில சீர்திருத்தம் சட்டம் இயற்றி நிலங்கள் சாமானியர்களுக்கு நிலத்தை பகிர்கின்ற முயற்சி 1960ஆம் ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாட்டு நிலசுவான்தார்களிலேயே தஞ்சையில்தான் பொது அறக்கட்டளை பேரில் நிறைய நிலங்கள் குவிக்கப்பட்டு இருந்தன.

தமிழ்நாடு நில சீர்திருத்த (நில உடமைக்கு உச்சவரம்பு கட்டுதல்) சட்டம் – 1960, தமிழ்நாடு பொது டிரஸ்டுகள் (விவசாய நில நிர்வாக ஒழுங்குமுறை விதிகள் – 1961) சட்டத்தையும் தஞ்சையில் முதன் முதலில் அமுல்படுத்தபட்டதாகும்.

உச்ச வரம்பு என்றால் என்ன?

குறிப்பிட்ட பரப்பினருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்களிடமிருந்து உபரி நிலத்தை அரசாங்கம் பெற்று நிலமற்றவர்களுக்கு பகிர்ந்தளிப்பதும், மேற்படி சட்டம் அமுலுக்கு வந்த பிறகு யாரும் உச்சவரம்பிற்கு மேல் நிலம் சேர்க்காதபடிக்கு தடுப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்த சட்டத்தின்படி 30 தர ஏக்கருக்கு மேல் நிலம் கைப்பற்றில் வைத்து இருப்பவர்கள் தங்களிடம் உள்ள 30 தர ஏக்கர் நிலத்தை தவிர மீதி உள்ள நிலங்களை உபரியாக அறிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 1960 ஆண்டு கணக்கெடுப்பில் சுமார் 1018 தனி நபர்களிடம் 68010 ஏக்கர் உபரியாக இருப்பதாக கணக்கிடப்பட்டது. அதேபோல் ஒரு பொது அறக்கட்டளை 20தர ஏக்கருக்கு மேல் “9” பொது டிரஸ்ட்கள் நிலங்களை வைத்து இருந்தன. அதேபோல் 380க்கும் மேற்பட்ட நபர்கள், பொது டிரஸ்ட் பெயர்களில் உள்ள பல்வேறுதரப்பட்ட நிலங்களில் 5தர ஏக்கருக்கு மேல் குத்தகை எடுத்து விவசாயம் செய்து வந்து கொண்டு இருந்தனர். மேற்கண்ட இரண்டு சட்டபடியும் இன்னும் விசாரனை செய்யப்படவேண்டியவர்களும், குத்தகைதாரர்களும் உள்ளார்கள் என்றும் தஞ்சாவூர், மயூரம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு உதவி கலெக்டர் தகுதியில் நிலச்சீர்திருத்த அதிகாரிகள் பணிபுரிந்துகொண்டு இருந்தார்கள் என்று 1964 – 65ம் ஆண்டின் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாக அறிக்கையில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இதன்பிறகு நிலசீர்திருத்த சட்டத்தில் நிறைய மாற்றங்களை கொண்டு வந்து விட்டார்கள். நிறைய புள்ளி விவரங்கள் தஞ்சையில் மாறி இருக்கிறது.


இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Thanjavur #landceiling #landceilingact # valley

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…