இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நினைவு சின்னம்

இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் நினைவு சின்னம். சங்க காலத்து இலக்கியங்களில் சிறுபாணாற்றுபடை என்று அரசரை பார்க்க எப்படி போகவேண்டும் என்று வழி சொல்லும் கவிகள் எழுதியிருக்கிறார். அதில் இடைக்கழிநாட்டில் இருந்து ஒய்மா நாட்டிற்கு  தற்போதைய மரக்காணம் வழியாக போக வேண்டி வழி சொல்லி இருக்கிறார். அன்றைய மரக்காணத்திற்கு எயிற்பட்டினம் என்ற பெயரை சொல்லி இருக்கிறார். ஒய்மா நாடு என்பது இன்றைய திண்டிவனம்தான் ஆனால் அது இப்பொழுது இருக்கும் திண்டிவனம் இல்லை அது பாண்டிசேரிக்கும் திண்டிவனத்திற்கும் நடுவில் இருந்து இருக்கும். இதனை எழுதிய இந்த பாணனுக்கு சங்க காலத்தில் இருந்து இன்று வரை தன் பெயர் அழியாமல் நிலைத்து நிற்கிறது.இடைகழி நாடு என்ற இந்த பெயரும் சங்க காலத்தில் இருந்து அப்படியே இருக்கிறது.பெரும்பாலும் தேனி,கம்பம்,பொள்ளாச்சி பகுதிகளையே மிக அழகானது என்று திரைதுறையினர் காட்டி வருகின்றனர்.ஆனால் இந்த இடைகழிநாடும் நெய்தலின் பேரழகை வெளிபடுத்தி கொண்டே இருக்கும்.இந்த பகுதியை இன்னும் வெளிசொல்லாமலேயே இருக்கிறார்கள்.




இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

Paranjothipandian.in

#paranjothi_pandian #writer #author #trainer #consultant #consulting #field_work #பாண்டிச்சேரி #இடைக்கழிநாட்டுநல்லூர் #நத்தத்தனார் #நினைவுசின்னம் #சங்ககாலம் #இலக்கியம் #சிறுபாணாற்றுபடை #ஒய்மா_நாடு #மரக்காணம் #எயிற்பட்டினம் #திண்டிவனம் #தேனி #கம்பம் #பொள்ளாச்சி #பாண்டிச்சேரி #திரைத்துறை #நெய்தல் #literature #sangam #nattathanar #monument #sangam_period #oima_country #dindivanam #theni #kampam #pollachi #flim_industry

literature  

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்