பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டு குடியிருப்புக்காரன் காலிங்கராயன்

பூந்துறை நாட்டுக்கு நாட்டானாய் வெள்ளோட்டு குடியிருப்புக்காரன் காலிங்கராயன்

பூந்துறை நாடு இன்றைய தமிழ்நாட்டில் வடக்கே பவானி ஆற்றை எல்லையாகவும் தெற்கே நொய்யலாற்றை எல்லையாகவும் கிழக்கே காவிரியாற்றை எல்லையாகவும் கொண்ட 32 கிராமங்ளை உள்ளடக்கியது. கி.பி.1500 ஆண்டுகளில் மாமன்னன் கிருஷ்ண தேவராயர் காலத்தில் இங்கிருக்கும் சங்ககிரியை கோட்டையாக வைத்து ஆண்டார்கள். அதற்கு முன்பு மதுரை பாண்டியர்கள் ஆண்ட காலத்தில் அவருக்கு பூந்துறைக்கு மந்திரியாக காலிங்கராயன் அவர்கள் ஆகிவிட்டார்.

அன்னார் காவிரியில் கலக்குமாறு பவானியை தொடுமாறு நொய்யலில் புகுமாறு ஒரு கல்லனையை கட்டினார். இப்படி கால்வாய் கட்டியதால் இந்த பகுதியை மிகவும் செழிப்பாக்கியிருக்கிறார். மக்களின் பாராட்டுகளையும் பெற்றார். காலிங்கராய விநியோகம் என்ற வரிப்பணத்தையும் பெற்று தொடர்ந்து கால்வாயை பராமரித்து இருக்கிறார். அன்னாருக்கு பின்னால் வந்த அவரின் தலைமுறைகள்  பாளையக்காரர்களாக இருந்து வந்து இருக்கிறார்கள். அவர்கள் பரம்பரை காலிங்கராயர் பட்டத்தை போட்டு கொண்டு இருக்கிறார்கள். (JOURNEY FROM MADRAS THROUGH MYSORE CANARA AND MALABAR என்ற நூலை எழுதிய Dr.Buchchanan என்பவர் இந்த காலிங்ராயன் கால்வாயை 1800 ஆம் ஆண்டு நடந்தே அந்தகால கால்வாய் அழகை வர்ணித்து இருக்கிறார். 3,459 ஏக்கர் நஞ்சையும் 1,713 ஏக்கர் புஞ்சையும் பயன்பெற்றுகொண்டு இருந்தது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர்-தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

#Poonthurai #Kalingarayan #resident #Bhavani_river #Noyalriver #cauvery_river #Mamannan #Krishna_Devarayarar #Sangakiri #கோட்டை #fort #minister

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…