ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 1

 ஜமீன் எஸ்டேட் ஒழிப்பு சுருக்க வரலாறு- பாகம் - 1

     ஜமீன் என்பதற்கு நிலம் என்றும் தார் என்பதற்கு “உடைமையில் கொண்டுள்ளார்” என்று பொருள்படும் எனவே தான் ஜமீன் எஸ்டேட் என்பது ஒரு ஜமீன்தார் உடைமையில் கொண்டுள்ளார் ஒரு எஸ்டேட் ஆகும். இவை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அதாவது 1802 ம் ஆண்டுக்கு முன்பு இருந்தே பன்நெருங்காலமாக, காலம் காலமாக இந்த ஜமீன் எஸ்டேட் நடைமுறை இருந்தது.

     மேற்படி ஜமீன் நில நிர்வாக முறையில் மேல்வாரம், குடிவாரம், இருவாரம் போன்ற வரி கொடுக்கும் முறை இருந்தன அவை மேல்வாரம் என்பது சாகுபடி செய்யப்பட்ட நிலத்தில் விளைச்சலில் ஒரு பங்கை வரியாக ஜமீன் வசூலிக்கும் முறையாகும். அதேபோல் கீழ்வாரம் என்பது நிலத்தை கைப்பற்றில் வைத்து சாகுபடி செய்பவருக்கு நிலத்தை ஆண்டு அனுபவிக்கும் உரிமையும் விளைச்சலில் 1 பங்கை வரியாக செலுத்தியது போக எஞ்சிய பங்கை ஆண்டு அனுபவிக்கும் உரிமை ஆகும் அதே போல் இருவாரம் என்பது சாகுபடி நிலத்தின் விளைச்சலில் முழுமையும் ஆண்டு அனுபவ உரிமையாகும்.

     இதில் மனுதாரர்களில் பாட்டனார்கள் தாவா சொத்தில் குடிவார உரிமை உடையார்களாக இருந்தார்கள் கீழ்வார உரிமையை கிரய பத்திரம் மூலம் மூன்றாம் நபர்களுக்கு விற்பனையும் செய்யலாம் அதாவது குடியானவன் நிலத்தில் விவசாயம் செய்யும் உழவடை உரிமையை விற்பனை செய்யலாம் அப்படியானால் அது முழு சொத்தையும் விற்பனை செய்வது அல்ல கீழ்வார உரிமையுள்ள குடியானவன் தனக்கு உள்ள விவசாய உரிமையை விற்பனை செய்வது ஆகும்.

அதே போல் மேல்வார உரிமை உள்ள ஜமீன்கள் தனது உரிமையை இன்னொரு நபருக்கு விற்பனை செய்யலாம் ஆக ஒரு பூமிக்கு இரண்டு உரிமைகள் இரண்டு உரிமை மாற்ற கிரய பத்திரங்கள் இருக்கும் பெரும்பாலும் சட்டம் அறியாத கீழ்வார உரிமையுள்ளவர்கள் ஜமீன்தாருக்கு கட்டுப்பட்டு இருந்தனர் ஜமீதார் ஏக போக உரிமையை அனுபவித்து வந்தார்கள் இப்படி பல்லாண்டு காலமாக இருந்த உரிமைகளை ஆங்கிலேயர்கள் 1908 ஆம் ஆண்டு “எஸ்டேட் நில சட்டம்”-1908 என்று ஒரு சட்டம் இயற்றப்பட்டு ஜமீன்தார், குத்தகைதாரர்கள், ரயத்துக்கள் என அவரவர்களுக்கு அந்த அளவு உரிமை உண்டு என்று உரிமை வரையறுக்கப்பட்டது. இதனால் ஜமீதார்கள் ராயத்துக்களை நிலங்களிலிருந்து அவர்கள் விருப்பம் போல் வெளியேற்றிய நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டது ஜமீனின் ஏக போகமும் தடை செய்யப்பட்டது. 


தொடரும்.......



இப்படிக்கு

சா.மு.பரஞ்சோதி பாண்டியன்

எழுத்தாளர், தொழில்முனைவர்

9841665836

www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…