நிச்சயம் நிறைய பேர் கேள்விப்பட்டு இருப்பார்கள் ! அந்த இடத்திற்கு டபுள் டாகுமென்ட் , இந்த பத்திரம் டூப்ளிகேட் என்று ஆனால் அவை எப்படி உருவாகிறது .அதில் இருந்து நாம் எப்படி நம்மை காப்பாற்றி கொள்ளலாம்? என்று நினைப்பவர்களுக்கு இந்த கட்டுரை மிக பயனுள்ளதாய் இருக்கும் .
போலி ரப்பர் ஸ்டாம்ப் மற்றும் முத்திரை தாள்கள்
வழி1:
பெரும்பாலும் போலி ஆவணங்கள் , போலி நபர், போலி கையெழுத்து ,போலி புகைப்படம் அல்லது இவையெல்லாம் போலியாக செய்யப்பட்டு அழித்து திருத்தி மேற்சொன்ன எல்லா விசயங்களையும் சேர்த்தோ அல்லது இவற்றில் ஒன்றோ நடந்து இருக்கும். இவையெல்லாம் 1995 க்கு முன் இருக்கின்ற பத்திரங்களில் நடந்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதை மிக முக்கியமாக நினைவில் வைக்க வேண்டும்.
1995 க்கு முன்பு அடையாள அட்டை , சான்று புகைப்படம், சான்று கையெழுத்து என்று எதுவும் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. 1990 க்கு முன்பு கிரயம் கொடுப்பவரின் கையொப்பம் மட்டும் தான் பத்திரத்தில் இருக்கும். கிரயம் வாங்குபவர் கையொப்பம் இடம் பெற்று இருக்காது ,
1990க்கு முன் புறம்போக்கு நிலங்களை பத்திரம் செய்து இருப்பார், 2005 க்கு பின் பத்திரத்தில் வாங்குபவர், விற்பவர் புகைப்படம் ஒட்டி இருப்பர், சமீபமாக பத்திரபதிவின் போது பதிவு அலுவலகத்தில் டிஜிட்டல் போட்டோ மற்றும் டிஜிட்டல் ரேகை அமுல்படுத்தி இருகின்றனர்.
பத்திரபதிவு துறையில் நடந்த மாற்றங்களை தேதி வாரியாக தெரிந்தால் மட்டுமே அந்த பத்திரம் ஒரிஜினலா போர்ஜரியா என கண்டு பிடிக்க முடியும். பெரும்பாலும் போலி ஆவணங்கள் உருவாக்குபவர்கள் மேற்கண்ட விசயத்தில் நிச்சயம் ஏதாவது ஒன்றை கோட்டை விட்டு விடுவார்கள் !
வழி 2:
கிரைய பத்திரங்களில் , பட்டாவில் தமிழ்நாடு அரசினுடைய கோபுரமுத்திரை இருப்பது அனைவருக்கும் தெரிந்து இருக்கும். இம்முத்திரையை கவனித்து பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும் ,அது மெட்டலில் செய்யபட்ட சீலின் அச்சு என்று,இனி இதுவரை கவனிக்காதவர்கள் நிச்சயம் உங்கள் பத்திரங்களில் உள்ள சீலை பார்க்கலாம், பெரும்பாலும் போலி பத்திரங்கள் செய்பவர்கள் ரப்பர் ஸ்டாம்பில் தான் கோபுர முத்திரையை செய்து இருப்பார்கள் . மெட்டலில் செய்வது சற்று சிரமமான ஒன்று.
வழி3:
இதற்க்கு முன்பு எப்படி பத்திரபதிவு துறையில் நடந்த மாற்றங்களை வரலாறு வாரியாக தெரிந்து வைத்து இருக்க சொன்னேனோ, அதே போல் பத்திரபதிவு அலுவலகத்தின் வரலாறும் , மாற்றங்களும் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். உதாரணமாக சென்னை – கொட்டிவாக்கத்தில் சொத்து இருந்தால் அதனுடைய பத்திரபதிவு அலுவலகம் அடையாறு 1981 லிருந்து 1986 வரை மேனுவல் பீரியடில் இருந்தது அதற்கு அடுத்து 1986 லிருந்து 1996 வரை கணினி பீரியட் என , அடையாறு சார்பதிவகத்தில் இருந்தது .
சார்பதிவகம் மாவட்ட பதிவகம்
1983க்கு முன்பு சைதாபேட்டையில் இருந்தது, 1996 க்கு பிறகு இன்று வரை நீலாங்கரையில் சார்பதிவகத்தில் இருக்கிறது. அப்படியானால் ஒரு சொத்தின் வரலாறு பார்க்கும் போது அச்சொத்துடைய சர்பதிவக வரலாறையும் பார்க்க வேண்டும்.
பெரும்பாலும் டூப்ளிகேட் பத்திரம் செய்பவர்கள் இந்த சார்பதிவக மாற்றங்களில் கோட்டை விட வாய்ப்பு அதிகம் , தவறான சார்பதிவக சீல்களை ஸ்டாம்ப்களை பயன்படுத்தி இருப்பார்கள் , அதன் மூலமாக போலி ஆவணங்களை கண்டு பிடிக்க முடியும்.
வழி4:
சென்னை – சைதாபேட்டையில் உள்ளது மாவட்ட இணை சார்பதிவகம் ஆகும். டூப்ளிகேட் பத்திரத்தில் வெறும் சார்பதிவகம் என்று சீல் போட்டு இருந்தால் , அதனை வைத்து போலி ஆவணங்களை கண்டுபிடிக்கலாம் .திருவள்ளுவர் மாவட்டம் , மாவட்ட இணை சார்பதிவகம் ஆகும். பத்திரத்தில் வெறும் சார்பதிவகம் மட்டும் போட்டு இருந்தால் அப்போது அவை போலியான ஆவணங்கள் என்று கண்டுபிடித்து விடலாம்.
எனவே தான் பத்திரபதிவு அலுவலக வரலாறு , அதாவது எப்போது சார்பதிவகத்திலிருந்து மாவட்ட சார்பதிவகம் , இணை மற்றும் துணை மாவட்ட சார்பதிவகம் எப்போது மாற்றத்திற்குள்ளானது என்பதை தெரிந்து வைத்து கொண்டால் மட்டுமே நாம் வாங்க போகும் பத்திரம் போலியா அல்லது அசலா என்று கண்டு பிடிக்க முடியும்.
வழி5:
பத்திரம் பார்க்கும் போது காப்பி ஆப் தி டாகுமென்ட் இருந்தால் அதாவது உங்கள் பத்திரத்திற்கு தாய் பத்திரம் இருந்தால் , அதாவது நீங்கள் வாங்க போகும் இடத்திக்கு முன் டாகுமென்ட் இல் ஏதாவது காப்பி ஆப் தி டாகுமென்ட் இருந்தால் நிச்சயமாக கவனிக்க வேண்டும்.
[gallery ids="1537,1538" type="rectangular"]
காப்பி ஆப் தி டாகுமென்ட்
காப்பி ஆப் தி டாகுமென்ட் என்பது ஒரிஜினல் பத்திரம் தொலைத்த பின்பு பத்திரபதிவு அலுவலகத்திற்கு சென்று அங்கு இருக்கும் நகலை மனு எழுதி போட்டு வாங்குவது ஆகும். காப்பி ஆப் தி டாகுமென்ட் இருந்தாலே டபுள் டாகுமென்ட் உள்ளதா என்று நிச்சயமாக செக் செய்ய வேண்டும்.
ஒரிஜினல் பத்திரம் அடமானத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ இருந்தால் காப்பி ஆப் தி டாகுமென்ட் வைத்து புது பத்திரம் ரெடி செய்வார்கள் , அப்படியானால் ஒரிஜினல் டாகுமென்ட் கிடைத்து விட்டால் அதை வைத்து இன்னொரு கிரையம் செய்யலாம் . காப்பி ஆப் தி டாகுமென்ட் இருந்தாலே 80 % போலி பத்திரம் செய்ய வாய்ப்பு உள்ளது.
வழி6:
அடுத்து லேன்ட் சர்வேயில் டபுள் டாகுமென்ட் இருக்கும் , சென்னை வேளச்சேரியில் ரயில்வே ஸ்டேஷன் இல் சர்வே எடுத்து விட்டார்கள் அதில் உமா மகேஸ்வரி அவன்யூ என்று ஒரு லேஅவுட் உள்ளது. அதில் அவர் அப்பா கிழக்கு இருந்து மேற்கு பார்த்து லே அவுட் போட்டு இருக்கிறார்,
அதை கலைத்து விட்டு பையன் வடக்கு இருந்து தெற்கு பார்த்து லே அவுட் போட்டு உள்ளார். ஏற்கனவே அப்பா கொஞ்சம் பத்திரம் போட்டு விட்டார். இன்னும் மிச்சம் உள்ளதையும் பிரித்து பத்திரம் போட்டு விட்டார், சில பிளாட் களில் சர்வேயில் மேலும் கீழும் ஒன்னு போல் வந்து விடும் 10 வது நம்பர் பிளாட்களில் அப்பா போடும் போது 10 , பையன் போடும் போது 20 ஒரே இடம் தான் சர்வேயில் ஆனால் 2 மனை பத்திரம் வந்திருக்கும், சர்வேயிலும் 2 மனை பத்திரம் வந்துள்ளதா என பார்க்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
இது டுப்ளிகேட் டாகுமென்ட் இல்லை, இரண்டுமே ஒரிஜினல் டாகுமென்ட் தான் , இதனை நாங்கள் டபுள் டாகுமென்ட் என்று சொல்வோம். இதில் என்ன பிரச்சனை என்றால் , மேற்படி சொத்தை 2டபுள் டாகுமென்ட் காரர்கலுமே இன்னொருவருக்கு விற்றுவிடும் போது டபுள் டபுள் என்ட்ரியாகவே EC யில் காட்டப்படும். ஒரு இடத்திற்கு 2 உரிமையாளர்கள் 2 ஆவணங்கள் என்று தொடர் கதையாக இருக்கும்.
வழி7:
போலி நபர் மாறுவது உண்டு, இடம் விற்பவரில் ராஜா என்பவர் கையெழுத்து போட வேண்டும் என்றால் அதற்கு பதில் அவருடைய தம்பிக்கு ராஜா வின் முக சாயல் ஒன்று போல் இருக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் அவருடைய தம்பியை வைத்து கையெழுத்து போட வைத்து விடுவார்கள், அல்லது வேறு நபரை அழைத்து வந்து கையெழுத்து போட செய்வார்கள் , நிச்சயமாக செய்ய வேண்டியது என்னவென்றால் ஆள்மாறாட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று பார்த்து கொள்ள வேண்டும்,
புரிதலுக்காக மட்டுமே இந்த படம்
ஒரே குடும்பத்தில் அக்கா தங்கை 7 பேர் இருந்து அக்காவின் சொத்தை தங்கச்சி ,நான் தான் அக்கா என்று கையெழுத்து போட்டு விட்டார், எனவே சொந்தத்திலும் இந்த மாதிரியான தவறுகள் நடக்க வாய்ப்பு உள்ளது, அதனால் போலி பத்திரத்தில் ஆள்மாறாட்டத்திலும் கவனம் வைக்க வேண்டும்,
நேரடியாக சென்று கவனிக்கும் போதும், ஆள்மாறாட்டம் நடக்க வாய்ப்பு உள்ளதா என்று யோசித்து நடக்க வேண்டும், சம்மந்தம் இல்லாத வேறு நபரை அழைத்து வந்து போலி ID ரெடி செய்து கையெழுத்து போட வைத்திருப்பார்கள். இவையெல்லாம் தற்போது ஆதார் வந்த பிறகு குறைய வாய்ப்பு இருக்கிறது.
இவைகள் தான் போலி பத்திரங்களை எளிமையாக கண்டுபிடிக்க 7 வழிகள் ஆகும்.
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
1.காந்தி்ஜியின் சீடரும் மிகச்சிறந்த காந்திய தலைவரும் ஆன திரு.ஆச்சார்ய வினோபாவே என்ற உயர்ந்த மனிதனின் சிந்தனையில் அனைவருக்கும் நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் நோக்கத்தில் தோன்றிய இயக்கம்தான் பூமிதான இயக்கம்.. 2.நிலமற்றவர்களுக்கு நிலமுள்ள பண்ணையார்கள்,ஜமீன்கள்,நிலகிழார்கள் நிலத்தை தானமாக இந்த இயக்கத்திற்கு கொடுப்பார்கள்.அல்லது பூமிதான இயக்கத்தினர் கேட்டு பெறுவார்கள். 3.அந்த நிலங்களை அங்கு இருக்கும் நிலமற்ற ஏழைகள் &கூலிகளுக்கு பிரித்து கொடுப்பார்கள் பூமி தான இயக்கத்தினர். 4.அதன்படி தமிழகத்தில் திரு.வினோபாவே அவர்கள் 1956 களில் ஓராண்டுக்கு தமிழகம் முழுவதும் நடைபயணம் செய்து பூமி தானங்களை நிலகிழார்களிடம் இருந்து பெற்றார். அப்படி பெற்ற நிலங்கள் தமிழகம் முழுவதும் பல ஆயிர கணக்கான ஏக்கர்கள் மக்களுக்கு பகிர்ந்தளிக்கபட்டு இருக்கிறது. 5.கொஞ்ச நிலங்கள் பகிர்தளிக்க படாமல் பூமி தான போர்டு கிட்டயே உள்ளது.கொஞ்ச நிலங்கள் அந்தந்த பகுதியில் சட்ட சிக்கல்கள் சட்ட குழப்பங்களால் பூமி தான இயக்கத்தாலேயே இன்னும் கையகப்படுத்த படாமல் இருக்கிறது. 6.பூமி தான நிலங்களை அந்த அந்த பகுதிகளில் தீர...
1)அழகான பெயரகள் நிலவியல் சாலை அல்லது நிலவியல் ஓடை நிலவியல் கால்பாதை, நிலவியல் வண்டி பாட்டை, போன்ற பெயரகள் எல்லாம் கிராம அ-பதிவேட்டில் பார்க்கலாம். இதனை அந்த கால செட்டில்மெண்ட் கணக்கில் பூஸ்துதி ரோடு, பூஸ்துதி பாட்டை,பூஸ்துதிஓடை என்றும் குறிப்பிடபட்டு இருக்கும் 2) சில ஊரில் பேச்சு வழக்கில் பூஸ்டர் ஓடை பூஸ்டர் ரோடு என்றும் சொல்லிகொண்டு இருப்பார்கள். இப்படிபட்ட வார்த்தைகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம் என்றால் பட்டா நிலத்திதல் இருக்கிற ஓடை,பட்டா நிலத்தில் இருக்கிற சாலை என்று அர்த்தம் 3) பட்டா ஓடை, பட்டா சாலை இரண்டுக்கும் தனி சர்வே எண் உட்பிரிவ கொடுத்து புலப்படத்தில் கூர் செய்து (தனியாக பிரித்து காட்டி இருப்பார்கள்) அபதிவேட்டிலும் நிலவியல் பாதை என்று குறிப்பிட்டு இருப்பார்கள் 4) போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலங்களில் நிலவு வெளிச்சத்தில் அந்த நடைபாதை வண்டி பாதை ஓடைஒரமாக நடத்து முக்கிய சாலையை அடைவார்கள் அதனை நிலவியல் சாலை என்பார்கள் 5) இயற்கையாகவே தனியாருக்கு சொந்தமான நிலங்களில் உருவாகி ஓடும் ஓடைகள் ,நீர்வழிபாதைகள், மக்கள் நடைபாதைகளை அவர்கள் வசதிக்கு ஏற்ப பட்டா நிலங்களில் நடந்து ப...
நிலத்திற்கு “பட்டா” என்ற வருவாய் துறை ஆவணம் தவிர அதனுடன் கீழ்க்கண்ட நான்கு ஆவணங்கள் மிக முக்கியமானவை . அவை பட்டாவை உறுதி செய்யவும், வேறு ஏதாவது வில்லங்கங்கள் இருக்கிறதா என்று பரிசோதித்து நிலங்களை வாங்குவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும், மேற்படி நான்கு ஆவணங்களை பற்றியும் சரியான புரிதல் இன்று வரை பொதுமக்களுக்கு இல்லை, என்பதே உண்மை! அதனை இந்த கட்டுரை தீர்க்கும் என நினைக்கிறன். 1. சிட்டா: “சிட்டா” என்பது கிராம நிர்வாக கணக்கு புத்தகங்களில் ஒரு பதிவேடு (கணக்கு எண் 10 ) இதில் யார் யாருக்கு எல்லாம் “பட்டா” கொடுக்கப்பட்டு இருக்கிறதோ அதனுடைய விவரங்கள் தொகுக்கப்பட்டு இருக்கிற பதிவேடு ஆகும் . உதாரணமாக பள்ளிகூட ரேங்க் கார்டு மாணவர்களுக்கு கொடுக்கபட்டு இருக்கும், அது வெளியே சுற்றி வரும் ஆவணம் அதுபோல் பட்டாவை வைத்து கொள்ளுங்கள். பள்ளிகூட லெட்ஜெரில் அனைத்து மாணவர்களின் மதிப்பெண்கள் தொகுத்து ஒரு பேரேடு இருக்கும் அது போல தான் இந்த சிட்டா பதிவேடு! பட்டா வெளியில் சுற்றி வருவதால் போலி அச்சடிப்பு , நகல், கலர் ஜெராக்ஸ், மூலம் பட்டாக்களில் அளவுகள் மாற்றங்கள், பட்டாதாரர் பெயர், தந்தை பெயர் மாற்றங்கள் ...
Comments
Post a Comment