முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 16-வது பாகம்)
5. சந்தை மதிப்பு வழிகாட்டி வரைவில் கவனிக்க வேண்டிய முரண்பாடுகள்:
26.04.2024 பதிவு துறை தலைவர் தமிழ்நாடு முழுவதும் மதிப்பீட்டுக் குழுவை உருவாக்கி கொடுத்து விட்டார் அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் மதிப்பீட்டுத் துணை குழுவும் MVG வரவை தயாரித்துக் கொண்டிருக்கிறது அப்படி தயாரிக்கப்பட்ட வரைவு ஒவ்வொரு சாமானியனுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும் எனவே ஒவ்வொருவரும் MVG வரைவை பரிசோதிக்க வேண்டியது சமூக பொறுப்பாகும் அது மட்டுமில்லாமல் MVG யில் உள்ள 7 விதிகளில் 4-வது விதி பொது மக்களுக்கு MVG வரைவை பொது மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். ஒவ்வொரு சாமானியனும் அந்த வரைவை பார்த்து கருத்துரைகளை கொடுக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறது சார்பதிவகம் அலுவலகம் சென்று MVG வரவை பெற்று அடியில் சொல்கின்ற விவரங்களை எல்லாம் சரி பார்த்து வரைவை மேம்படுத்துவதற்கான காரியங்களை செய்ய வேண்டிகிறேன்.
1. சந்தை மதிப்பு வழிகாட்டி மதிப்பிற்கும் வெளியில் நிலவும் சந்தை மதிப்பும் சம்பந்தம் இல்லாமல் இருக்கிறதா?
2. தெருவிற்கு MVG இருக்கும்பொழுது அதன் சந்திப்பிற்கு அதே மதிப்பு இருக்கிறதா?
3. உங்கள் தெருவிற்கு MVG இல்லையா?
4. நகராட்சி, மாநகராட்சி தெரு MVG பதிவேட்டில் தெரு ஒத்துப்போகவில்லையா?
5. தெருவுக்கும், தெரு சம்பந்தப்பட்ட சர்வே எண்ணுக்கும் மதிப்பு தனி தனியாக உள்ளதா?
6. கிராம Code No சரியாக இருக்கிறதா?
7. புறம்போக்கு நிலத்திற்கு MVG செய்து இருக்கிறார்களா?
8. HRNCE நிலங்கள், பூமிதான நிலங்கள், பஞ்சமி நிலங்கள், MVG செய்திருக்கிறார்களா?
9. தெருக்களுக்கு மதிப்பு குறைவாகவும் சர்வே எண்களுக்கு மதிப்பு அதிகமாகவும் உள்ளதா?
10. விளைநிலம் வகைப்பாடு நஞ்சை புஞ்சை மாறி மாறி இருக்கிறதா?
11. குடியிருப்பு கையேடு கலப்பினமாக அல்லது வணிகமாக மாறி இருக்கிறதா?
12. உங்கள் பட்டா நிலங்கள் அரசு நிலங்கள் என்று வகைப்பாடு மாறி இருக்கிறதா?
13. விடல் இன்றி அனைத்து தெருக்களும் அனைத்து புல எண்களும் வந்திருக்கிறதா?
14. கிராமத்தின் உயர்ந்த பட்ச மதிப்பையே தவறுதலாக இருக்கிறதா?
15. வழிகாட்டி பதிவேட்டில் டிஐஜி அத்தாட்சி இல்லாமல் அடித்தல் திருத்தல் இருக்கிறதா?
நாளை தொடரும்....


இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…