முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 15-வது பாகம்)
4. முரண்பாடான MVG நல்லாட்சிக்கு ஏற்படும் இழப்பாகும்
இப்பொழுது 2024 ஆம் ஆண்டு நடந்து கொண்டு இருக்கின்ற MVG நிர்ணயிக்கும் நடைமுறை போல் 2012 ஆம் ஆண்டும் நடந்தது அப்படி 2012 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட MVG சாமானிய மக்கள் பலரையும் துன்புறுத்தியது, பத்திர அலுவலகத்திற்கே வந்தால் மொத்த சொத்தையும் முத்திரை கட்டணம் என்று வாங்கி விடுவார்கள் என்று பயம் வந்து விட்டது அதனால் அப்பொழுது இருந்த மாண்புமிகு ஜெயலலிதா அம்மையார் ஆட்சியின் மீது அதிருப்தியும் அவப்பெயரும் உருவாகியது அந்த அதிருப்தி அதற்கு அடுத்து வந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலித்தது ஜெயலலிதா அம்மையார் படு தோல்வியை சந்தித்தார்கள் அதன் பிறகு தான் அன்றைய அரசு 09.06.2017 தேதி MVG யை 33% சதவீதம் குறைத்தார்கள் என்பது நாடறிந்த வரலாறு
அதே போல் இப்பொழுது நடக்கின்ற MVG வரைவை பொதுமக்களின் அதிருப்தி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நல்லாட்சி நடத்தும் அரசின் கடமை ஆகும்
மேலும் மக்களிடம் இருந்து வரியை பெரும் முறையை சங்க காலத்திலேயே எங்களது பெரும்பாட்டான் சங்க காலத்து சாமானிய புலவர் பிசிராந்தையார் மதுரையை ஆண்ட அரசனுக்கு
“காய்ந்து இருக்கும் நெல்லை அறுத்த அரிசி கவளமாக்கி யானைக்கு தந்தால் அது பல நாட்களுக்கு வரும் அதுவே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவை காட்டிலும் காலில் மிதித்து வீணாகும் நெல் அதிகமாக அழியும் இதனை உணராமல் மக்களிடம் இரக்கம் இல்லாமல் வரி
பிண்டத்தை விரும்பி வாங்கினால் யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும் இதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்
அதே போல் பதிவுத்துறை என்ற யானை தமிழ் நாடு மக்களிடம் கவனம் கவனமாக வரி விதித்தால் சிறப்பாக இருக்கும் அதற்கு MVG யை சிரத்தை எடுத்து மெனெக்கெட்டு நிர்ணயிக்க வேண்டும் இல்லை என்றால் இந்த MVG யை தமிழக மக்களையும் பதிவுதுறையையும் வீணாக்கிவிடும்.
"யானை புட்கப்புலம் போல என்ற பிசிராந்தையாரின் பாடலை மாநில வழிகாட்டி மதிப்பு குழுவும் மாவட்ட வழிகாட்டி மதிப்பு குழுவும் தமிழக அரசும் உணர்ந்து செயல்பட வேண்டும்.
நாளை தொடரும்....

இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
Comments
Post a Comment