முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 1-வது பாகம்)
மாண்புமிகு முதலமைச்சர் ஐயா மு.க. ஸ்டாலின் அவர்களின் பதிவுத்துறையை நடத்திவரும் மாண்புமிகு அமைச்சர் மூர்த்தி அவர்கள் முயற்சியால் வழிகாட்டி மதிப்பு சீராய்வு தற்பொழுது மாநிலம் முழுவதும் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வழிகாட்டி மதிப்பு நிர்ணயித்தலின் “வரைவு” DRAFT யை 15 நாட்களுக்கு ஒவ்வொரு சார்பதிவு அலுவலகத்திலும் பொது மக்களின் பார்வைக்கு வைத்திருப்பார்கள். அதனை பொதுமக்கள் வாங்கி பார்த்து அதில் தங்கள் சொத்துக்களின் சந்தை மதிப்பு வழிகாட்டியை சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும், அதில் முரண்பாடுகள் இருந்தால் அதனை மனுவாக எழுதி மாவட்ட மதிப்பீட்டு குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டும், இந்த கடமையை அனைவரும் செய்ய வேண்டும் என்று சாதாரண பொது ஜனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது நம்மைப் போன்ற தன்னார்வலர்களின் கடமை அதனால் இந்த கட்டுரையை எழுதுகிறேன்.

1. ஏன் சந்தை மதிப்பு வழிகாட்டி (MVG) சாமானியனுக்கு முக்கியம்.
1. MVG என்கிற மதிப்பு சட்ட அந்தஸ்து உடையது. இது தமிழகத்தில் உள்ள அனைத்து நிலங்களுக்கும் ஒரு பண மதிப்பினை கொடுக்கிறது. இதன் மூலம் நில உடமையாளர்கள் தனது சொத்தின் சட்டப்பூர்வ பண மதிப்பு என்ன? என்று தெரிந்து கொள்வார்கள். மேற்படி மதிப்பு உண்மையானதாக இருத்தல் அவசியம், மிகையாகவோ, பகட்டாகவோ வழிகாட்டி மதிப்பு இருந்தால் பொருளாதார சரிவு ஏற்பட வழி வகுக்கும்.
2. தமிழ்நாடு முழுவதும் ஒரு நேர பேருந்து மட்டுமே போகின்ற கிராமங்களும் பேருந்தே போகாத குக் கிராமங்களும் இன்றளவும் இருக்கிறது உதாரணமாக மேற்படி குக் கிராமங்களெல்லாம் சதுர மீட்டர் 1200 என்று நிர்ணயித்து விட்டால்! அபிவிருத்தி திட்டங்களோ வளர்ச்சியோ இல்லாத கிராமங்கள் எல்லாம் மதிப்பு உயர்ந்து விட்டதாக பொது மக்கள் நம்ப ஆரம்பித்து விடுவார்கள் அதனால் வெளி நாடுகளில் கூலி தொழில் செய்து விட்டு இந்த பணத்தை எடுத்துக் கொண்டு விவசாய நிலங்களோ அல்லது வீட்டு மனையோ வாங்க விரும்பும் பொழுது இந்த தவறான மதிப்பால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
(நாளை தொடரும்....)


இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…