முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 4-வது பாகம்)
13. அரசு, பொது மக்களின் நிலங்களை ஆஜிர்தம் செய்யும் பொழுது அதற்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். அந்த இழப்பீடு MVG யை அளவு கோலாக வைத்து தான் நிர்ணயிப்பார்கள்.
14. இந்த வரைவு வெளி வருவதற்கு முன்பு உங்கள் பகுதிகளில் நில ஆர்ஜிதம் முன்மொழிவு நோட்டீஸ் கொடுத்திருந்தால் அந்த நிலத்திற்கெல்லாம் உண்மையான சந்தை மதிப்பு போடாமல் அதற்கு குறைவாகவே MVG நிர்ணயிக்க வாய்ப்பிருக்கிறது.15. பஞ்சம நிலங்களை மீட்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களுக்கு சொல்வது என்னவென்றால் பஞ்சம நிலங்களுக்கு “0” ZERO மதிப்பு போட வேண்டும் அங்கு MVG பகட்டு மதிப்பாக போடுவதால் அல்லது ஏதோ ஒரு மதிப்பு போடுவதால் அது பஞ்சம நிலம் இல்லை என்று சாதாரண பொது மக்கள் நினைத்து விட்டு அதனை வாங்க விற்க ஆரம்பித்து விடுவார்கள் எனவே அதனை தடுப்பதற்கு பஞ்சம நிலம் ஆதாரம் உங்களிடம் இருந்தால் அதனை வைத்து இந்த MVG வரைவை ஆட்சயபனைகள் செய்ய வேண்டும்.
16. இந்து அற நிலையத்துறை மற்றும் வக்ப் போர்டு நிலங்களில் வீடுகளில் வசித்து வருகின்ற மக்கள் வாடகையில் வாழ்ந்து வருகிறார்கள் . இந்த MVG உயர்ந்தால் அதன் அடிப்படையில் வாடகையும் உயர்த்தப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே 2012 ஆம் ஆண்டு உருவாக்கிய MVG யை வைத்து இந்து அற நிலைய துறையும் வக்ப் போர்டும் ஒரு கிரவுண்டு ரூ1500 இருந்த வாடகையை ரூ9000 க்கு உயர்த்தி விட்டார்கள் என்று கோவில் மனையில் குடி இருக்கின்ற சாமானியர்கள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் எனவே கோவில் நிலங்களில் மசூதி நிலங்களில் குடி இருப்பவர்கள் கண்டிப்பாக இந்த MVG வரைவை கண்காணிக்க வேண்டும்.
17. அரசாணை எண் 93 (பல்) வணிகவரி மற்றும் பதிவுதுனை நாள் 04.07.2012 யின்படி ரூ 25,000 வரை மதிப்புள்ள ஆவணங்களுக்கு 03.07.2012 முதல் பதிவு கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு இருந்தது இதனால் சமூகத்தில்கடைசிவிளிம்பில் இருப்பவர்கள் பயன்பெற்றார்கள். இப்பொழுது அனைத்தும்( Upward revision) செய்வதால் இந்த அரசாணை பலனை அனுபவிக்க முடியாமல் அடிதட்டு மக்கள் தடுக்கபடுவார்கள்.
(நாளை தொடரும்....
Comments
Post a Comment