முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 2-வது பாகம்)
3. மேற்படி MVG மதிப்பீட்டை வைத்து தான் சாமானியன் சாதாரண பொது ஜனம் தனது குடும்பத்துக்குள்ளையோ அல்லது குடும்பம் அல்லாத நபரிடம் பாராதீனம் செய்யும் பொழுது அரசுக்கு கட்ட வேண்டிய முத்திரை கட்டணம் பதிவு கட்டணம் போன்றவற்றை செலுத்த வேண்டும். அதனால் MVG அதிகமாக நிர்ணயித்தால் விலை ஏறாத சொத்துக்களுக்கும் அதிக அளவு முத்திரை கட்டணங்களை கட்டி பொது மக்கள் தன் சேமிப்பை இழப்பார்கள்.
4. நில உடமையாளர்கள் வங்கிக் கடன், நிலத்தின் மீதான தொழில் கடன், வீடு கட்டும் கடன், பிற அபிவிருத்தி கடன் வாங்க சொத்தை மதிப்பீடு செய்யும்பொழுது இந்த MVG யை வைத்து தான் கணக்கிடுகிறார்கள். அதனால் MVG யில் முறைபாடுகளும் பகட்டு மதிப்பும் இருந்தால் வங்கி கடன் வாங்குகின்ற பொது மக்கள் அதிகம் பாதிப்பு அடைவார்கள்.
5. வருமான வரி, மூலதன ஆதாய வரி, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற வரிகளை விதிப்பதற்காக இந்த MVG ஒரு அளவீடாக இருக்கிறது. அதனால் ஏற்கனவே 2012இல் பதிவுத்துறை நிறைய பகட்டு மதிப்பை பதிவுத்துறை நிர்ணயித்து இருக்கிறார்கள் தற்பொழுது அதனை திருத்தம் செய்யமால் சீராய்வு செய்கின்றேன் என்ற பெயரில் 10% 15% என்று மீண்டும் மேல் நோக்கிய upward revision சீராய்வு செய்தல் சாதாரண பொது ஜனங்களுக்கு வரி சுமை அதிகமாகும்.
6. அதேபோல் நீதிமன்ற வழக்குக்கு போனால் கோர்ட் பீஸ் கட்டுவதற்கு வழக்கை மதிப்பீடு செய்ய MVG வைத்து தான் கணக்கிடுவார்கள் தினமும் சிவில் வழக்குகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது MVG அதிகமானால் கோர்ட் பீஸ் அதிகமாகும் அதனால் நீதி மன்றத்தின் நியாயம் பெறுவதற்கே அதிக பொருள் செலவு சாமானியர்கள் செய்ய வேண்டும்.
7. DTCP / CMDA அங்கீகாரம் பெரும்பொழுது உள்ளாட்சிக்கு கட்டவேண்டிய கட்டணத்தை கணக்கிடவும் பொது திரவிடம் விட முடியாத பொழுது கட்ட வேண்டிய கட்டணம்மும் MVG வைத்து தான் அளவீடப்படுகிறது. இதனால் மனையை உருவாக்க ஏற்படும் கூடுதல் கட்டணமும் மனையை வாங்க போகின்ற பொது ஜனங்களின் தலையில் விலை ஏற்றமாக விழும்.


(நாளை தொடரும்....
இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…