முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 3-வது பாகம்)8. நகர்ப்புற நில உச்சவரம்பு வரன்முறைப்படுத்துதல் மூலமாக அறியா கிரயம் பெற்றவர்கள் அரசிடம் பட்டா வாங்க வேண்டும் என்றாலும் நகர்புற நில வரி ULT கட்ட வேண்டும் என்றாலும் அதற்கு பணம் கணக்கிடும் பொழுது இந்த MVG யை வைத்து தான் கணக்கிட வேண்டும்.
9. ஆட்சேபனை இல்லாத புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசிக்கின்ற மக்களுக்கு வருவாய் நிலை ஆணை 21-ன் படி வீட்டு மனை பட்டா கொடுக்கிறார்கள் என்றால் நிலத்தின் விலைக்கு பணம் கட்ட சொன்னால் அதற்கும் MVG அடிப்படையில் தான் கணக்கிட வேண்டிய வரும்.
10. அரசு நிலங்களில் விவசாயம் செய்து கொண்டு இருந்தால் அதற்கு வருவாய் நிலை ஆணைய எண் 15 இன் படி விவசாய நில பட்டா கொடுக்கிறார்கள் என்றால் அதற்கு பணம் கட்ட வேண்டும் என்றால் அதற்கும் MVG அடிப்படையில் தான் கட்ட வேண்டிய தொகையை கணக்கிட வேண்டி வரும்.
11. நில சீர்திருத்த துறையில் கீழ் DISPOSAL OF SURPLUS LAND விதிகளின் படி நிலத்தை விவசாயிகளுக்கு ஒப்படைக்கும் பொழுதும் அரசிற்கு கட்ட வேண்டிய கிரய தொகையை இனி இந்த MVG யை அளவு கோலாக வைத்து தான் நிர்ணயிப்பார்கள்.
12. அரசு, பொது ஜனங்களுக்கு நிலங்கள் ஒப்படை செய்யும் பொழுது அந்த நிலத்தின் மதிப்பு 50,000/- இருந்தால் தாசில்தாரும், 1,00,000 இருந்தால் R.D.O வும், 2,00,000 இருந்தால் DRO வும், மற்றும் 3,00,000 க்கு மேல் இருந்தால் மாவட்ட ஆட்சியரும்,5,00,000/- க்கு மேல் இருந்தால் நில நிர்வாக ஆணையரும் ஒப்படை உத்தரவில் கையெழுத்திட வேண்டும் இப்படி பண மதிப்பிற்கேற்ப அதிகாரிகள் கையெழுத்திட வேண்டி இருப்பதால் MVG யை நிர்ணயித்து அனைத்து நிலங்களும் 5,00,000 க்கு மேலே சென்று விட்டால் அனைவருமே நில நிர்வாக ஆணையரின் கையெழுத்துக்காக காத்திருக்கும் நிலை வரலாம் இப்படி முரண்பாடனா மதிப்பு இருந்தால் சென்னை நகரை விட்டு தூர இருக்கின்ற சாமானியர்கள் எல்லாம் மாவட்ட அளவில், கோட்ட அளவில், வட்ட அளவில் முடிக்க வேண்டிய நில ஒப்படைகளுக்கு சென்னையை நோக்கி நில நிர்வாக ஆணையரை தேடி வர வேண்டிய அலைச்சல் பொது மக்களுக்கு ஏற்பட்டு விடும்.
(நாளை தொடரும்....
Comments
Post a Comment