முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 5-வது பாகம்)3. தொழில் முனைவர்கள் இறால் பண்ணை அமைக்க அரசு நிலங்களை குத்தகைக்கு எடுத்தாலோ உப்பு தயாரிக்கும் பொருட்டு உப்பளங்களை குத்தகைக்கு எடுத்தாலோ அரசு நிலத்தின் மேல் குழாய் பதித்து நீர் கொண்டு செல்வதற்கும் குத்தகை எடுத்தாலோ அந்த குத்தகை நிர்ணயம் செய்வதை இந்த MVG யை பொறுத்து அமையும்.
4. MVG கள ஆய்வு செய்து சிரத்தை எடுத்து மெனக்கெட்டு அறிவியல் பூர்வமாக நிர்ணயித்தால் யாரும் பாதிக்கப்பட போவதில்லை ஆனால் “சும்மா அடிச்சி விடலாம்” என்று தமிழ்நாடு முழுவதும் 15% 20% என்று உயர்த்தி நிர்ணயித்தால் உண்மையிலேயே 15% 20% உயர்ந்து விட போவதில்லை நிலத்தின் விலை என்னவோ அது தான் வழிகாட்டி மதிப்பாக இருக்க வேண்டும் ஆனால் பதிவுத்துறை வழிகாட்டி மதிப்பை உயர்த்தி நிலத்தின் மேல் உயர்ந்து விட்டதை போல ஒரு மாயை தோற்றத்தை ஏற்படுத்தினால் அப்பாவி பொது மக்கள் பலர் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலர் உண்மைமயாகத்தான் நிலத்தின் விலை உயர்ந்து விட்டது அதனால் தான் வழிகாட்டி மதிப்பும் உயர்ந்து விட்டது என்று நம்ப ஆரம்பித்து நீர்க்குமிழி நம்பி முதலீடு செய்து தனது சேமிப்புகளை இழக்க ஆரம்பித்து விடுவார்கள் இதனால் பொது மக்கள் நஷ்டங்களை சந்திப்பதுடன் அவர்களின் கனவு இல்லம் கை கெட்டாத விலையில் உயர்ந்து விடுகிறது எதிர்காலத்தில் சாமானியர்களுக்கான அடக்க விலை வீடுகள் நிச்சம் உருவாக்க முடியாது என்பதை பதிவு துறை புரிந்துகொள்ள வேண்டும்.
(நாளை தொடரும்....
Comments
Post a Comment