பட்டா பெயர் மாற்றம் செய்வதில் ஏன் தாமதங்கள்? தெரிந்து கொள்ள வேண்டிய 15 காரணங்கள்….

ஒருவர் ஒரு இடத்தை கிரயம் பெற்று, அக்கிரைய பத்திரத்தை வைத்து தன் பெயருக்கு வருவாய் துறை ஆவணங்களில் மாற்றுவதே பட்டா பெயர் மாற்றம் ஆகும்.
கூட்டுப் பட்டாவில் பெயர் சேர்த்தல், உட்பிரிவு இல்லாத வகை ( Full Field ) பெயர் மாற்றம், உட்பிரிவு செய்ய வேண்டியவை என மூன்று வகையான பட்டா பெயர் மாற்றம் இருக்கிறது.
கூட்டுப் பட்டா கூடுதல் எளிமையானதாகவும், உட்பிரிவு இல்லாத ( Full Field ) பெயர் மாற்றம் சற்றே எளிமையாகவும் உட்பிரிவுடன் கூடிய பெயர் மாற்றம் கொஞ்சம் வேலை கூடியதாகவும் இருக்கும்.
1. கிரயம் வாங்கி இருக்கும் கிரைய பத்திரத்தில் புதிய, மற்றும் பழைய சர்வே எண் விபரங்கள், பட்டா எண், அளவுகள் போன்றவை பிழையாக இருந்தால்.
2. முன் பட்டாவில், பெயர், தந்தை பெயர், சர்வே எண், அளவுகளில் பிழைகள் இருந்தால்,
3.பட்டா மற்றும் நில வருவாய் ஆவணங்களில் இருக்கும் பெயருக்கும் தங்களுக்கு கிரயம் எழுதி கொடுத்து இருக்கும் நபரின் பெயருக்கு இடையில் இருக்க வேண்டிய லிங்க் ( இணைப்பு ஆவணங்கள் ) டாகுமெண்ட்கள் இல்லை என்றாலும்,
4 சர்வே பிழைகள், வருவாய் துறை ஆவணங்களில் இருந்தாலும்,
5. வாரிசு சான்று, இறப்பு சான்று தேவைப்படும் இடத்தில் அவைகள் இல்லை என்றாலும்,
6 நீதிமன்றத்தில் வழக்குகள்,உத்தரவுகள், தடையாணைகள் என எது நிலுவையில் இருந்தாலும்,
7. நில ஆக்கிரமிப்பு, நில அபகரிப்பு, சச்சரவுகள் என தொடர்ந்து சண்டை நடந்து வந்தாலும்,
8. உடன் பிறந்த சகோதரிகள் அல்லது வேறு நபர்கள் சொத்தில் பங்கு இருக்கிறது எனவே பட்டா பெயர் மாற்றம் செய்யக்கூடாது என ஆட்சேபனை கடிதம் எழுதி கொடுத்து இருந்தால்,
9. டபுள் டாகுமெண்ட் நிலங்கள், போலி ஆவணங்கள் நிலங்கள் இருக்கும் சொத்துக்கள்,
10 அரசு இலவசமாக கொடுத்த நிலங்களை அரசு விதிகள் மீறி செயல்படும் பொழுது,
11. பட்டா விண்ணபிப்பவர் பெயரில் சொத்து அவர் ஆளுகையிலும் கட்டுப்பாட்டிலும் இல்லாத பொழுது,
12. கிரைய பத்திரம், செட்டில்மெண்ட், பாகப்பிரிவினை போன்ற எந்தவித பத்திரம் எழுதாமல் மேற்படி சொத்தை அனுபவித்து வருபவர் பட்டா மனு செய்யும் போது,
13. முத்திரைத் தீர்வை சம்மந்தமாக 47(a) வில் பத்திரம் நிலுவையில் இருக்கும் பொது,
14. முப்பாட்டன் பெயரில் பட்டா இருந்து பல ஆண்டுகளாக அதன் பெயரை மாற்றாமல் இருந்து விட்டு இப்பொழுது பட்டா பெயர் மாற்றம் செய்யும் பொழுது,
15. E.C யில் ஏதாவது வில்லங்கள் புதியதாக காட்டுமானால;EC யில் வேறு ஏதாவது சிக்கல்கள் எழும்பினாலும்
குறிப்பு:
தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#கூட்டுப்பட்டா #கிரையபத்திரம் #செட்டில்மெண்ட் #பாகப்பிரிவினை #முத்திரைத்தீர்வை #வாரிசுசான்று #இறப்புசான்று #உட்பிரிவு #சர்வே #deed #settlement 3property #land #partition #certificate #survey

Comments
Post a Comment