வெற்றிகரமான முகவர்களாவது எப்படி ?….. (தொடர் -4)
சக ஊழியர்களை கையாளுவது எப்படி?…
1.நிறுவனத்தின் நோக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
2. குழுக்களாக செயல்படுவதை ஊக்குவித்தல்.
3. புதிய பணிகளை சவாலாக எடுத்துக் கொண்டு வெற்றிகரமாக முடிக்க பணியாளர்களுக்கு சுதந்திரம் மற்றும் முடிவு செய்ய அனுமதித்தல்.
4. புதுமை மற்றும் செயல்திறன் நிறுவன ரீதியான மாற்றங்கள் வெற்றிகரமாக செயல்படுத்த உதவுதல்.
5. மற்றவர்களுக்கு பொறுப்புகள் அளித்து அவர்களின் வேலை மற்றும் திறமைகளை வளர்த்தல்.
6. ஒரு நிறுவனத்தின் இலக்குகளை அடைய முன்னேற்றமான கருத்துக்களையும் உறுதியான செயல் மூலம் சிக்கல்களை அகற்றி தெளிவான செயல்திறன் அடைவதற்காக பொறுப்பை ஊழியர்களிடையே ஏற்படுத்துதல்.
7. ஊழியர்களிடையே செயல்திறமையை வளர்க்க உறுதியான தகவலை அளித்தல்.
8. உரையாடல் மூலம் வெளிப்படுத்தும் திறமைகளை வளப்படுத்துதல்.
9. வணிக சம்பந்தமான எழுத்துத் திறனை ஊழியர்களிடையே வெளிப்படுத்துதல்.
10.மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்க தூண்டிவிடுதல்.
11. ஒருவருக்கொருவர் விழிப்புணர்வு திறமை உணர்வுகள் மற்றும் கற்பனை வளத்தை வளர்த்தல்.
12.கருத்துக்கள், திட்டங்கள் மற்றும் தீர்வுகள் சம்மந்தமாக மற்றவர்களின் ஆதரவை பெறும் திறமையை வளர்த்தல்.
13.உறவுகள் மேம்படுத்துவதற்கான திறமைகளை வளர்த்தல்.
14. வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த வழிவகைகளை உருவாக்குதல்.
15.நிலைமையை அறியும் திறன் மற்றும் தகவல்களை திறமைமிக்க கேள்விகளை பயன்படுத்தி மற்றவர்களிடமிருந்து பெறுதல்.
16. பிரச்சனைகளை முறையான அணுகுமுறை மூலம் தீர்ப்பது.
17.தொலைநோக்கு சிந்தனை மட்டுமின்றி நிச்சயம் இல்லாமல் இருக்கும் தருணங்களில் தக்க நடவடிக்கை எடுப்பது.
18. பயனுள்ள முடிவுகளை எடுக்கும் திறன்.
19. நிறுவனத்தின் போட்டியாளர்களின் திறமையை அறிதல், அதை வெல்வதற்கான யுக்தியை அறிதல்.
20. தொழில்நுட்பம் சம்பந்தமான அறிவை மேலும் வளப்படுத்துதல்.
21.ஒரு பிரச்சனை வருவதற்கு முன்பே அது குறித்து ஆராய்ந்து அதனை வெல்லும் சூழ்நிலையை ஏற்படுத்துதல்.
22. இலாபகரமாக யுக்தியை கடைபிடித்தல்.
23. வரும் இடர்களை களைப்பதற்கான நடவடிக்கைகளை உருவாக்குதல்.
24. புதிய யுக்திகளை உருவாக்கி தொழில் திறமையை வளப்படத்துதல்.
25. வெற்றியை அடைவதற்கான அனைத்து யுக்திகளையும் கையாளுதல்.
26. வெற்றியை அடைவதற்கு தகவல்களை சேகரித்தல், விளக்கக்காட்சிகளை உருவாக்கி அதன்மூலம் நிறுவனத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துதல்.
27. சரியான முடிவுகளை கடுமையான நேரங்களில் எடுக்கும் திறனை வளர்த்தல்.
28.தன்னம்பிக்கையுடனும், சுயசிந்தனை மூலமும் எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி அடைய பாடுபடுதல்.
29.எந்த சூழ்நிலையிலும் மனம் தளராமல் எதிர்ப்புகளையும், பகைமைகளையும் வென்று அமைதியாக இருத்தல்
30.நிறுவனத்திற்கு நம்பிக்கை உள்ளவராக இருத்தல்
31. புதிய அல்லது மாறுபட்ட செயல்களை செய்ய நெகிழ்வுடன் கூடிய ஈடுபாட்டுடன் முடித்துவைத்தல்.
………………………………………………………………………………………………
சுற்றி இருக்கும் மனிதர்கள் நம்மை மதிக்க:-
2. எப்போதும் குறைவாகப் பேசுங்கள், நிறைய கற்றுக் கொள்வீர்கள்.
3. எல்லோருக்கும் தலைக்கணம் உண்டு அதற்காக பிறரை வெறுக்க வேண்டாம்.
4. ஒருவரிடம் ஒரு கேள்வி கேட்டால் அவர் அதற்கு என்ன பதில் கூறுகிறார்? என்பதை பொறுமையாக கவனியுங்கள். நீங்களே உடனே அதற்கு விடை கூற முற்படாதீர்கள்.
5. ஒருவர் உங்களிடம் உதவிக் கேட்கும் போது அந்த உதவி செய்வதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், அந்த உதவியை செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.
6. நீங்கள் செய்த தவறை ஒருவர் கண்டுபிடித்து சொன்னால் தயங்காமல் ஒப்புக்கொள்ளுங்கள்.
7.மற்றவர்களின் குழந்தைகளிடம் எப்போதும் அன்பாக இருங்கள். இதனால் எல்லோருக்கும் உங்களை பிடித்துப் போகும்.
8. உங்களுக்கு ஒரு விசயம் தெரியவில்லை எனில் தெரியாது என்று சொல்லி விடுங்கள்.
9.வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பிட வேண்டாம். பழகி முடிவு செய்யுங்கள்.
10. பிற மனிதர்கள் கூறுவதை உண்ணிப்பாக கவனிக்கவும்.
11. பிறர் நேரத்தை வீணாக்க வேண்டாம்.
12. அதே சமயம் பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்க அனுமதிக்க வேண்டாம்
13. ஒருவரை பாராட்டும் போது தாராளமாக பாராட்டுங்கள்.
15. உங்களின் வெற்றியை அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
முடிவு செய்தல், செய்த முடிவை மாற்றுதல், வேலையை முடித்தல்இவற்றில் (உங்களிடம் பணிபுரிவோருக்கு) முழுசுதந்திரம் கொடுங்கள்.
…………………………………………………………………..
இலக்கை நாம் எப்படிப்பட்டதாக அமைக்க வேண்டும்:-
Smart’ ஆக:
S – Specific குறிப்பிடும் படியானதாக (இந்த ஆண்டு கார் வங்க வேண்டும்)
M – Measurable அளவிடக்கூடியதாக (அது 5 லட்சம் மதிப்புள்ளதாக இருக்கும்)
A – Achievable சாத்தியப்படக் கூடியதாக (என் தகுதிக்கு மீறியதாக இல்லாமல் இருப்பது
R – Realistic நடைமுறைக்கு ஏற்றதாக (நம்மைச் சுற்றி உள்ளவர்கள் அங்கீகரிக்கும் அளவு படைத்ததாக)
T – Time Bound கால எல்லைக்கு உட்பட்டதாக (ஒரு வருடத்தில் வாங்கிவிட வேண்டும்)
இத்தகைய “Smart” – ஆன இலக்கை அமைத்துக் கொண்டு அதற்கு மேலும் சக்தியூட்டப்படும் போது அதை அடைவது எளிதாகின்றது. எப்படி அதை சக்தி ஊட்டுவது என்றால், அதற்கு 5-ம் தேவைப்படுகிறது.
1. Direction தன்னைச் சுற்றி உள்ளவர்களுடன் இலக்கை பகிர்வதால், அவர்கள் அதற்கான வழியைக் காட்டுகின்றார்கள்.
2. Dedication முழு ஈடுபாட்டுடனும், கண்ணும் கருத்துமாக காரியம் ஆற்றுவது
3. Determination என்னால் முடியும், எந்தத் தடையையும் கடந்து சாதிக்க முடியும் என்கின்ற மன உறுதி
4. Discipline ஒழுங்குமுறை, முன்னுக்கிப்பின் முரண்படாத ஒன்றன் பின் ஒன்று என்கின்ற கட்டுப்பாடு
5. Deadline காலக்கெடு, இந்த தேதி, இன்ன நேரம் இதைச் சாதித்துவிட வேண்டும் என்கின்ற திட்டம்.
அதை மூன்று விதமாக பிரிக்க வேண்டும். அவை நீண்ட கால இலக்கு, இடைக்கால இலக்கு, உடனடி இலக்கு
நீண்ட கால இலக்கு என்பது மூன்று முதல் பத்து ஆண்டு கொண்டது.
இடைக்கால இலக்கு என்பது நீண்ட கால இலக்கை நோக்கி எப்படி முன்னேறிச் சென்று கொண்டு இருக்கின்றோம் என்பதை மையப்படுத்தியது. இங்கு தான் நாம் சரியாக செயல்பட வேண்டும். இலக்கில் ஏதாவது காலதாமதம் ஏற்பட்டால் உடனே அதற்கான மாற்று வழியைப் பயன்படுத்த வேண்டும். உடனடி இலக்கு என்பது ஒவ்வொரு நாளும், நாம் மேற்கொள்ளும் முயற்சி, இப்படி மிகப்பெரிய இலக்கை சிறுசிறு பகுதியாகப் பிரித்து, ஒன்றன் பின் ஒன்றாக எட்டுவது எளிதாகி விடுகின்றது.
……………………………………………………………………
இலக்கை எட்டக்கூடிய எளிய வழிமுறைகள்:-
1. இலக்கை பெரிய எழுத்துக்களில் எழுதி நம் கண் முன்னால் எப்போதும் படும்படியாக வைத்து, அதை திரும்பத் திரும்பப் படித்து உள்வாங்கிக் கொள்வது.
2. நம்மை சுற்றி உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லிவிடுவது, இதில் இரண்டு நிகழ்வுகள் நடக்கும். ஒன்று நமக்காக அவர்கள் உதவுவார்கள். மற்றொன்று அவர்களிடம் சொல்லிவிட்டோமே என்று அதற்காக நாம் இயங்குவது.
3. இலக்கை எட்டிவிட்டது போலவும், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியை சந்தோசத்தை அனுபவிப்பது போலவும் அடிக்கடி மனக்காட்சி காண்பது.
4.ஒவ்வொரு நாளும், வழக்கத்தைவிட கூடுதலாக, நம் இலக்குக்காக 0.3% கூடுதலாக உழைக்க முடிந்தால், ஒராண்டில் 100% நம் இலக்குக்காக நாம் கூடுதலாக உழைத்துவிடுவோம்
…………………………………………………………………………………..
அலுவலகத்தில் எப்படிப் பழகுவது?
1.நீங்கள் எப்படி பழகுகிறீகளோ அப்படித்தான் அதன் விளைவுகள்
அமையும். வார்த்தையைப் போலவே நடத்தையும் விளைவுகளை ஏற்படுத்தும்.
2.வம்பளப்புகளை, தற்பெருமை பேசவதைத் தவிர்க்க வேண்டும்
3.அடுத்தவர்களிடம் மனம் நெகிழ்ந்த நிலையில் இரகசியங்களைக் கொட்டிவிடக்கூடாது.
4. தன்னுடைய சக அலுவலர்களை மட்டுமல்ல, கடைநிலை ஊழியர்களைக்கூட மரியாதையாக நடத்த வேண்டும்.
5.மற்றவர்கள் முகஞ்சுளிக்கிற மாதிரி முகச்சுளிப்புகளோ, அங்க அசைவுகளே கூடாது.
6.வார்த்தைகளை அளவோடு, விளைவறிந்து கையாள வேண்டும்.
7. அடுத்தவருடன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து தன்னைத் தாழ்த்திக்கொள்வது கூடாது.
8. அடுத்தவரை இழிவாய் கருதிவிடக்கூடாது, அவருடைய உயர்வு கண்டு பொறாமைப்படுவதும் தவறு.
9. விமர்சனங்களைப் பொறுத்தவரை வாயையும், காதையும் இறுக மூடிக்கொண்டுவிட வேண்டும்.
10. அன்றே முடிக்கக்கூடிய வேலையை அடுத்த நாளைக்குத் தள்ளிப் போடக்கூடாது.
11. நீங்கள் பெண்ணாக இருந்தால் பளபளஉடைகள் அணிந்து, நடமாடும் நகைக்கடையாகி அடுத்தவருக்கு எரிச்சல் ஊட்டக்கூடாது.
12. வீட்டுக் கவலைகளை அலுவலகத்துக்கோ, அலுவலகக் கவலைகளை வேலைகளை) வீட்டுக்கோ சுமந்து செல்லக்கூடாது.
13. நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பதன் மூலம், அடுத்தவர் மகிழ்ச்சிக்கும் உதவ முடியும்.
…………………………………………………………………………………….
வேகமாக பழகுவது எப்படி?
1.உங்களை ரெஃப்ரஷ் செய்து கொள்ள வாரத்தில் ஒரு நாள் உங்கள் உடல் இயந்திரத்துக்கு முழு விடுமுறை அளியுங்கள்.
2.பரபரப்பான நேரங்களில் உங்கள் மூளையைக் காயவிடாமல், அடுத்த வேலைக்கான முயற்சியில் பயணிக்கத் தொடங்குங்கள்
3.டார்க்கெட் என்ற வார்த்தையை சீரியஸான விசயமாக எடுத்துக் கொள்ளாமல், ஸ்போர்டிவ்வாக அணுகுங்கள்.
4.இன்று முடியாத ஒரு வேலையை, நாளை முதல் வேலையாகக் கொண்டு முடியுங்கள்.
5.அவசரத்துக்கும் வேகத்துக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து செயல்படுங்கள்.
……………………………………………………………………………
பிறருடன் பேசுவது எப்படி?
பிறருடன் பேசும் போது, கேட்பவரால் சகித்துக் கொள்ள முடியாதவாறு பேசுபவர் சிலர், இப்படி பேசுவதில் முக்கியமாக ஆறு வகைகள் உள்ளன.
1.இஷ்டமில்லாமல் பேசுபவர், தனக்கே இஷ்டமில்லாமல் பேசுவது ஒருவகை. இதை எதிராளிக்கும் கேட்க இஷ்டம் இருக்காது.
2.இரைந்து உணர்ச்சி வசப்பட்டுப் பேசுபவர், இதனால் கேட்பவரின் கவனம் பேசுபவரின் உணர்ச்சியில்தான் இருக்குமே தவிர, என்ன கூறுகிறார் என்பதில் இருக்காது.
3.முணுமுணுப்பவர், எத்தனை கவனமாக கவனித்தாலும், இவர் என்ன சொல்கிறார் என்றே புரியாது.
4.மூக்கால் பேசுபவர் இவர் பேசுவதை கேட்கும் போது, இவர் ஏன் உடனடியாக ஒரு டாக்டரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்க தோன்றும்.
5.வேகமாக பேசுபவர் மூச்சு விடாமல் சிலர் வேகமாக பேசும்போது, சில சமயம் என்ன மொழி பேசுகிறார் என்றே புரியாது.
6.தயங்கி, தயங்கி பேசுபவர் என்ன பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்றே புரியாமல் தயங்கி, தயங்கி நீண்ட நேரம் எடுத்து, சில வார்தைகளைப் பேசுபவர். இவைகள் தவிர்க்கப்பட வேண்டும்.
குறிப்பு:
இப்படிக்கு
சா.மு.பரஞ்சோதிபாண்டியன்
தொடர்புக்கு : 9841665836
( குறிப்பு ):சொத்து மற்றும் நிலம் சம்மந்தமான சிக்கல்களுக்கு தீர்வுக்கான ஆலோசனைகளை பெற அணுகலாம். தொடர்புக்கு : 9841665836 (தொலைபேசியில் முன்பதிவு அவசியம் )
இதோ உங்களுக்காக சா.மு.பரஞ்ஜோதி பாண்டியன் அவர்கள் கைவண்ணத்தில் எழுதப்பட்ட "நிலம் உங்கள் எதிர்காலம்" புத்தகம் இப்பொழுது அமேசானிலும் கிடைக்கும். https://www.amazon.in/dp/B07RNQTLD3
#Specific #Deadline #Dedication #Realistic #Design #Office #Determination #முகவர்
Comments
Post a Comment