முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 7-வது பாகம்)
2. முரண்பாடான சந்தை மதிப்பு வழிகாட்டியால் (MVG) அரசின் பிற துறைகளுக்கு ஏற்படும் இழப்புகள்!
பதிவுத்துறையும்! மதிப்பீட்டுக் குழுவும் MVG யை நேர்மையாகவும், மெனக்கெட்டும் களப்பணி செய்து உருவாக்காமல் சும்மா இதனை 15%, 20% சதவீதம் கூட்டி வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தால் தமிழ்நாடு அரசிற்கு பெரும் நஷ்டம் ஏற்படும்! அது எப்படி நஷ்டம் ஏற்படும்? பதிவுத்துறைக்கு அதன் மூலம் வரி வருமானம் தானே அதிகமாக வரும் என்று நீங்கள் நினைக்கலாம், அது உண்மைதான் பதிவுத்துறைக்கு அதிக வருமானம் வரும்! அதே நேரத்தில் நில நிர்வாக துறைக்கு பெரும் நஷ்டம் வரும், அது எப்படி என்றால் நில நிர்வாக துறை தான் வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், நெடுஞ்சாலை, சிப்காட், SEZ, சிட்கோ, ஏர்போர்ட், ரயில்வே உள்ளிட்ட பல துறைகளின் அபிவிருத்தி வளர்ச்சிக்கு தேவையான நிலங்களை நில ஆர்ஜிதம் செய்து கொடுக்கிறது. அப்படி நில ஆர்ஜிதம் செய்யும்பொழுது அதற்கு நிலத்தை இழந்த பொதுமக்களுக்கு நஷ்ட ஈடாக தர வேண்டிய தொகை இந்த MVG வைத்து தான் முடிவு எடுப்பார்கள். இப்படி MVG அதிகமாக இருந்ததாலே நில ஆர்ஜிதம் செய்யாமல் விட்ட நிலங்கள் ஏராளம் அதே போல் ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்ய 4(1) நோட்டீஸ் கொடுத்து முன்மொழிவு செய்த நிலங்களுக்கு கூட தற்போது MVG அதிகமாகி விட்டதால் அந்த நில ஆர்ஜிதங்களை நில நிர்வாக துறை கைவிட்டுவிட்டது. அரசு எப்படி இருந்தாலும், என்ன MVG உயர்ந்தாலும் பரவாயில்லை என்று நிலத்தை ஆர்ஜிதம் செய்து தான் ஆக வேண்டும் என்று முடிவு எடுத்தல் பெருந்தொகை மக்களுக்கு நஷ்ட ஈடாக கொடுத்து தான் நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டும் .
இப்படி அரசுக்கு ஒரு புறம் MVG உயர்த்துவதால் பதிவுத்துறைக்கு லாபம் வந்த மாதிரி இருக்கும் அதெல்லாம் நில ஆர்ஜிதம் செய்யும்பொழுது அந்த லாபம் எல்லாம் விரயம் ஆகிவிடும்.
உதாரணத்திற்கு கிருஷ்ணகிரி பதிவு மாவட்டம் வேப்பன பள்ளி சார்பதிவாளர் அலுவலகம் குருபராப்பள்ளி கிராமம் சர்வே எண் 16/1B2A, 16/1B2B ஆகியவற்றுக்கு 31.03 .2012 ஆம் தேதியில் ஹெக்டர்ஸ் 30 லட்சத்து முப்பத்து மூன்றாயிரம் இருந்தது, ஆனால் 29.05.2015 இல் ஹெக்டேர் ஒரு கோடியே இருபத்து மூன்று லட்சம் இருக்கிறது என்று நில நிர்வாக ஆணையர் விழி பிதுங்கி பதிவுத்துறைக்கு கடிதம் எழுதுகிறார்.

(நாளை தொடரும்....


இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…