முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 8-வது பாகம்)பதிவுத்துறை அலுவலகம் (சுற்றறிக்கை எண் : 37375 / எல் 1 / 2018 நாள் : 10.10.2016) இது போல் தமிழ் நாடு முழுவதும் பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கிறது.
மேலும் அரசாணை (நிலை) எண் 136 வருவாய் நி.மு 5 (2) துறை நாள் 25.04.2017 என்ற மேலும் வருவாய் துறை அரசாணையின் படி அரசு, அரசின் பிற துறைகளான வீட்டு வசதி வாரியம், குடி நீர் வாரியம், குடிசை மாற்று வாரியம், பொது பணி துறை போன்ற துறைகளுக்கு வணிகப்பயன்பாட்டிற்காக புறம்போக்கு நிலங்களை வருவாய் நிலை ஆணை எண் 24 ன் படி நில உரிமை மாற்றம் (ALIENATION) செய்யும் பொழுது அரசாணை நிலை எண் 136 வருவாய் துறை நி.மு 5 (2) நாள் 25.04.2017 அதன் படி சந்தை மதிப்பு வழிகாட்டியின் படி கிரய தொகை வசூலிக்க வேண்டும் என்று சொல்லிருக்கிறது அதன் படி அரசின்புறம் போக்கு நிலங்களை அரசின் பிற துறைகள் வாங்கும் பட்சத்தில் இந்த MVG யை வைத்து தான் விலை நிர்ணயம் செய்ய வேண்டிருக்கிறது. எனவே MVG முரண்பாடாக இருந்தால் பிற அரசு நிறுவனங்களும் பாதிக்கப்படும் செயற்கையாக உயர்த்தப்பட்ட அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும்.
அதே போல் அரசு புறம்போக்கு நிலங்களை பிற அரசு துறைகள் வருவாய் நிலை ஆணை எண் 24A யின் படி குத்தகை கொடுக்க விரும்பினால் MVG யின் அடிப்படையில் தான் குத்தகை கட்டணம், தல வரி, தல மேல் வரி எல்லாம் கொடுக்க வேண்டி இருக்கும் இதன் படி அதிக குத்தகை தொகையை அரசே கொடுக்க வேண்டி வரும். இப்படி MVG யை நிர்ணயிக்கிறேன் என்று செயற்கையாக உயர்த்தினால் அரசின் பிற துறைகள் எல்லாம் நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
(நாளை தொடரும்....
Comments
Post a Comment