முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 13-வது பாகம்)
இது இல்லாமல் 47(A) சம்மந்தமாக உயர் நீதி மன்றம் போய் அதுவும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு மனுக்கள் தாக்கல் செய்து போரடி போராடி பத்திரங்களை திரும்ப பெற வேண்டி இருக்கிறது. ஒரு சம்சாரி ஒரு சொத்தை வாங்கினார், அதன் MVG முரண்பாடக இருக்கிறது அதனை 47(A)யின் முறையீடு செய்கிறார் அதுவும் ஆகவில்லை என்றால் 47A(3) யில் மேல் முறையீடு செய்கிறார் அதுவும் ஆகவில்லை என்றால், உயர் நீதி மன்றம் போகிறார் அதுவும் ஆகவில்லை என்றால் உச்ச நீதி மன்றம் போகிறார் ஆக இஸ்ரேல் பாலஸ்தீனியர்கள் போராட்டம் போல போராடினால் தான் பத்திர ஆபிஸில் இருந்து பத்திரம் திரும்ப பெற முடியும் என்ற நிலை இருப்பது நல்ல நிர்வாகமா?
மேலே சொன்ன நிகழ்வு எல்லாம், கொஞ்சம் விவரம் தெரிந்த சம்சாரிகள் செய்து கொண்டு இருக்கிறார்கள் சில சாது பிராணி சம்சாரிகள் எல்லாம் என்ன கட்டணம் விதிக்கிரீர்களோ அதனையே கட்டி விட்டு போகிறோம் என்று கட்டிவிட்டு பதிவு துறையை சபித்துக் கொண்டே செல்கிறார்கள் ஆக பத்திரம் பதிய வரும் சம்சாரிக்கு பேதி வந்து கழிய விடாமல் பத்திரத்தை பதிய கூடாது அல்லது பத்திரத்தை திரும்ப பெற கூடாது என்று அச்சுறுத்தும் ஸ்தாபனமாகவே பதிவுத்துறை இருக்கிறது
இப்படியெல்லாம் பத்திரங்களை நிலுவையில் வைத்து அது சேர்ந்து போய் சேர்ந்து போய் அதிக அளவில் தேங்கி நின்றும், பதிவு சுழற்சியும் கெடுத்து, பத்திரம் போட்ட மக்களையும் கதறவிட்டு கதறிய மக்கள் பத்திரங்களை பதிவு துறையே வைத்து கொள்ளட்டும் என்று வெறுத்து போய் பத்திரம் திரும்ப பெரும் முயற்சியை விட்டு விடுவார்கள் இந்த நிலையில் பதிவு துறைக்கு நீண்டகாலமாக முத்திரை கட்டணம் நிலுவையில் இருக்கிறது கொஞ்சம் பணமாக வந்தாலே நல்லது என்று “CASH FLOW” உணரும் தருவாயில் சமாதனம் திட்டம் என்று முத்திரை கட்டணங்களை வசூல் செய்வார்கள்
நாளை தொடரும்....


இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…