முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

 முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!

(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 12-வது பாகம்)
என்ன சகோதரா? பதிவு சுழற்சி நிறுத்துகிறார்கள் என்று எழுதி இருக்கிறீரே! அதற்கு உதாரணம் சொல்ல முடியுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது இதோ
இப்படி 2019 ஆம் ஆண்டில் இவ்வளவு பத்திரங்கள் 47(A)யின் கீழ் நிலுவையில் இருக்கிறது இந்த பத்திரங்கள் எல்லாம் MVG யில் உள்ள முரண்பாடுகளில் தான் நடந்து இருக்கிறது இதற்கு வேறு காரணம் எதுவும் இல்லை.
இதுவரை 47(A) பதிவு சுழற்சி பாதிப்பு பற்றி பார்த்தோம் இந்த 47(A)யில் சார்பதிவாளர்கள் செய்கின்ற கோளாறுகள் அதிகம் 2012 ஆம் ஆண்டு வகுக்கப்பட்ட MVG சட்ட அந்தஸ்து உடையது 2017 யில் 33% குறைத்தார்கள் அப்படி குறைக்கப்பட்ட பின்பு பின்பற்ற வேண்டிய MVG பின்பற்றி சம்சாரிகள் பத்திரம் தாக்கல் செய்தாலும், சார்பதிவாளர்கள் சட்ட ரீதியான MVGயை விட அதிக மதிப்பு நிர்ணயிக்க வேண்டும் என்று உரிய காரணங்கள் இல்லாமல் 47(A) ற்கு அவர்களே அனுப்புகிறார்கள் இப்படி சார்பதிவாளர் சட்ட அந்தஸ்து பெற்ற MVG யை மாற்ற காரணம் இல்லாமல் பரிந்துரைப்பதால் பத்திரம் திரும்ப பெறாமல் சம்சாரிகள் தவிக்கிறார்கள், இறுதியில் நீதி மன்றம் போய் சார்பதிவாளர்கள் செய்கை தவறு என்று மூக்குடைக்கப்பட்டு பத்திரங்கள் திரும்ப பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது
47(A) யின் கீழான பத்திரங்களை விசாரிக்கின்ற மாவட்ட வருவாய் அலுவலர் முத்திரை தனி துணை ஆட்சியர் (முத்திரை) ஆகியோர்கள் சார்பதிவாளர் கொடுக்கின்ற பரிந்துரை மட்டுமே ஏற்றுக் கொள்கிறார்களே தவிர பத்திரம் பதிந்த சம்சாரிகள் கொடுக்கும் அறிக்கையினை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகிறார்கள் இதனால் பாதிக்கப்பட்ட சம்சாரிகள் 47A(3) யின் மேல் முறையீடு செய்கிறார்கள் ஒரு மேல் முறையீட்டிலேயே தவித்து போகிறார்கள் அதன்பின் 2-வது மேல் முறையீடு செய்து கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கி நிற்கின்றார்கள் சம்சாரிகள்
(நாளை தொடரும்....


இப்படிக்கு,
சா.மு. பரஞ்சோதி பாண்டியன்,
நிறுவனர் நிலம் உங்கள் எதிர்காலம் மக்கள் நல அறக்கட்டளை.
புதுச்சேரி மாநில ஒருங்கிணைப்பாளர்-FAIRA
9841665836
www.paranjothipandian.com

Comments

Popular posts from this blog

பூமி தான இயக்க நிலங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 30 உண்மைகள்!!!

நிலவியல் சாலை,நிலவியல் ஓடை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 9 செய்திகள்

தெரிந்து கொள்ள வேண்டிய பட்டாவிற்கு துணையான 4 ஆவணங்கள்…