முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
முரண்பாடில்லாத சந்தை மதிப்பு வழிகாட்டியே சாமானியர்களின் இலட்சியம்!
(முகநூல் தொடர் கட்டுரை 26 பாகத்தில் 9-வது பாகம்)3. பதிவுத்துறையின் MVG யால் பதிவுத்துறைக்கு ஏற்படும் இழப்புகள்
பதிவுத்துறை நிர்ணயிக்கும் MVG யால் பதிவுத்துறைக்கே இழப்பு என்பதை கேட்கின்ற சாமானியனுக்கு விந்தையாகத் தான் இருக்கும். பாம்பு தன் வாலையே இன்னொரு பாம்பு என்று நினைத்து விழுங்கும் என்று கதைகளில் படித்திருக்கிறேன் அதே போல பதிவுத்துறை தனது லாபத்தை தானே உண்ணுகின்ற கதை தான் இனி நான் சொல்லப்போவது
பதிவு துறையில் 47(A) என்று நடைமுறை ஒன்று இருக்கிறது அப்படி என்றால் ஒரு சம்சாரி தனது சொத்தை பதிய போகும் பொழுது சந்தை மதிப்பு வழிகாட்டியை விட அடிமனையின் மதிப்பு குறைவாக குறிப்பிட்டு ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்படுவது ஆகும். இப்படி ஒரு சம்சாரி தாக்கல் செய்தால் ஆவணப்பதிவு நாளன்றே மேற்படி 47A(1) இல் நடவடிக்கை உட்படுத்தப்பட்டது என்று குறிப்பு சேர்த்து பத்திரங்களை ஒளி வருடல் செய்ய வேண்டும் அதன் பிறகு 7 நாட்களுக்குள் 47A(1) நடவடிக்கைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் முத்திரை, துணை ஆட்சியர் முத்திரை என்ற சட்ட அதிகாரிக்கு அனுப்பப்பட்டு அங்கு முத்திரை கட்டணம் கூடுதலாகவோ/குறைவாகவோ கட்ட சொல்லி பத்திரத்தை திருப்பி அனுப்புவார்கள்.
இந்த 47(A) நடவடிக்கையால் தான் பதிவு துறை பல்வேறு குழப்பங்களையும், வருவாய் இழப்புகளையும், வருவாய் கசிவுகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவை ஒவ்வொன்றாக கீழே பட்டியலிடுகிறேன்.
(நாளை தொடரும்....
Comments
Post a Comment